#பெரிய_பெரிய_ஆசை
திருவேங்கடம் சென்று குலசேகர படி அருகில் நின்று திருமலையப்பனை கண் ஆரசேவிக்க ஆசை

திருநாராயணபுரம் சென்று செல்வ பிள்ளையை மடியில் அமர்த்த ஆசை

திருகச்சிவரதராஜனை வாஞ்சையோடு அணைக்க ஆசை

அரங்கம் சென்று ரங்கநாதன் திருவடியில் என் தலையை சமர்ப்பிக்க ஆசை

குடந்தையில்
சாரங்கபாணி சந்நிதியில் ஆரா-அமுதனை மனம் ஆரும்வரை அனுபவிக்க ஆசை

திருவிண்ணகர் சென்று ஒப்பிலா அப்பனை ஓத ஆசை

அல்லி கேணி அப்பனை அள்ளி அள்ளி பருக ஆசை

திருநாகை சென்று அச்சோ ஒரு அழகியானை அனுபவிக்க ஆசை

அனந்தபுரம் சென்று பத்பநாபனை பரவ ஆசை

பூரி சென்று ஜகந்நாதனை சந்திக்க ஆசை

உடுப்பி
சென்று உன்னதனை வாரி உடுத்த ஆசை

குருவாயூர் சென்று அப்பனை கும்பிட்டு ஏத்த ஆசை

இவை அனைத்தும் நிறைவேறா விட்டால் இதற்கு சமமாய் வேறென்ன ஆசை?

கண்ணும் அசையாது வாயும் நாக்கும் உதடுகளும் முணுக்கும் உள்ளம் பரவசம் கொள்ளும் ஈடு இணையற்ற பாதம் கொண்ட என் விட்டலனை ஆலிங்கனம் செய்யும் ஒரே ஆசை
அது என் பெரிய ஆசை🙏

நாமமே பலம் நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Nov 28
#சிவானந்த_சரஸ்வதி #சிவானந்தர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை என்னும் ஊரில் குப்புசாமி என்ற இயற்பெயரில் பிறந்தவர். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் வந்தவர். வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர் ஆனதால் மருத்துவ Image
படிப்பினை படித்தார். பின் பொருளீட்ட மலேயா சென்றார். ஓயா மழை கொட்டும் ரப்பர் காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது. பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது. அப்பொழுதுது தான் குப்புசாமி அங்கு பணி ஆற்றினார். குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக
மின்னினார். பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தன. ஆனால் அவர் மனம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டது. மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கிறது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் கொடுக்க முடிவதில்லை. ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை புரிந்து கொண்டார்.
Read 16 tweets
Nov 27
#ஸ்ரீ_ரண்டுமூர்த்தி_திருககோவில் (ஸ்ரீ
அன்னபூர்ணேஸ்வரி, மற்றும் மகிஷாசுரமர்தினி). திருவலத்தூர், கொடும்பு, பாலக்காடு மாவட்டம்.

பாலக்காட்டில் உள்ள திருவலத்தூரில் சொகனாசினி நதிக்கரையில் அமைந்துள்ள இத்திருத்தலத்தில் இரண்டு பிரதான தெய்வங்கள் உள்ளன. அன்னபூர்ணேஸ்வரி உருவம் கல்லாலும், ImageImage
மகிஷாசுரமர்த்தினி பலா மரத்தாலும் செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலில் அழகிய கூத்தம்பலம் (பாரம்பரிய கோவில் அரங்கம்) மற்றும் ஒரு பெரிய மிழவு (ஒரு தாள வாத்தியம்) உள்ளன. திருவாலத்தூர் கோயில் பழங்கால கேரள கட்டிடக் கலையின் தேர்ச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு. இது கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்ததாக Image
கருதப்படுகிறது. வெளிப்புற கல் சுவர் முழுமையடையாததாக தோன்றலாம், ஆனால் அது இயற்கையின் சீற்றத்தை பல முறை தாங்கியுள்ளது. உட்புற மண்டபத்தில் தேவி பாகவதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளை சித்தரிக்கும் அழகிய சுவர் ஓவியங்கள் உள்ளன. மற்றொரு ஈர்ப்பு ஒரு பெரிய மிழவு (சாக்கியர் கூத்து மற்றும் Image
Read 9 tweets
Nov 27
#மகாபெரியவா
ஜூன்24-2017-தினமலர்
திருப்பூர் கிருஷ்ணன்.
தட்டச்சு-வரகூரான் நாரயணன்.

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் சன்னதித் தெருவில் ஜுரஹரேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் உண்டு. யாருக்காவது ஜுரம் வந்தால் இங்குள்ள சிவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு சிவனே என்று இருப்பார்கள். ஜுரம் Image
குணமானதும் சுவாமிக்கு மிளகு சாதம் நிவேதனம் செய்வார்கள். எப்போதும் சிவராத்திரியன்று காஞ்சி மகா பெரியவர், நான்கு கால பூஜை செய்வது வழக்கம். அவரைத் தரிசிக்கவும், பூஜையைப் பார்க்கவும் இரவில் கூட்டம் அலை மோதும். அன்று நள்ளிரவு 11 மணி அளவில், பெரியவர் ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்குப்
புறப்பட்டார். அவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒருவர் தவிப்போடு கூறினார், "இன்று முழுவதும் நீங்கள் உபவாசம். இரவெல்லாம் கண் விழித்து பூஜை செய்த களைப்பு வேறு. மடத்திலேயே இத்தனை நேரம் சிவபூஜை தானே செய்தீர்கள். உடல் தளர்ந்து இருக்கும் நேரத்தில் நடந்து போய் ஜுரஹரேஸ்வரரைத் தரிசிக்கத் தான்
Read 8 tweets
Nov 26
#சந்த்_ஜனாபாய் பண்டரிபுரம் கோவிலில் கார்த்திகை மாத ஏகாதசி திருவிழாவில் ஏகப்பட்ட கூட்டம். பாண்டுரங்கன் சன்னிதியில் பத்து வயது பெண் குழந்தை இனிய குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பக்தர்கள் அனைவரும் மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். பாட்டு முடிந்ததும் அவள் தன் பெற்றோருடன் ஊர்
திரும்பவில்லை. பாண்டுரங்கனே தனக்கு அன்னையும், தந்தையுமாக இருக்கிறார் என்று சொல்லி கோவிலிலேயே தங்கி விட்டாள். அந்த தெய்வக் குழந்தை தான் ஜனாபாய். அங்கு வந்த நாமதேவர் என்னும் மகான் ஜனாபாயிடம் பேசி அவளது மனநிலையை அறிந்தார்.
கடவுளின் திருவருளால் குழந்தைக்கு இளம் வயதிலேயே பக்தி
ஏற்பட்டிருப்பதை எண்ணி வியந்தார். அவளிடம் பக்குவமாகப் பேசி தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவள் நாமதேவரின் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்ததோடு, கோவிலிலும் பஜனை செய்து கொண்டு காலத்தை கழித்தாள். குழந்தையாக இருந்த அவள் மங்கைப்பருவம் அடைந்தாள். ஜனாபாயின் பக்தியை உலகிற்கு அறிவிக்க
Read 10 tweets
Nov 26
#தமிழகத்திலுள்ள_புகழ்பெற்ற_10_அம்மன்_கோவில்கள்
பெண் தெய்வங்களை அதிகம் வணங்கும் நாடு நம் நாடு. இங்குள்ள #சக்தி_வாய்ந்த 10 அம்மன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

#மீனாட்சி_அம்மன்_கோவில்_மதுரை
மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
இக்கோவில் வைகை
ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் தேவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது மற்றும் பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே.
#காமாட்சி_அம்மன்_கோவில்
#காஞ்சிபுரம்
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் காமாட்சி அருள் பாலிக்கிறாள்.

#சமயபுரம்_மாரியம்மன்_கோவில்
திருச்சி மாவட்டத்தில் கண்ணபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு நடை
Read 12 tweets
Nov 26
#MahaPeriyava
Sri Shankaranarayanan, a staunch devotee of Maha Periyava, got affected by a strange high fever, which affected him once every 10 to 15 days continuously. He tried all sorts of medicines and advice from various doctors. Nonetheless, his hopes and untiring efforts to
cure the fever failed. The man came to a conclusion that the treatment given by doctors could no longer be a remedy and there was only one last resort, none other than the Guru. He visited the SriMatham and had darshan. Periyava asked, "Ippa than varaya"(Are you coming only now?)
“Yes Periyava”
"Have you heard about Jwarahareswara temple in Kanchi? Have you been there before?
“No Periyava”
"Today is a Sunday in Karthigai masam (Nov-Dec). Come, we shall see Jwarahareswara and Surya Bhagavan" said Periyava and walked down. Shankaranarayanan followed
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(