அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பானது.
ராகு கால துர்க்கை பூஜையை கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதுதான் நல்லது.
ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம்.
கோவிலுக்கு போக இயலாதவர்கள் வீட்டில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்.
துர்க்கைக்கு பிடித்த பூக்கள்:
துர்க்கைக்கு அரளி பூ பிடித்தமானது.
ராகு கால பூஜைக்கு பூஜைக்கு செவ்வரளி மற்றும் மஞ்சள் நிறப் பூக்களைப் பயன்படுத்துங்கள்.
தெரிந்த துர்க்கை துதிகளைச் சொல்லுங்கள்.
துர்க்கை போற்றியினை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
தூப, தீபம் காட்சி வணங்க வேண்டும்.
தயிர் சாதம், பால் பாயாசம் என நம்மால் இயன்ற நிவேதனங்களோடு, எலுமிச்சை சாரு தயாரித்து அதையும் நைவேத்தியம் செய்யுங்கள்.
பூஜை முடிந்த பின்னர் யாரேனும் பெண்மணிக்கு பிரசாதங்களோடு இயன்ற மங்கள பொருட்களைக் கொடுத்து, நீங்களும் பிரசாதம் சாப்பிடுங்கள்.
ராகு காலம் முடிந்த பின்னர், பூஜித்த விளக்கு அமைப்பினை சற்று வடக்காக நகர்த்தி வைத்து பூஜையை நிறைவு செய்யுங்கள்.
கடன் பிரச்சினை தீரும்:
வாரத்தில் அனைத்து நாட்களுமே ராகு காலத்தில் தேவி வழிபாடு செய்வது சிறந்த பலனைத் தரும்.
இருப்பினும் குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர பிரத்தியேக தினங்களில் வணங்குவது சிறப்பு என்பது ஐதீகம்.
அதன்படி செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கினால், திருமணத் தடை, முன்னேற்றத் தடை, கடன் பிரச்சினைகள், சகோதரர்களிடையே ஒற்றுமையின்மை, வீடு, மனை தொடர்பான பிரச்சினைகள், விபத்து பாதிப்புகள் ஆகியவை நீங்கச் செய்யும்.
பொன் பொருள் சேர்க்கை:
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும்.
தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும்.
வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் செய்யும் வழிபாட்டினால், தீராத நோய்களின் தாக்கம் குறையும். எதிரிகள் பயம் நீங்கும். பெற்றோருடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.
எலுமிச்சை விளக்கு:
ராகு கால பூஜையில் எலுமிச்சை விளக்கேற்றுவது பற்றி புராணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், காலம் காலமாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.
விளக்கேற்றுவதன் சரியான முறையை பார்க்கலாம்.
ராகுகால துர்க்கை பூஜையை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம்.
அப்போது எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பிழிந்து அதன் மூடியைத் திருப்பி, எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றி அம்மன் முன் வைத்து வணங்குவார்கள்.
ராகு கால நேரம் தொடங்கிய பிறகே எலுமிச்சைப் பழத்தை நறுக்க வேண்டும்.
அதற்கு முன்பே நறுக்கி வைத்தல் கூடாது.
முப்பெரும் தேவியின் அருள்:எலுமிச்சை தேவ கனி என்பதால், அதனை நறுக்கும்போது தோஷங்கள் ஏற்படும்.
எனவே பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
பழத்தைப் பிழிந்து விட்டு மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும் போது மகாலட்சுமிக்கு உரிய க்ரீம் என்ற மந்திரத்தை உச்சரிப்பது அவசியம்.
தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது க்லீம் என்ற தேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும்.
எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது சாமுண்டாயை விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.
இந்தச் சொல்லுக்கு முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்வாயாக என்பது பொருள்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.
இது சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு, மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்டது.
இந்த ஆலயத்தில் தசாவதார தீர்த்தக்குளம் உள்ளது. இந்த குளத்தின் தண்ணீர், இனிப்பு சுவையுடன் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டினால், பாவங்கள் விலகும் என்கிறார்கள்.
குளத்தின் அருகில் 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதனை ‘தசாவதார கிருஷ்ணர்’ என்கிறார்கள். இந்த ஒரே சிலையில், திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இன்று ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் ரம்பா திரிதியை !
ரம்பா, கௌரிதேவியை வழிபட்டு வரம் பெற்ற நன்னாளே ரம்பாதிரிதியை.
இந்த நாளில் விரதமிருந்து வழிபடும் பெண்கள் அனைவருக்கும் பேரழகும் செல்வமும் பெருகும் என்று வரம் அருளினாள் அம்பிகை.
சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் திரிதியை ‘அட்சய திரிதியை’. ஆனால், பெண்களுக்கு அதே ஐஸ்வர்யத்தோடு பேரழகையும் அள்ளித்தரும் விரதமே ‘ரம்பாதிரிதியை.’
இந்தத் திரிதியையன்று தான் கௌரி தேவியாகிய காத்யாயனியை வழிபட்டு, ரம்பா, தான் இழந்த பேரழகையும் செல்வத்தையும் திரும்பப் பெற்றாள்.
கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது.
தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின் பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.