கொடுமையான நோய்களை தீர்க்கும் உய்யக்கொண்டான் மலை ஸ்ரீ உஜ்ஜீவநாதர்
உய்யக்கொண்டான் மலையில் அருள்புரியும் ஸ்ரீ உஜ்ஜீவநாதர் மூன்று ஜீவ சக்திகளால் உருவான மூர்த்தி என்பதால் ஸ்ரீ உஜ்ஜீவ நாதருக்கு
பசும் பால், ஆட்டின் பால், ஒட்டகப்பால் அல்லது கழுதைப் பால் என்ற இந்த மூன்று பாலும் கலந்த உஜ்ஜீவ க்ஷீர கலவையால் அபிஷேகித்தல் என்பது எந்த கொடுமையான வியாதிக்கும் ஒரு பரிகாரமாக அமைகிறது..
வியாதிகள் என்பவை தூல, சூக்கும, காரணம் என்ற மூன்று சரீரங்களில் ஏதாவது ஒன்றில்தானே முதலில் நிலைகொள்ள முடியும்.
இந்த மூன்று சரீரங்களும் இந்த பால் அபிஷேகத்தால் தூய்மை அடையும் என்பதால்
ஸ்ரீ உஜ்ஜீவ நாதருக்கு நிறைவேற்றும் அபிஷேகம் அனைத்து வியாதிகளையும் தீர்க்கும்
நோய் நிவாரண சக்தியுடன் அமைகிறது.
எதிர்காலத்தில் தோன்றப் போகும் பல வியாதிகளுக்கு இத்தகைய நிகழ்கால த்ரிக்ஷீர அமிர்த அபிஷேகம் மருந்தாய் அமைந்து வியாதி என்பது ஒரு கடந்த கால நினைவாக மாறும் என்பது இந்த அபிஷேகத்தின் மகிமையே.
இவ்வாறு த்ரிக்ஷீர அபிஷேகத்தை நிறைவேற்ற முடியாதவர்கள் பசும்பாலில் மூன்று துத்திப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி அதில் டைமண்ட் கற்கண்டு சேர்த்து தானமளித்தலும் பல தீராத வியாதிகளுக்கு மருந்தாய் அமையும்
மலைக் குன்றின் மேல் அமைந்துள்ளதால் சுவாமி, அம்பாள், முருகன் என எல்லா சன்னதிகளும் பல படித்தரங்களில், உயரத்தில் அமைந்துள்ளதாக பலரும் எண்ணுவர்.
உண்மையில் மனிதனுக்கு உள்ள ஒன்பது சரீரங்களின் பிரிவே இவ்வாறு ஒன்பது நிலைகளாக மாறி நிலைபெற்றுள்னன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும்.
மனிதனுக்கு அமைந்துள்ள ஒன்பது சரீரங்களின் தன்மையை அறிந்து கொண்டு அந்த சரீரங்களை வியாதிகளிலிருந்து காத்துக் கொள்ள நினைக்கும் மனிதன் குரு வாரமாகிய வியாழக் கிழமையில் குரு ஹோரை நேரத்தில் பிரஹஸ்பதி காயத்ரீயை
வாய் விட்டோ மனதிற்குள்ளோ ஓதுவதை இத்தலத்தில் ஆரம்பித்து அதை தொடர்ந்து கடைப்பிடித்தல் நலமே.
இதனால் தங்களுடைய வியாதிகளுக்கு நிவாரணம் காண்பதுடன் அத்தகையோர் பிறர் நோய்களைத் தீர்க்கும் ஔஷத சக்தியையும் பெறுவர் என்பது திண்ணமே
*இவருக்குத் தான் கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?*
*நீங்க நினைக்கிற மாதிரி கார்த்திகை என்பது முருகனுக்கு மட்டுமல்ல*.
*சிவாலயத்தை வளம் வரும் போது மூலவரின் கருவறைக்குப் பின்னால் மேற்கு நோக்கி இருப்பார்.*
*இவர் தான் லிங்கோத்பவர்.*
*ஒரு முறை விஷ்ணு பிரம்மா இருவரிடையே தங்களுக்குள் யார் பெரியவர் என்ற சச்சரவு வரவே, இருவரும் சிவனிடம் சென்று தங்களில் யார் பெரியவர் என நீங்களே கூறுங்கள் எனக் கேட்க,
அதற்கு அவர்,*
*ஜோதி வடிவமாய் விண்ணுக்கும் மண்ணுக்கும் பிரம்மாண்டமாய் எழுந்து நின்று,
தன்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டுவருகிறீர்களோ அவரே பெரியவர் என சிவன் சொல்லிவிடுகிறார்.*
பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகமாக,
இந்த *கலியுகம்* இருக்கிறது.
அப்படி நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக, தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் மக்கள் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
சென்னை *திருவான்மியூர் ஸ்ரீ நடராஜர் அறக்கட்டளை சார்பில்* பொன்னேரி அருகில் உள்ள *திருப்பாலைவனம் சிவாலயத்தில் சிவ தீட்சை விழா* நடைபெற உள்ளது.
*நிகழும், பெருமானுக்கே உரிய தனுர் மார்கழி மாதம் 4ம் தேதி ஆங்கில மாதம் டிசம்பர் 19ம் 2022 வருகிறது. (19-12-2022 திங்கட்கிழமை)*
சென்னையில் உள்ள *அடியார்கள் அன்பர்கள் மற்றும் அனைத்து மன்றங்களும் இந்த பொன்னான வாய்ப்பை* பயன்படுத்திக் கொள்ளலாம்.
சமயம் விஷேடம் சிவபூஜை நிர்வாண தீட்சை ஆச்சார்ய அபிஷேகம் பெற விரும்பும் அடியார்கள் அன்பர்கள், முன்பதிவு செய்து சந்நிதானங்களின் உத்தரவு பெற்று தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.
*சிவ தீட்சை பெற, 12-12-2022 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும்.*