Boney M. குழுவின் Rasputin பாட்டு இப்போ viral ஆகுது போல... Grigori Rasputin னின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு போலவே இதை Frank Farian எழுதி இருக்கிறார். Rasputin யார்? முதலில் rasputin என்றால் என்ன? ரஷ்ய மொழியில் Rasputin ஒரு கெட்ட வார்த்தை.
Grigory Yefimovich Novykh என்னும் மனிதர் பெண்களிடம் கேவலமாக நடந்து கொண்டதை கண்டு (“Russia’s greatest love machine”) ஊரார் அவருக்கு வைத்த பெயர் தான் Rasputin. தமிழில் பெண்களை திட்ட பயன்படுத்தும் இழிவான சொல்லுக்கு நிகரான ஆண் பால் சொல் இது.
1978 Red Square concert இல் இந்த பாடலை பாட Soviet Union தடை விதித்தது. தடுக்கப்படும் போதும் கண்டிக்கப்படும் போதும் மீறப்படும் என்னும் உலக நியதி படி பாடல் வேகமாக 70 களில் பரவியது.
சுவாரசியமான செய்தி, Boney M குழுவின் மிகப்பெரிய hit number, Rasputin இந்த குழுவின் frontman Bobby Farrell, Boney M குழு பிரிந்த பிறகு தனியாக perform செய்து வந்திருக்கிறார்.
Bobby Farrell தன்னுடைய 61 வயதில் St. Petersburg இல் perform செய்து முடித்த பின் ஹோட்டல் அறையில் இதய கோளாறு காரணமாக இறந்துவிட்டார். அவர் இறந்த தேதி 30 December 2010. Rasputin இறந்த தேதி 30 December 1916! அதே St. Petersburg!!!
கொசுறு:
Pritam Chakraborty, Agent Vinod படத்தில் Rasputin பாடலின் உரிமையை பெற்று
I Will Do The Talking Tonight என்ற பாடலை போட்டு இருக்கிறார்.
சூரரை போற்று படமும் மயக்கம் என்ன படம் போல தான். ஆனால் அதில் வரும் மாறா, தனது தோல்வியின் இயலாமையை மனைவியின் மேல் திணிப்பது இல்லை. எனது கனவு புஸ்வானமா போய்டுச்சு என்று மனைவி காசில் குடித்து அவளை உதைப்பதில்லை.
மாறாக, ஆற்றாமை கோவமாக வெளிப்படும் தருணங்களில் பொம்மி அவனது தப்பை சுட்டி காட்டுகிறாள். அவனும் அவளிடம் உளமார மன்னிப்பு கேட்கிறான். மனைவியின் உதவிக்கு நன்றி சொல்கிறான். பதிலுக்கு அவளது கனவுகளுக்கு உறுதுணையாக நிற்கின்றான். இது ஒரு ஆரோக்கியமான உறவு.
ஆனால், எனது கனவு மட்டுமே முக்கியம். அது போச்சுன்னா நான் சோகத்தில் தத்தளிப்பேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். சுற்றி இருப்பவர்கள் அதை பொறுத்து போகவேண்டும். எனது செயல் மற்றவர்களை எப்படி எல்லாம் காயப்படுத்துகிறது என்பதை acknowledge கூட செய்யமாட்டேன்.
charisma அப்படின்னா என்ன? எப்படி இருக்கும் என்றெல்லாம் விளக்கம் கொடுப்பதை விடவும் சுலபமானது பார்த்ததும் புரிந்துகொள்வது. ஒரு சிலரை பார்த்தாலே வசீகரமாக இருப்பார்கள். அழகென்பது வேறு. வசீகரம் என்பது அவர்களது நடை, உடை, பேச்சு, பார்வை, போன்றவற்றால் பிறரை கவர்வது.
அதில் ஆளுமை குணம் கலக்கும்போது அவர்களை நாம் தலைவர்களாக ஏற்றுக்கொள்கிறோம். எப்படி charisma வை வளர்த்து கொள்ளலாம்? என்றெல்லாம் கிளாஸ் எடுக்க முடியாது. அது இயல்பிலேயே இருக்க வேண்டிய ஒன்று.
இந்த charisma என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் Paul the Apostle.
Roman Charity என்னும் கதை Valerius Maximus என்பவரால் எழுதப்பட்டது. ரோமர்களின் வாழ்வியலை பற்றிய பல நாட்டுப்புற கதைகளை எழுதிய இவர் முதலாம் நூற்றாண்டை சார்ந்த ஒரு வரலாற்று ஆசிரியர். இந்த கதையில் ஏழ்மையில் இருக்கும் மனிதன் Cimon ரொட்டித்துண்டு ஒன்றை திருடுகிறான்.
அதனால் சிறையில் உணவில்லாமல் பசியில் இறக்கும் தண்டனை வழங்கப்படுகிறது. Cimon ஐ பார்க்க அவளது மகள் Pero க்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. Cimon ஐ பார்க்க செல்லும் முன் அவளை நன்கு சோதித்த பிறகே காவலர்கள் உள்ளே அனுப்புவார்கள் அதனால் உணவு எதுவும் எடுத்து செல்ல முடியவில்லை..
Pero பட்டினியில் கிடக்கும் அப்பாவை காணச் சகிக்காமல் தனது பாலை அவருக்கு தருகிறாள்.
இதே கதையை கொஞ்சம் மாற்றி Pliny the Elder மகள் அம்மாவிற்க்கு பால் தருவது போல அமைத்திருக்கிறார். Gaius Julius Hyginus என்பவரும் எழுதி இருக்கிறார்.
toxic என்றால் நீங்கள் மோசமான மனிதர் என்று பொருள் அல்ல. நல்லவர்களும் சிலருக்கு toxic ஆக இருக்க கூடும். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவிக்கு toxic. அதனால் பிரகாஷ் ராஜ் மோசமான தந்தை, கெட்டவர் என்று பொருள் இல்லை. 1/12
ஒருவர் நம்மை emotionally exhaust ஆக வைக்கிறார் என்றால் அவர் நமக்கு toxic. நீங்கள் நல்லவராக இருக்கலாம், தியாகியாக இருக்கலாம், ஆனால் உங்கள் அதீத தியாகமே சிலருக்கு மனப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். நாம் எல்லாருக்கும் எப்போதும் நல்லவராக இருக்க முடியாது அதை புரிந்து கொள்ளுதல் அவசியம். 2
எல்லாருமே அறிந்தோ அறியாமலோ அவ்வப்போது சில negative behavior களை வெளிப்படுத்த தான் செய்வார்கள். பலர் தங்களை பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள சில toxic behavior களை coping mechanism ஆக வளர்த்து கொள்வார்கள்.
3/12
பிரெஞ்சு புரட்சி வரலாற்றில் முக்கியமான ஒன்று பல காரணங்களுக்கு. அதில் ஒன்று இடது சாரி மற்றும் வலது சாரி என்னும் சொல் பயன்பாடு வழக்கிற்கு வந்த காரணமும் அடங்கும். 1/9
இந்த பிரெஞ்சு புரட்சியில் தான் மிக பிரபலமான ‘Liberté! Egalité! Fraternité!’ சுதந்திரம்! சமத்துவம்! சகோதரத்துவம்! என்னும் கோஷம் முன்வைக்கப்பட்டது. அரச ஆட்சி, நிலப்பிரபுத்துவம், அரசர்களின் ஆட்சியில் கத்தோலிக்க குருமார்களின் பங்கு இதற்கெல்லாம் எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். 2
காலம் காலமாக பின்பற்றி வரும் பழக்க வழக்கம் கலாச்சாரம் என்னும் பெயரில் சிலர் மட்டுமே ஆதாயம் அடைந்து வருவதையும் பெரும்பாலான சாதாரண மக்கள் வறுமையிலும் துன்பத்திலும் உழல்வதை எதிர்த்து அந்த பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும் என்று போராட்டம் செய்தனர். 3/9
Bucephalus. Philoneicus the Thessalian என்னும் குதிரை விறபனையாளர் Alexander அப்பாவான King Philip II விடம் Bucephalus குதிரையை பரிசாக கொண்டு வந்தாராம். நல்ல உயரமாக, வலிமையாக, அழகாக, கருப்பாக சில இடங்களில் மட்டும் வெள்ளை திட்டுகளோடு இருந்த குதிரை
யாருக்கும் அடங்காமல் முரண்டு பிடித்ததாம். கடுப்பான ராஜா குதிரையை கொண்டு செல்லும்படி கட்டளையிட்டாராம். அப்போ அங்க வந்த இளம்வயது Alexander, Bucephalus நிழலை கண்டு பயப்படுகிறது எனப் புரிந்துகொண்டு சூரியனை மறைத்தவாறு அதன் முன்னே நின்று தடவி கொடுத்தாராம்.
அமைதியான Bucephalus மேல் ஏறி அமர்ந்தாராம். அதை கண்டு ஊரே ஆச்சரியப்பட, 'அடே மகனே உனக்கு கீழ் Macedonia (Alexander நாடு) மட்டுமல்ல இந்த உலகமே வரப்போகிறது' என உச்சி முகர்ந்தாராம்.
அதன்பின்னர் 30 வருடங்கள் Bucephalus, Alexander இன் எல்லா போர் வெற்றிகளிலும் பங்கு பெற்று இருக்கிறது.