#நற்சிந்தனை
காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன், ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். இவனை காப்பாற்ற ஆளில்லை. “யாராவது என்னை தூக்கி விடுங்கள், காப்பாற்றுங்கள்" என்று கூவி கதறினான். இவனை காப்பாற்ற ஒருவர் வந்தார். "அடடா! கீழே விழுந்து விட்டாயா! கவலைப்படாதே நான் உன்னை
காப்பாற்றுகிறேன்" என்றார். முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, "இதோ இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள். நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார்.
இவனோ கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்.
"ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே. இங்கு என்னை தவிர ஆள் கிடையாது. இந்த
கயிறை பிடித்துக் கொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையுடன் கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.
"அது சரி. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர்.
நிச்சயமாக நான் உன்னை தூக்கி விட்டுவிடுவேன்" என்றார் வந்தவர்.
"கயிர் அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! நான் விடவே மாட்டேன். கை சளைக்க மாட்டேன். நீ இடுப்பில் இந்த கயிறை கட்டி கொண்டு விட்டால்,
உன்னை நிச்சயமாக இழுத்து விடுவேன் #ஸங்கர்ஷண என்றார் வந்தவர்.
"இழுத்து விடுவேன் என்று சொல்கிறீர். என்னை இழுக்க உங்களுக்கு தெம்பு உண்டா?" என்றான் விழுந்தவன்.
"தெம்பு இருப்பதால் தானே இப்படி சொல்கிறேன்." என்று வந்தவர் சொல்ல,
"தெம்பு இருப்பதாக நினைத்து கொண்டு இப்படி சொல்கிறீரோ?" என்று
சந்தேகத்துடன் விழுந்தவன் கேட்க,
"நான் ஒருக்காலும் விழவே மாட்டேன் #அச்யுத கவலையே படாதே!" என்று வந்தவர் சொன்னார்.
"அது சரி. நீங்கள் விழ மாட்டீர்கள் என்றாலும், என் பலத்தையும் சேர்த்து, நீங்கள் எப்படி தூக்க முடியும்? என்னை கரையேற்றுகிறேன் என்று சொல்லி நீங்களும் விழுந்து விட்டால்?"
என்று விழுந்தவன் கேட்க,
"நான் திடமானவன் #த்ருட. நான் திடமானவன் என்பதாலேயே நானும் விழ மாட்டேன். பிறரையும் விழ செய்யவும் மாட்டேன். தைரியமாக அந்த கயிறை பிடி" என்றார் வந்தவர்.
"அதெல்லாம் முடியாது. நீங்கள் போங்கள். ஒருவேளை நீங்கள் என்னை கரையேற்றி விட்டாலும், காப்பாற்றியதற்கு தக்ஷிணை
கொடு என்று கேட்பீர்கள்" என்றான் விழுந்தவன்.
"நீ எனக்கு ஒன்றுமே கொடுக்க வேண்டாம். நீ கஷ்டப்படுகிறாய். என்னால் காப்பாற்ற முடியும். கஷ்டப்படுவது உன் நிலையாக உள்ளது. காப்பாற்றுவது என் ஸ்வபாவம். என் ஸ்வபாவப்படி உன்னை காப்பாற்றுகிறேன் என்று இருக்கும் போது, தக்ஷிணை எனக்கு தேவையே இல்லை"
என்றார் வந்தவர்.
"தக்ஷிணை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். இந்த பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்றியதால், 'நான் தான் உன்னை காப்பாற்றினேன். நீ எனக்கு அடிமை' என்று ஆக்கி கொண்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.
"வேண்டவே வேண்டாம். நீ எனக்கு அடிமையாக இருக்கவே வேண்டாம்.
சுதந்திரமாகவே இரு #கைவல்யம். காப்பற்றுவது என் ஸ்வபாவம். நான் உன்னை காப்பாற்றாமல் விடவே மாட்டேன்" என்றார் வந்தவர்.
"நீங்கள் என்ன சொன்னாலும், எனக்கு உங்கள் மேல் சந்தேகம் வருகிறது. ஒரு வேளை என்னை தூக்கி விட்ட பிறகு, 'ஏண்டா கவனிக்காமல் இந்த பாழுங்கிணற்றில் விழுந்தாய்?' என்று நீங்கள்
அடித்து விட்டால்? அதனால், நான் இங்கேயே இருக்கிறேன் (அத்தை தின்று அங்கேயே கிடக்கும் - நம்மாழ்வார்). என்னை விடுங்கள்." என்றான் விழுந்தவன்.
"நான் உன்னை கரையேற்றுகிறேன் என்று ஆசையோடு வந்தும், பாழம் கிணற்றிலேயே இருக்கிறேன் என்று இப்படி அசட்டு பிடிவாதம் செய்து கொண்டு, அடம் செய்தால்
நான் என்ன தான் செய்வது?" என்றார் வந்தவர். இப்படி காப்பாற்றுபவர் வந்தும், காப்பாற்ற ஒரு பிடியாக முடிச்சுகள் உள்ள கயிறை கொடுத்தும், போட்ட கயிற்றின் மீது சந்தேகப்பட்டு கொண்டு, காப்பாற்றுபவன் மீதும் சந்தேகப்பட்டு கொண்டு, பாழும் கிணற்றிலேயே இருந்து வந்தான். அவரும் இவன் எப்பொழுதாவது
தன்னை நம்புவானோ என்று அங்கேயே இருந்தார்.
வந்தவர் - பகவான் நாராயணன்.
விழுந்தவன் - ஜீவாத்மா (நாம்)
பாழுங்கிணறு - பிறப்பு பிறப்பிலிருந்து மீள முடியாத சம்சார குழி
கயிறு - பக்தி என்ற கயிறு போட்டார்.
முடிச்சு - பக்தி என்ற கயிற்றில் "ஹரே" என்ற நரசிம்ம நாமத்தையும், "ராம” என்ற ராம
நாமத்தையும், “கிருஷ்ண” என்ற கிருஷ்ண நாமத்தையும் முடிச்சுகளாக போட்டு பிடித்துக் கொள்ள சொன்னார்.
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்ற முடிச்சுக்கள் உடைய பக்தி என்ற கயிறை பிடித்து கொண்டால், த்ருடமான (த்ருட) பகவான், தானும் நழுவாமல்
(அச்யுத), நிச்சயமாக இந்த சம்சாரம் என்ற பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்றி விடுவார்.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், கிருஷ்ண பரமாத்மாவை பார்த்து, பீஷ்மர் "த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:" என்று இந்த அனுபவத்தில் பகவானுக்கு பெயர் சூட்டுகிறார்.
திடமானவர் என்பதாலேயே நழுவ விடாதவர் (அச்யுத)
கீதோபதேசத்தில் கண்ணன்,
தேஷாம் அஹம் சமுத்தர்தா
ம்ருத்யு சம்சார சாகராத்
என்கிறார்.
"பார்த்தா! பிறப்பு இறப்பு என்ற சம்சார கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஜீவனை உடனேயே கரையேற்றுபவன் நான்" என்று சொல்கிறார். நான் நிச்சயம் காப்பாற்றுவேன்
என் நாமத்தை நம்பிக்கையோடு பிடி என்று பகவான் பக்தி என்ற கயிறை போட்டாலும், சந்தேக புத்தி உள்ள ஜீவன், அங்கேயே இருக்கிறேன் என்று அசட்டு தனம் செய்வதை தான், #நம்மாழ்வார் பதிலாக #மதுரகவிக்கு சொல்வதில் பார்க்கிறோம். ஞானத்தை அறிந்து கொள்ள விரும்பிய மதுரகவி, திருக்குருகூர் வந்து
நம்மாழ்வாரைச் சந்தித்து,
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்ற கேட்டார்.
அதற்கு நம்மாழ்வார்,
"அத்தை தின்று அங்கே கிடக்கும்” என்று பதிலளித்தார். நம்மாழ்வாரின் பதிலைக்கேட்ட மதுரகவி, இவர் அவதார புருஷர். இவரே நாம் தேடி வந்த ‘ஆத்ம குரு' என்று
உணர்ந்து அவரையே தம் ஆசார்யராகவும் தெய்வமாகவும் போற்றித் திருத்தொண்டு புரிந்தார். பகவான் போட்ட பக்தி என்ற கயிறை பிடித்து கொள்ளாதவரை, நமக்கு விமோசனம் இல்லை என்று உணர்த்துகிறது "த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:" என்ற விஷ்ணு சஹஸ்ரநாமம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
Almost everyone is familiar with the name Sri Ki.Va.Jagannathan, a very eminent Tamil scholar, poet and author. Once when MahaSwamigal was camping in Mylapore, Sri https://t.co/wHfXISFUpw.Ja’s daughter-in-law, Tripurasundari went there for darshan
She stood in the long queue along with other devotees waiting to see the Mahan and finally reached the place where He was sitting. She was introduced to Sri Maha Periyava. She kept the fruits, flowers and other offerings which she brought for the Mahan in a bamboo tray in front
of Him and prostrated. Raising His right hand, the Mahan blessed Tripurasundari and asked “Where are you staying in Madras?”
“Here in Mylapore Periyava” replied Tripurasundari.
“Do you have the habit of going to temples?”
“Yes Periyava. Especially, I always enjoy going to
#Words_that_have_come_true 1. A day will come when Congress leaders will wear their Janeu outside of their coat and shirt and vote in the elections - Veer Savarkar in 1959.
2. One day BJP will rule the whole country - Atal Behari Vajpayee in the Parliament in 1999.
3. I will definitely free India from the Congress - Narendra Modi in 2010
4. I am leaving the Congress party today. But I vow that I will build an establishment against the philosophies of Congress which will push back the party. Even if it takes a 100 years, does not matter
to get rid of 800 years of slavery. But this establishment will unite India and create a United Akanda Bharat - Keshav Boliram Headgewer, Founder of RSS in 1922 in Nagpur.
5. One day the dead Hindu religion will wake up and say proudly ‘I am a Hindu’. At that time Even the US
திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும் கூறுவர். அதே போல் ஆடுதுறை என்னும் பெயரும் இன்றைய தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து சீர்காழி செல்லும் வழியில் அமைந்துள்ளது. சிறிய கிராமம் #ஆடுதுறை. இங்கு பெருமாளை எழுந்தருளச் செய்தமையால் “ஆடுதுறைப் பெருமாள் கோயில்” என்றே
வழங்கப்படுகிறது. திருமால் #வராஹ அவதாரமெடுத்துப் பூமியை (இவ்விடத்தில்) பிளந்து உள்புகுந்து #ஸ்ரீமுஷ்ணத்தில் வெளியே எழுந்து அவ்விடத்துத் தம் தேவியைத்தாங்கி காட்சி தந்தார் என்று புராணங்கள் பேசுகின்றன. இதனைத் திருமங்கையின் பாடலும் சான்று காட்டும். பூமாதேவியை காக்கும் பொருட்டு வராஹ
#கோடிலிங்க_தரிசனம்
கர்நாடகாவின் சிறப்புமிக்க இடம் ஹம்பி. இது வட கர்நாடகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம். விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் அதன் தலைநகராக விளங்கிய விஜயநகரத்தின் இடிபாடுகளுக்குள் இருக்கிறது, தற்போதைய ஹம்பி. இந்த ஊர், விஜயநகர பேரரசு காலத்திற்கும் முற்பட்டது. தற்போது
ஹம்பி, ஒரு முக்கியமான புராதன விஷயங்கள் அடங்கிய இடமாக உள்ளது. பல வியப்பூட்டும் அம்சங்களை தன்னகத்தே கொண்ட விருப்பாட்சா கோவில், பழம்பெரும் நகரத்தின் நினைவுச் சின்னங்களைத் தாங்கி இந்த ஊர் நிற்கிறது. அதன் ஒரு பகுதிதான் சிவலிங்கங்கள். ஹம்பியில் உள்ள துங்கபத்ரா நதிக்கு அருகில் பாறைகளில்
கோடி லிங்கங்கள் ஆங்காங்கே செதுக்கப் பட்டுள்ளன. கோடி லிங்கங்கள் இருப்பதால், இந்த நதிக்கு 'கோடி லிங்க சக்கர தீர்த்தம்' என்றும் பெயர். ராமாயண காலத்தில் துங்கபத்ரா நதி, 'பம்பா' என்றும், மகாபாரத காலத்தில் 'துங்கேனா நதி' என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இதே போல கம்போடியாவிலும் ஓரிடத்தில்
#MahaPeriyava Ghatam Maestro Vikku Vinayakram being an ardent devotee of Paramacharya, he attributes all his success to His bountiful blessings. “I have felt His divine presence on more than one occasion,” he says. Once Vinayakram had gone on a tour to Athens to perform at a
concert along with L. Shankar and Zakir Hussain. Somehow the Ghatam (a circular pot beaten with the hands as a percussion instrument in South Indian music) he took broke a few days before the scheduled date of performance. Vinayakram was in tears and called his wife in Chennai
and told her that he wanted to return as there was no point of staying in Athens. His wife asked him to wait for one day and in the meantime went to Kanchi Mutt and explained the situation to Sri Maha Periyava. Periyava did not react to her narrative and kept quiet. She was in
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர் லிங்கத் தலங்களில் ஒன்றான குஜராத் மாநிலத்தில் ஜாம்நகரில் உள்ள #துவாரகை#நாகநாத் என்ற #நாகேஸ்வரம் #நாகேஸ்வரர்#நாகேஸ்வரி திருக்கோயில்
மூலவர்: நாகேஸ்வரர் (நாகநாதர்)
அம்மன்: நாகேஸ்வரி
தீர்த்தம்: பீம தீர்த்தம், கோடி தீர்த்தம், நாக தீர்த்தம்
புராண பெயர்: தாருகாவனம்
லிங்க வடிவங்களில் ஜோதிர் லிங்கம் என்பவை சிறப்பு வாய்ந்தவை. இந்தியா முழுவதும் 12 ஜோதிர் லிங்க திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான், தன்னை ஜோதி லிங்க வடிவில் வெளிப் படுத்தியதாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் திருவாதிரை நாள் ஜோதிர்
லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.
சிவ புராணத்தில் கூறிருப்பது படி, சுப்பிரியா என்னும் சிவ பக்தையை, தாருகா என்ற அசுரன் பிடித்துச் சென்றான். அவளை, தாருகாவனம் என்ற இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தான். பாம்புகளின் நகரமாக விளங்கிய அந்த