#அறந்தாங்கி_வீரமாகாளி_அம்மன் திருக்கோயில்
புதுக்கோட்டையிலிருந்து 40 கிமீ தொலைவில், காரைக்குடி-மயிலாடுதுறை ரயில் தடத்தில் காரைக்குடியிலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது இக்கோவில். அறந்தாங்கியைச் சுற்றியுள்ள 16 கிராமங்களின் காவல் தெய்வமாக வீரமாகாளியம்மன் போற்றப் படுகிறாள். முப்பது
நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என்றும் இத்தலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கல் வடிவமாக வழிபட்டு வந்த கிராமத்து மக்களுக்கு திருவுருவச்சிலை செய்யும் எண்ணம் ஏற்பட்டது. அப்போது உருவான விக்ரகத்தை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால்
வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர். அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், தான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும். வெளிப்படும் நேரம் வந்து விட்டதாகவும் தெரிவித்தாள். தன் ஆலயத்தில் இருந்து ஓர் ஆட்டை
நடக்கவிட்டு. அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டினால் தன் வடிவம் கிடைக்கும் என்று கூறினாள். பின்னர் அவ்வாறே அக்கிராம மக்கள் அதை செய்த போது அம்மனின் பிரம்மாண்ட, கல்லால் ஆன விக்ரகம் அங்கு கண்டு எடுக்கப்பட்டது. பின்னர் அந்த பிரம்மாண்ட விக்ரகத்தை கோவிலில் பிரதிஷ்டை செய்த
மக்கள் அம்மனை காவல் தெய்வமாக வழிபட தொடங்கினர். இக்கோவில் கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக அருள் பாலிக்கிறாள். வலதுபுறம் கருப்பசாமி மற்றும் விநாயகர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், சிரசில் மகுடம் தாங்கி
வலது காதில் ஆணுக்குரிய நாகாபரணமும், இடது காதில் பெண்ணுக்குரிய பாம்படம் எனும் காதணியும் அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை, எண்கரங்கள் உடன் காட்சியளிக்கிறாள். வன வாசத்தின் போது பஞ்சபாண்டவர்கள், வீரவனம் என்றழைக்கப்பட்ட அறந்தாங்கிப் பகுதிக்கு வந்து அம்மனை வணங்கியதாகவும், அவர்கள் தங்க
நல்ல இடத்தை அம்மன் காட்டியதாகவும் கூறுவர். திருமணத் தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தோஷங்களை நீக்குபவளாக திகழ்கிறாள். மேலும் நாகதோஷம், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை தோஷங்களை நீக்கி அருள் பாலிக்கிறாள். அம்மன் ஆசியால் குழந்தைப் பெற்றவர்கள்
நேர்த்திக் கடனாக அந்தக் குழந்தையை இக்கோவிலுக்குத் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர். அம்மன் அருளால் திருமணமானவர்கள் பொட்டு கட்டிய தங்கத் தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்கிறார்கள்.
இக்கோயில் காலை 6.00 முதல் 12.00 வரை
மாலை 4.00 முதல் 8.30 வரை திறந்திருக்கும். ஆடிப்பெருந்திருவிழா, சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசி மகம், சிவராத்திரி உள்ளிட்ட
விழாகள் சிறப்பாக கொண்டாட படுகின்றன.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 6
#MahaPeriyava Maha Periyava’s message on Karthigai Deepam

We light up a series of earthen lamps on the day of the star of Kruttika in the month of Kaartigai. At that time we are to sing this sloka as given in the Shastraas:

Keedaa: Patangaa: Masagaascha Vrukchaa: Jale Stale Ye Image
Nivasanti Jeevaa: I Drushtvaa Pradeepam Na Cha Janma Baajaa Bavanti Nityam Svabasaa Hi Vipraa: II

This means, “We pray that, whosoever sees this lamp that we are lighting, they be worms, birds or mosquitoes or trees and such plants; all life forms which live in water or on earth
or may be human beings of whatever caste or creed; seeing this light may have the effect on them that all their sins are washed away and they may transcend the cycle of life and death and reach everlasting happiness”
Not only life forms in land and water. By saying ‘patangaa:’
Read 16 tweets
Dec 5
Until today I was under the belief that #Tansen was a Hindu! That little is my awareness of Indian History🤦🏽
Tansen was born in a Hindu family at Gwalior in present day MP as #Ramtanu His father Mukund Mishra, was a famous poet and a wealthy person. As a child Tansen could mimic Image
birds and animals perfectly. It is said that he used to scare many priests and commoners passing through the forests by imitating wild animals like tigers and lions. Legend has it that Tansen was once imitating a tiger when he was spotted by #SwamiHaridas a legendary saint and
musician cum poet. Swami Haridas recognized Tansen’s skills and accepted him as his disciple. He began his musical journey at a young age under Swami Haridas. He studied music under him for the next 10 years. Since Haridas was an exponent of the Dhrupad style of singing, Tansen
Read 15 tweets
Dec 5
#சுவாமி_ஹரிதாஸ் (பொ.ஆ1486-1516)
ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். ஒரு முறை இவர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த #புரந்தரதாசர் கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு, சரிகமபதநி சப்த ஸ்வரங்களைப் போதித்தார். இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில் Image
சிறந்து விளங்கிய பிரேமா கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தன் மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவனோ குடிகாரன், சூதாடி, இதைத் தாமதமாக
உணர்ந்த பட்டர், தவித்து மனம் மருகினார். ஆனால், பிரேமா மனம் தளரவில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்த அவள் ராமாயணம், பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டு வளர்ந்தாள். இந்நிலையில்
Read 16 tweets
Dec 5
#பக்தி பக்தர்களிடம் மிகுந்த பாசம் கொண்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் துளசி இலையையும் கையளவு நீரையும் அர்ப்பணிக்கும் பக்தனிடம் தன்னை முழுமையாக விற்று விடுகிறார் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

துளசி தல மாத்ரேண ஜலஸ்ய சுலு கேன வா
விக்ரீணீதே ஸ்வம் ஆத்மானம் பக்தேப்யோ பக்த வத்ஸல

துளசி இலையையும் Image
நீரையும் தனக்கு அர்ப்பணிப்பவனுக்கு தான் பட்டுள்ள கடனை திருப்பி செலுத்த வழி தெரியாமல் துளசி இலைகள் நீருக்கும் சமமான செல்வம் தன்னிடம் இல்லை என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நினைக்கிறார். இதனால் பகவான் தன்னையே தன் பக்தனுக்கு அர்ப்பணித்து கடனை அடைக்கிறார். இதன் மூலமாக ஒருவன் பகவான்
கிருஷ்ணரை, துளசி இலையைக் கொண்டும். சிறிதளவு நீரை கொண்டும் எளிதில் திருப்திப் படுத்தலாம் என்பது தெளிவாகிறது. அவர் #பகவத்கீதையில் கூறியதை போல் இலையோ பூவோ பழமோ நீரோ அர்ப்பணிக்கும் போது அவர் மிகவும் திருப்தி அடைகிறார். அவர் தம் பக்தனின் சேவையை முற்றிலுமாக ஏற்கிறார். மிக மிக ஏழ்மை
Read 5 tweets
Dec 4
#தசகம்_75
கம்ஸ மோக்ஷம்
1. மறுநாள் அதிகாலையில், பயந்த கம்ஸனின் ஆணைப்படி, மல்யுத்தத்திற்கான போட்டிகள் முரசொலி செய்து அறிவிக்கப்பட்டது. அதனைக் காண பல அரசர்கள் வந்தனர். நந்தகோபரும் உப்பரிகைக்குச் சென்றார். கம்ஸனும் உப்பரிகைக்குச் சென்றான். நீ அழகிய அலங்காரங்களுடன் பலராமனுடனும், Image
கோபர்களுடனும் மல்யுத்த களத்தை அடைந்தாய். அங்கு, குவாலயாபீடம் என்ற யானை உன்னை வழிமறித்து நின்றது.
2. வழிவிட்டுச் செல் என்று அந்த யானையைப் பணித்தாய். கோபமடைந்த யானைப் பாகனான ‘அம்பஷ்டன்’, யானையை உன்னை தாக்க ஏவினான். அந்த யானை விரைந்து உன்னைப் பிடித்தது. அதனிடமிருந்து விடுவித்துக்
கொண்டு அதன் மத்தகத்தில் அடித்தாய். கோபியரின் கலசம் போன்ற கொங்கைகளுடன் போட்டியிடும் அந்த யானையின் மத்தகத்தை அடித்து, அதன் காலடியில் மறைந்து, பிறகு சிரித்துக்கொண்டு வெளியே வந்தாய்.
3. யானைக்கு அருகில் இருந்தாலும், அதன் பிடியில் அகப்படாமல் நழுவி, வெகுதூரம் ஓடி, விளையாட்டாய் விழுவது Image
Read 25 tweets
Dec 4
#கடத்தூர்_அர்ச்சுனேஸ்வரர்_கோவில் திருப்பூர்
கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 9 இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட ImageImage
கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுவது போல கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் உள்ளன.
இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. 1000 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இக்கோவில் உள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொது மக்களின் பங்களிப்போடு இக்கோவில்
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(