சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜை முறைகள்...!!
பூஜை நடைமுறைகள், தரிசன முறைகள் மற்றும் அபிஷேக ஆராதனை முறைகள் ஆகியவை ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதமாக பின்பற்றப்படும்.
அதன்படி ஐயப்பன் சுவாமிக்கு பிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பலவிதமான பூஜை முறைகள் காலம் காலமாக பின்பற்றப்படுகின்றன. அவை உஷத் கால பூஜை, உச்சி கால பூஜை, அத்தாழ பூஜை, மாத பூஜையாக படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை ஆகியவை ஆகும்.
1. உஷத் கால பூஜை :
அதிகாலையில் ஐயப்பன் சன்னதி நடை திறந்த உடனே அபிஷேகம் நடைபெறும். காலையில் கணபதி ஹோமத்துடன் உஷத் கால பூஜை நடைபெறும்.
அப்போது நைவேத்தியமாக இடித்து பிழிந்த கேரள பாயாசம் படைக்கப்படும். அதன்பின் நடை மூடப்படும். கணபதி மற்றும் நாகராஜா சன்னதி பூஜைகள் முடிந்ததும், பிரசன்ன பூஜை நடைபெறும்.
பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். உஷத் கால பூஜைக்கு பின்னர் நெய் அபிஷேகம் நடைபெறும். இதன் பின்னர் கோவில் சுத்தம் செய்யப்படும்.
2. உச்சி கால பூஜை :
உச்சி கால பூஜை என்பது நண்பகலில் நடைபெறும் பூஜையாகும். இச்சமயம் ஐயப்பனின் முழு சாந்நித்யமும், சன்னதியில் பரவி கிடக்கும். பூஜை முடிந்த பின்னர் நடை மூடப்படும். மீண்டும் மாலை வேளையில் நடை திறக்கப்பட்டு தீபாராதனையும், புஷ்ப அபிஷேகமும் நடைபெறும்.
புஷ்ப குவியலில் சிறு குழந்தையாக சுவாமியின் முகம் மட்டும் தெரியும். நீளமாக ஐயப்பன் முன்பு பூக்குவியல் சமர்ப்பிக்கப்படும். இதனை காண கண்கோடி வேண்டும்.
காலையில் பல மணி நேரம் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெறுவதால் ஐயப்ப விக்கிரகத்தில் ஏற்படும் உஷ்ணத்தை சரி செய்ய புஷ்ப அலங்கார பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் முன்கூட்டியே புஷ்ப அலங்காரம் செய்ய பணம் செலுத்தி பங்கு கொள்ளலாம்.
3. அத்தாழ பூஜை :
உச்சி கால பூஜை முடிந்த பின்னர் அத்தாழ பூஜை எனப்படும் இரவு நேர சயன பூஜை நடைபெறும். ஐயப்பன் நெய் அபிஷேகத்தில் சர்வ காலமும் இருப்பதால் உஷ்ணத்துடன் திருமேனி விளங்கும்.
எனவே, உண்ணியப்பம் மற்றும் பானகம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு பானகம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து ஹரிவராசனம் (தாலாட்டு பாட்டு) பாடி திருச்சன்னதியின் நடை மூடப்படுகிறது.
இவை தவிர, மாத பூஜை நடைபெறும் நாட்களில் தினமும் இரவில் படி பூஜை மற்றும் உதயாஸ்தமன பூஜை நடைபெறுகிறது.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று சாதாரண மக்களும் அறிந்துணர்வதற்காகப் பரமபதத்தைக் காட்டுவார்கள்.
இந்த வாழ்க்கையில் மனிதனானபின் மிருகத்திலிருந்து நாம் எப்படி மனித நிலைக்கு வந்தோம்…? மனிதனானபின் எப்படிப் பரமபதம் அடைவது…? என்று சிந்தித்துச் செயல்படும் நிலைக்குத்தான் பரமபதத்தின் படத்தைப் போட்டு அங்கே காட்டி இருப்பார்கள்.
பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே
1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும்.
2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம்.
திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர்.
1
அதேபோல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ள ஆடுதுறை என்னும் நகரமன்று. ஏற்கனவே சொன்னது போல் திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள ஒரு சிறியகிராமம்.
2
இந்த எளிய கிராமத்தின் பெயர் ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே வழங்கப்படுகிறது.
இருக்கும் வரையில் தெரியாத அருமை இழந்த பின்பு தெரியும்…
நான் ரொம்பக் கோபமாக வீட்டை விட்டு வெளியேறினேன்...........
அவசரத்தில்
அப்பாவின் ஷூவை மாட்டிக்கொண்டு வெளியேறும் அளவுக்கு அவ்வளவு கோபம்.
இனி நான் பெரிய ஆள் ஆன பிறகுதான் வீட்டுக்கு வருவேன்... அவ்வளவு கோபம். பின்னே இருக்காதா என்ன? கல்லூரி போகும் மகனுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் கூட வாங்கி கொடுக்க முடியாத அப்பா…. “நீங்கள், நான் ஏன் பெரிய இன்ஜினியர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள்? உங்கள் கடனையெல்லாம் அடைப்பதற்கா?
மண் ரோட்டில் நடந்தவுடன், காலணியில் ஏதோ சிக்கியதை உணர்ந்தேன். என் கால் விரலில் இருந்து கொஞ்சம் ரத்தம் கொட்டியது... பார்த்தால் பூட்ஸில் ஆணி இருந்தது. மிகவும் வலித்தது, பொறுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றவுடன் ... என் கால்களில் ஈரமாக உணர்ந்தேன்,
" *இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக காட்சி அளித்த , யோக நரசிம்மப்பெருமாள்…!
ஆழ்வார்கள் பாடிய நூற்றிஎட்டு திவ்ய தேசங்களுள் ஒன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளசிம்மபுரம் எனப்படும் சோளிங்கர்*.
*திருக்கடிகை* என்ற திருப்பெயரில் இவ்வூரை ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள்.
கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது. அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள்.
நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை அறிந்து கொண்டார்கள்.