Reinforcement rebars பார் இப்ப மார்டன் construction ல அதிகமாக பயன்படுத்த கூடியது.. இந்த rebars எதவாது specialலாக தயாரி்க்க கூடியதான அப்படி ஒன்னும் இல்லை ஆனால் இதை இணைக்கும் முறைதான் வித்தியசமானது.
நம்ம சாதரன வீடு கட்டும் போது ஒரு கம்பி மீது இன்னொரு கம்பியை வெச்சு கட்டு கம்பியால கட்டி ஓவர் லேப் செய்வோம் இதனால 1மீட்டர் கம்பி வரை வேஸ்ட் ஆகும் சின்னவீடு பிரச்சனை இல்லை இதே புரூஜ் கலீபா மாதிரி பெருசா இருந்தா? எவ்வளவு மீட்டர் வேஸ்ட் ஆவது ?
மெட்ரோ ட்ரேக்கா இருந்தா? செக்மெண்ட் திருப்புவதெல்லாம் நடக்காத ஒன்னு இங்கதான் இதை பயன்படுத்துறோம். எப்படி? Rebarல இரெண்டு பக்கம் திரெட் போடுறோம் couplerயை வெச்சு இணைத்து விடுகிறோம்.. இதுல coupler முறை மட்டும்தான் இருக்கா? இல்லை வேற முறைகளும் இருக்கு
1. Threading Coupler
2.Sleeves (ஒரு டீயூப்ல இரெண்டு கம்பியும் parallel வைத்து போல்ட்டை டைட் செய்தால் போதும்) இது over lap மாதிரிதான் பட் 1மீட்டர் தேவை படாது .
2. Crimping இது கேபிள் ஜயின்ட் போடுற மாதிரி இரெண்டு கம்பியையும் coupler உள்ள சொருகி ஹை பிரஸர்ல அமுக்கி விடுவோம்
இதுல beast solution threading couplers தான்.. நல்ல brand போவது சிறந்தது சைனா மேக்கீங் குவிந்து கிடக்கிறது அது போகம இருப்பது சிறந்தது.. threading coupler ஏன் பெஸ்ட்?
Threading one side full thread அடுத்த பக்கம் பாதி திரெட், இரெண்டு கம்பியையும் வெச்சு coupler டைட் செய்தால் போதும்
Cost வைஸ் ? மிதமான ப்ரைஸ் டாப் brand கூட 20 mm வித் திரெட் எடுத்த 12 டாலர் வரும், ஓவர் லேப் செய்யும் போது wastages and labours பார்க்கும் போது 50% high தான். இருந்தாலும் கால நேர விரையம் ஓவர் லோடை தவிர்க்க இது சிறந்ததே . குறிப்பா பெரிய சைஸ் கம்பிகளுக்கு சிறந்ததே ..
உறுதி தண்மை? கண்டிப்பாக coupler 2test மூலம் உறுதி படுத்த வேண்டியது கட்டாயம்
1. Tensile test 2. Slip test
இதுல இரெண்டுமே பார் ப்ரேக் ஆகனும், coupler slip ஆக்கூடாது, அப்படி ஆனாலும் range cross ஆகியிருக்கனும் இல்லையெனில் fail தான்..
திரெட் coupler model ஏன் சிறந்தது? இதுல cold forging, peeling methods இருக்கு..
Cold forging னா? 32mm யை 36 mm ஆக பெரிதாக்கி பின்பு திரெட் செய்வதால் இது தரம் சிறந்தது.
பீலிங்: கேரட் தேளை செதுக்கறமாதிரி செதுக்கி திரெட் போடுறது .. result poor
#செல்ப்_திரெட் முதல் நாள் பள்ளி முதல் நாள் வகுப்பு எப்படியிருக்கும் செமையா இருக்குமில்லே
அவ்வளவு நாள் விடுமுறை அம்முச்சி ஊரு அப்பத்தா ஊருன்னு நல்லா ஊர் மேஞ்சுட்டு திரும்பும் போது இருக்க வேதனையே இருக்கே 😭 நம்ம X தான் புள்ளையிடம் மாமான்னு நம்மளை அறிமுக படுத்துற வேதனையைவிட கொடூரம்
தாத்தாட்ட கெஞ்சி கூத்தாடி ஒரு school bag வாங்குறதுக்குள்ள நம்ம படுற பாடு இருக்கே எப்பப்பா.. நம்மகூட வேற யாராவது கூட்டா வந்து கெஞ்சிட்டா bag தோள் பையா மாறிடும்.. சில நேரத்துல அக்கவோட bag 🤦🏼♂️ எதுவாயிருந்தாலும் நமக்கு புதுசுதானே என்று தயார் நிலையில் பழ பழன்னு வெச்சுருப்போம்
ஒரு செட் யூனிபார்ம்க்கு துணி இன்னொரு தாத்தாட்ட வாங்கி அதை தைக்க 2மாசத்திற்கு முன்னாடியே கொடுத்தாலும், நாளைக்கு முதல்நாள்னா இன்னைக்கு சாய்ங்காலம்தான் வெட்டுவார் நம்ம குமார் டைலர், கேட்டா நில்லுடா ஒரு மணிநேரம் என்பார்..இதை ஒரு எபிசோட்டாவே எழுதலாம்
நண்பன் குடும்பத்தோடு வெளியே போனோம் அப்ப அவருக்கு நடந்த ஒரு சம்பவம் அந்த இரவில் அந்த கொடூரம் யாருக்கும் நடக்க கூடாது.. சுவரஸ்யத்திற்காய் அவனே இங்கு கதை சொல்வான்..
எல்லா நாட்களைப் போலவும் சாப்பிட்டு குழந்தைகளையும் சாப்பிட்டு தூங்க போகலாம்ன்னு போனேன்..
அப்பதான் வூட்டம்மா குப்பையை போய் கொட்டிட்டு வான்னு சொல்ல நானும் கையில குப்பை கவரோட கிளம்ப முற்பட்டேன் உடனே சின்னவன் நானு நானு ன்னு துள்ளி குதிக்க ஒரு கையில கவரு இன்னொரு கையில அவனை தூக்கிட்டு நகர்ந்தேன் அழுகற சத்தம் கேட்க திரும்பினேன் ..
பெரியவன் சினுங்கிட்டு நானும் வரேன் என சொல்ல சரிவாடான்னு கவரோட அவன் விரலை பிடிக்க புன்னகையோட அடுத்த அடுத்த அடிகள் எடுத்து வைத்தான்.. ஒரு கையில சின்னவன் மறுகையில் குப்பை பெரியவன்னு கதவ தொறந்த பெரியவன் செருப்பு போட்டு விட சொன்னான் அப்பதான் அந்த சம்பவம் நடந்தது..
ஓர் அழகான காதல் கதை எழுத ஆசை அப்படி நான் சுவரஸ்யமான எந்த காதலையும் கடக்கததினாலே அப்படியான நிகழ்வுகள் இல்லை அதனலே எங்கோ படித்தது எங்கோ கேட்டது என ஓர் புனைவை முயற்சிக்கிறேன் இதில் நாயகனாக நானே பயணிக்கிறேன்..
பள்ளியில படிக்கும் போது தன்னோட வகுப்புல நமக்குனு ஒருத்தி இருப்ப
அவளை எப்படி கண்டுபிடிக்கிறது அதற்குதானே நமது நண்பர்கள் இருக்காங்க.. அவனுகளா ஒரு பெண்னோடு கோர்த்து விடுவானுக அப்படி ஒருவளை என்னோடு கோர்த்து விட்டார்கள் காலையில் பேருந்தில் ஆரம்பிக்கும் அந்த கிசு கிசுப்பு, நான் பேருந்தின் முதல் நிலையத்தில் ஏறிவிடுவேன்
படியின் முதல் இருக்கையில் அமர அனுமதியில்லை இரண்டாவது இருக்கையில் அமர்வது வழக்கம் சென்னையில ரூட்டு தலை போல அந்த சீட்ட பிடிக்க ஒரு போரட்டம் நடக்கும் ஆனால் சின்ன வயதுல சில அண்ணாக்களின் மடியில் அந்த சீட்டில் உட்கார்ந்ததால் எனக்கு இலகுவாக அரும்புமீசை முளைத்ததும் அந்த சீட் கிடைத்தது.
பெட்ரோல் கிடைத்த மகிழ்விலும் தமிழ் கேட்ட மகிழ்விலும் நேராக வண்டிய பக்கத்து பக்காலா(கடை) யில நிறுத்தி தண்ணி தீணின்னு வாங்கி போட்டேன் நேரம் 7யை நெருங்கியிருந்தது
ஏசி போடாம ஓட்டிட்டு வந்ததால டி சர்ட் புல்லா வேர்த்து நினைந்து இருந்தது, இப்ப ஏசியை போட சில்லென காற்று என் மீது படற நினைந்த உடலில் சில்லென்ற காற்று பட கூட இசைஞானி தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு என பாட கார் மெதுவாக மிதந்தது .. கொஞ்சம் நகர்ந்ததும் இருபுறமும்
இருபுறமும் உணவகங்களும் கடைகளும் நிறைய என் கார் பயணமானது, பசியில்லை தாயிஃப் போயி சாப்பிடுவது என முடிவோடு நகர்ந்தேன், அங்கேதான் அடுத்த படலம் ஆரம்பமானது ஆம் அது அவரு இரு வழி சாலை சைன் போர்ட் வலது புறம் காட்டுது ஆனால் அக்கா கூகுள் மேப் இடதுபுறம் நேராக போ என்கிறது.
இரண்டு வாரம் பயணம் முடிந்து ஜித்தாவில் இருந்து ரியாத் வர ஆயுத்தமானேன் வூட்டுகாரம்மவும் இல்லை நான் மட்டும் தனியாகதான் வந்தாக வேண்டும் ஜித்தாவிற்கு முதல் பயணம் அது long time so வண்டியில போனேன்.. ஜித்தாவில் இருந்து ரியாத் மொத்தாம 1000km
9மணி நேரப்பயணம், ஆனால் கடைசிநாளில் inventory plan செய்து இருந்தேன் office போகும் போது பெட்ரோல் அடிக்கவில்லை இல்லை மறந்துட்டேன், ஆபிஸ்ல இருந்து inventory முடிக்கும் போது 6மணி நல்ல rush time இருப்பினும் hotel vacate செய்தாச்சு ஷோ இப்படியே கிளம்பலாம் என முடிவு
அதன் படி மேப் போட்டேன் அது நான் வந்த வழியை காட்டவில்லை வேறொருவழியை காட்டியது இந்த 10நாளில் ஒரு அளவிற்கு customer place போக ரூட் கத்து வெச்சு இருந்தேன் இருப்பின் கூகுள் மேப் பொய் சொல்லாதுன்னு நம்பி வண்டியை எடுத்தேன் அப்பதான் பெட்ரோல் கம்மியாக இருப்பது புரிந்தது
2007 காலேஜ் 3year 5th Sem முதல் symposium பாண்டிச்சேரியில ஒரு காலேஜ்கு போனோம் அதுல எங்க dep ல 6பேர் போனோம் நான் 6வது ஆள் ECEdeptல ஒருத்தன் paper presentations க்கு வந்தான் மொத்தம் 7 பேர் சர்கீயூட் டிசைனீங் & mini project நாங்க focus செய்தோம்
Paper presentation and circuit designing ஒரே டைம்ல நடந்தது நாங்க second prize paper presentation செய்தவன் win பண்ணலை evening Pondy குதுகலமாக இருந்துட்டு அடுத்த நாள் mini project காலையில 8மணிக்கு ரெடி ஆகினோம் 10மணிக்கு stall போகனும் ஆனால் அப்பதான் ஓர் பேர் அதிர்ச்சி காத்திருந்தது
இரண்டு project கொண்டு வந்திருந்தோம் (3பேர் ) laptop amplifier (3பேர்)irrigation control, அறியா வயதில் இதெல்லாம் அரிய கண்டுபிடிப்பு என நினைத்து கண்டிப்பா prize வாங்கிறோம்ன்னு கிளம்பினோம் இங்க வந்த என்ன என்னமோ innovative வெச்சுருக்கானுக சரி பேர் அதிர்ச்சிக்கு வருவோம்