புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமெஸானில் வெளியாகியிருக்கிறது 'வதந்தி'.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கணவனை இழந்த ஆங்கிலோ - இந்தியப் பெண்ணான ரூபி (லைலா), தன் மகள் வெலோனியை (சஞ்சனா) மிகுந்த கண்டிப்புடன் வளர்க்கிறாள்.
ஆனால், ஒரு நாள் வெலோனியின் சடலம் வேறெங்கோ கிடைக்கிறது. வெலோனிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த குடிகார இளைஞன், அவளைக் காதலித்த இளைஞன், ஒரு காதாசிரியர் (நாசர்), நடுக்காட்டில் வசிக்கும் மூன்று பேர் என சந்தேக வலை பலர் மீது படிகிறது.
இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் துணை ஆய்வாளரான விவேக் (எஸ்.ஜே. சூர்யா). வழக்கு ஒரு கட்டத்தில் காவல்துறையால் முடித்துவைக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், தொடர்ந்து உண்மையான கொலைகாரனைத் தேடுகிறார் விவேக். அது அவருக்கு ஒரு obsession ஆகவே மாறிவிடுகிறது.
இதனால் குடும்பத்திலும் வேலையிலும் ஏகப்பட்ட பிரச்சனைகள். முடிவில் கொலைக்கான காரணத்தையும் கொலைகாரனையும் அவர் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதிக் கதை.
குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிப்பதைவிட, ரஷோமான் பாணியில் பல்வேறு நபர்களின் பார்வையில் ஒரு கொலையைப் புரிந்துகொள்ள.....
வைப்பதுதான் இயக்குநரின் நோக்கம்போலவே கதை நகர்கிறது.
ஆரம்பத்திலிருந்து முடிவுவரை, ஏகப்பட்ட சுவாரஸ்யமான திருப்பங்களோடு கதை நகர்கிறது. மொத்தமுள்ள எட்டு எபிசோட்களில் ஏழாவது எபிசோடைத் தவிர மற்ற எபிசோட்கள் எல்லாமே விறுவிறுப்பாக நகர்கின்றன.
ஆனால், இந்த படத்தில் வெலோனி குறித்த, ரூபி குறித்த சில சித்தரிப்புகள் மிக sickஆக இருக்கின்றன. குறிப்பாக, ஏழாவது எபிசோடில் வெலோனி குறித்த காட்சிகள், அதற்கு முன்பு அந்தத் தொடர் ஏற்படுத்தியிருந்த பாசிட்டிவான எண்ணத்தையே மாற்றும் வகையில் இருக்கின்றன.
மாநாடு படத்திற்குப் பிறகு இந்தத் தொடரில் எஸ்.ஜே. சூர்யா சிறப்பாகவே நடித்திருக்கிறார். குறிப்பாக ஐந்தாவது எபிசோடில் மனைவியுடன் அவர் பேசும் காட்சி அட்டகாசம். தொடரில் இவரைவிட சிறப்பாக நடித்திருப்பது வெலோனியாக வரும் சஞ்சனா. லைலா, நாசர் ஆகியோரும் தொடரில் உண்டு.
வீக் எண்டிற்கு நல்ல சாய்ஸ்தான். மொத்தம் எட்டு எபிசோட். ஒவ்வொரு எபிசோடும் சராசரியாக முக்கால் மணி நேரம். ட்ரை பண்ணுங்க.
தமிழ்நாட்டில் சங்ககாலத்தைத் தொடர்ந்து வந்த 250-300 ஆண்டுகள் யார் ஆட்சி செய்தார்கள், அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள், அவர்கள் ஆட்சி எப்படியிருந்தது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது. ஆகவே, அது இருண்ட காலமாக அழைக்கப்பட்டது.
மயிலை சீனி. வேங்கடசாமி, ராசமாணிக்கனார், கே.கே. பிள்ளை, பி.டி. சீனிவாச ஐயங்கார் உள்ளிட்டோர் இந்த காலகட்டம் குறித்தும் இந்த காலகட்டத்தில் ஆட்சி செய்த களப்பிரர் குறித்தும் சில புத்தகங்களை எழுதியுள்ளனர்.
*****
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இருகில் இருக்கிறது பூலாங்குறிச்சி.
இங்கே ஒரு மலையடிவாரப் பகுதியில் இருந்த கல்வெட்டுகளை 1979ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அலுவலர் ஒருவர் கண்டுபிடித்தார். அதில் மூன்று கல்வெட்டுகள் இருந்தன. முதலாவது முற்றிலும் சிதைந்திருந்தது. இரண்டாவது அரைகுறையாகச் சிதைந்திருந்தது. மூன்றாவது நல்ல நிலையில் இருந்தது.
Allegory of the Cave அல்லது Plato's Cave என்பது ஒரு புகழ்பெற்ற கருத்தாக்கம். ஒரு குகையில் சிலர் சங்கிலியால் சுவற்றோடு பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு எதிரே இருக்கும் சுவற்றை மட்டுமே பார்க்க முடியும். அப்போது, அவர்களுக்குப் பின்னாலிருக்கும் சுவற்றிலிருந்து.. (1/15)
வெளிச்சத்தையும் நிழலையும் வைத்து சில உருவங்களை உருவாக்கிக் காட்டினால், அந்த உருவங்களுக்கு அவர்கள் பெயர் சூட்டுவார்கள். அதை உண்மையென நம்புவார்கள். ஆனால், அவை உண்மையல்ல; வேண்டுமென்றே காட்டப்படுகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தக் கருத்தாக்கத்தை அடிப்படையாக வைத்து... (2/15)
உருவாக்கப்பட்ட தொடர்தான் 1899.
இந்தத் தொடரின் கதையைச் சொல்வதில் பல பிரச்சனைகள் உள்ளன. முதலாவது பிரச்சனை, கதையைப் புரியும்படி முழுமையாகச் சொல்ல முடியாது என்பது. இரண்டாவது, அப்படியே சொல்லிவிட்டால், இந்தத் தொடரை நீங்கள் பார்க்க மாட்டீர்கள். (3/15)
வி.பி. சிங் என்றொரு மீட்பர்
---------------------
குறுகிய காலமே இந்தியாவின் பிரதமராக இருந்த வி.பி. சிங், இந்தியாவின் முக்கியமான பிரதமர்களில் ஒருவர். இன்று அவருடைய நினைவு நாள். அவரைப் பற்றி சில சம்பவங்கள். (1/14)
1990ல் வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்திலிருந்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு மீட்டுவரப்பட்டனர்.
வளைகுடா யுத்தம் நடந்தபோது குவைத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இந்தியர்கள் பணியாற்றிவந்தார்கள். அந்தத் தருணத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக இருந்தது. (2/14)
இந்தியர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என சதாம் ஹுசைன் வாக்குறுதி அளித்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் நாடு திரும்பவே விரும்பினார்கள். ஆனால், அந்தத் தருணத்தில் குவைத்திலிருந்தே இந்தியாவுக்கு அவர்களை அழைத்துவர வழியில்லை. ஆகவே இந்தியர்களை பஸ்ராவிலிருந்து 1120 கி.மீ தூரம்... (3/14)
2000களின் துவக்கத்தில் பிஹாரின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான ஷெக்புராவில் அசோக் மஹ்தோ தலைமையில் ஆயுதக் கும்பல் ஒன்று மிகத் தீவிரமாக செயல்பட்டு வந்தது. இந்தக் கும்பலின் கொலைப் பட்டியல் மிக நீளமானது. நாடாளுமன்ற உறுப்பினரான ராஜோ சிங் உள்பட பலரை இவர்கள் கொலை செய்தனர். (1/7)
இந்த அசோக் மஹ்தோவும் அவனது கூட்டாளிகளும் 2006ல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எப்படிக் கைது செய்யப்பட்டனர் என்பதை அந்த மாவட்ட எஸ்பி அமித் லோதா Bihar Diaries: The True Story of How Bihar's Most Dangerous Criminal Was Caught என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதினார். (2/7)
இந்த Bihar Diaries புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட வெப்சீரிஸ்தான் Khakee: The Bihar Chapter. மொத்தமாக ஏழு எபிசோடுகள். ஒவ்வொன்றும் 40 - 45 நிமிடங்கள். ஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை, நூல் பிடித்ததுபோல இலக்கை நோக்கி பயணிக்கும் திரைக்கதை இந்தத் தொடரின் பலம். (3/7)
கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான Chup: The Revenge of the Artist தற்போது Zee 5 ஓடிடியில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏற்கனவே பரவலாக விமர்சனங்கள் வெளியாகிவிட்டன என்பதால், ஒரு சுருக்கமான பரிந்துரை மட்டும். (1/7)
Cheeni Cum, Paa உள்ளிட்ட ஃபீல் குட் திரைப்படங்களுக்காக அறியப்பட்ட கே. பால்கி இயக்கியிருக்கும் படம். மும்பையில், சினிமா விமர்சகர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். குறிப்பாக, நல்ல படத்தை மோசமான படம் என்றும் மோசமான படத்தை நல்ல படம் என்றும் விமர்சனம் எழுதுபவர்கள். (2/7)
இதைக் கண்டுபிடிக்க வருகிறார் IG அரவிந்த் மாதுர். இதற்கிடையில், Mumbai Post பத்திரிகையில் சினிமா ரிப்போர்ட்டராக இருக்கும் நிலா மேனனுக்கு ஃப்ளவரிஸ்டாக இருக்கும் டானியுடன் காதல். ஒரு கட்டத்தில் நிலா மேனனை பொறியாக வைத்து அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்க முயல்கிறார் அரவிந்த மாதுர். (3/7)
"காப் பஞ்சாயத்தும் லோகதந்திரிக பாரம்பரியமும்"
------------------------------------------
இந்திய அரசியல்சாஸன தினமான நவம்பர் 26ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் "ரிக் வேதமும் பாரத லோகதந்திரிக பாரம்பரியமும்".. (1/6)
சபாவும் சமிதியும்: பாரத லோகதந்திரிய பாரம்பரியத்தை ஆராய்தல், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் பாரத லோகதந்திரமும், "கல்வெட்டு ஆதாரங்கள்: லோகந்திரிக பாரம்பரியம்", "காப் பஞ்சாயத்துகளும் லோகதந்திரிக பாரம்பரியமும்" போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்த UGC பரிந்துரைத்துள்ளது. (2/6)
இது தொடர்பாக யுசிஜி அனுப்பியுள்ள கடிதத்தோடு வரலாற்று ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில் ஒரு கருத்துருவையும் அனுப்பியுள்ளது. அதில் , "இந்தியாவில் வேத காலம் முதற்கொண்டு ஜனபாதம், ராஜ்யபாதம் என இரண்டு வகையான அரசுகள்.. (3/6)