சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட
சென்னையில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலமான
மயிலாப்பூரின் காவல் தெய்வமான
கோலவிழிஅம்மன் ( பத்ரகாளிஅம்மன்) திருக்கோயில்:
1
சென்னை மாநகரின் மயிலாப்பூர் பகுதியில் வீற்றிருப்பவள்தான் கோலவிழி அம்மன். அருள்நிறைந்த அழகிய விழியால் ஆட்சி செய்யும் இந்த அன்னை மயிலாப்பூரின் கிராமதேவதை என போற்றப்படுகிறாள்.
2
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில்,கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து மயிலாப்பூர் தலத்தில் தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.
3
ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன.
குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.
தென்குடி திட்டைதிட்டை திருத்தலம்,
தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும்.
பகவான் விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்கும், மனித வாழ்வுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. அந்த அவதாரங்களே மனிதர்களுக்கு பல்வேறு உண்மைகளை உணர்த்தக்கூடியவை.
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் (அதாவது சிவபெருமான்) தான் உச்ச சர்வ வல்லமையுள்ள கடவுள்களாக கருதப்படுகின்றனர். இந்தியா, நேபால் மற்றும் உலகத்தில் உள்ள பல பகுதிகளில் இந்த மூன்று கடவுள்களுக்கும் பல கோவில்கள் உள்ளது.
சிவபெருமானுக்கு மிக அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். அதேபோல விஷ்ணுவும் பிரம்மனும் கூட இந்து மதத்தில் மிக புகழ் பெற்றகடவுள்கள்தான்.
காக்கும் கடவுளான ஸ்ரீ ஹரி விஷ்ணு பத்து அவதாரங்களை எடுத்துள்ளார்.
இந்த ஆலயத்தின் கருவறையில் கற்பக விருட்ச மரத்தின் கீழ், வலது காலை மடக்கி, இடது காலை தொடங்கவிட்டபடி காலபைரவரும், அவருக்கு அருகில் இடதுபக்கம் பைரவி தேவியும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள்.
இது போன்று பைரவரும், பைரவியும் ஒரே கருவறையில் இணைந்து அமர்ந்தபடி காட்சி தரும் ஆலயம் வேறு எங்கும் இல்லை என்கிறார்கள்.
நான்கு கரங்களுடன் அருளும் சொர்ண கால பைரவர் தன்னுடைய மேல் இரு கரங்களில், நவ நிதிகளில் இருபெரும் நிதிகளாக விளங்கும் சங்கநிதி, பத்மநிதிகளை தாங்கியிருக்கிறார். கீழ் இரு கரங்களும், அபய, வரத முத்திரைகளை காட்டுகின்றன.
*வெள்ளை நிற லிங்கம்! அரிய தரிசனம் நல்கும் ஆச்சர்ய பால்வண்ணநாதர் ஆலயம்.*
திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் ஆலயம் தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவப்புரியில் அமைந்துள்ளது.
1
இங்கிருக்கும் மூலவருக்கு பால்வண்ணநாதர் என்றும் அம்பாளுக்கு வேதநாயகி என்றும் பெயர். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும்.
2
ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. அதில் ஊன்றீஸ்வரர் மற்றும் மின்னொளி அம்மன் சந்நிதி முதன்மையானதாக கருதப்படுகிறது.
நாம் எல்லோரும் கிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறோம். ஆனால் கிருஷ்ணரும் யார் யார் யாரையோ கும்பிடுகிறார்.
வியப்பாக இருக்கிறது அல்லவா? கள்ளக் கிருஷ்ணனின் இந்த ரகசிய செயலைக் கண்டு பிடித்தது வேறு யாரும் இல்லை. கிருஷ்ணனின் மனைவி ருக்மிணிதான் இதைக் கண்டுபிடித்தார்.
ஒரு நாள் கிருஷ்ணரும் வழிபாடு செய்வதைப் பார்த்துவிட்டு, “அன்பரே! நீர் யாரையோ வணங்குவது போலத் தெரிகிறது. அவர்கள் யார்? என்று கேட்டாள்.