#கடத்தூர்_அர்ச்சுனேஸ்வரர்_கோவில் திருப்பூர்
கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் 9 இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட
கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுவது போல கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் உள்ளன.
இவற்றில் கொழுமம் தாண்டேஸ்வரர் ஆலயம், காசிவிஸ்வநாதர் ஆலயம், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயம் ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. 1000 ஆண்டுகளுக்கு முன் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக தோன்றி, விக்கிரம சோழனை ஆட்கொண்ட இடத்தில் இக்கோவில் உள்ளது. சோழர்களின் கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. விக்கிரம சோழன் மட்டுமல்லாது பொது மக்களின் பங்களிப்போடு இக்கோவில்
கட்டப்பட்டிருக்கிறது. இதை இங்கு காணப்படும் கல்வெட்டுகள் உறுதிபடுத்துகின்றன. இங்கு அருள் பாலிக்கும் சிவபெருமான் மகிழ்ச்சியை அளிப்பதால் #மருதீசர் எனவும், பாவவினை என்னும் நோயை நீக்க மருந்தாகத் தோன்றியதால் #மருந்தீசர் என்றும், அர்ச்சுனன் வழிபட்டதால் #அர்ச்சுனேஸ்வரர் என்றும் பல்வேறு
நாமங்களில் அழைக்கப்படுகிறார். அமராவதி ஆற்றங் கரையில் அமைந்துள்ள 11 சிவமூர்த்த தலங்களில், கடத்தூர் மட்டுமே சுயம்பு திருமேனியை கொண்டது. பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர். பல் ஆண்டுகள்
பிறகு காரைத்தொழுவில் இருந்து இந்தப் பகுதி வழியாக இடையர் ஒருவர் பால் கொண்டு சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் கால் இடறி ஒரு குடம்பால் சிந்தியது. தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்ததால் மன்னன் விக்கிரம சோழனின் உத்தரவுப்படி அங்கிருந்த மூங்கில் புதர்கள், மருத மரம்
ஆகியவற்றை அகற்றிய போது சுயம்புவாக இருந்த சிவலிங்கத்தின் மீது வெட்டுப் பட்டு, ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அது அருகில் இருந்த அமராவதி ஆற்றில் கலந்து ஓடியது. செய்தி அறிந்து மன்னர் விக்கிரம சோழன் வந்து, தன் கைவிரல் மோதிரத்தால் ரத்தம் வடியும் இடத்தில் அழுத்த ரத்தம் நின்றது. இதையடுத்து
அந்த இடத்தில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்தை விக்கிரம சோழன் அமைத்துள்ளார். இன்றளவும் இங்குள்ள சிவலிங்கத்தின் தலைப்பாகத்தில் வெட்டுப்பட்ட காயத்தின் தழும்பு போன்ற அமைப்பை காண முடியும். சோழர் படைத்தளபதி நாக தோஷத்தால் பாம்பு கடித்து அவதிப்பட்ட போது, இங்குள்ள அம்மன் புற்றாக தோன்றி அருள்
புரிந்ததாக, குலோத்துங்க சோழன் மகளுக்கு மாங்கல்ய தோஷத்தால் திருமணத்தடை ஏற்பட்ட போது, அர்ச்சுனேஸ்வரர் தோஷம் நீக்கி அருள் புரிந்ததாக கர்ண பரம்பரை மற்றும் தல வரலாற்று செய்திகள் கூறுகின்றன. ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வளர்பிறை, பஞ்சமி திதி மற்றும் பவுர்ணமி திதியன்று திருமணத்
தடை நீங்க இக்கோவிலில் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் மாங்கல்ய தோஷம் நீங்க வேண்டி பெண்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனால் இத்திருத்தலம் திருமணத்தடைகள் நீக்கும் #தென்_திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது. கொங்கு சோழனான மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சிக்
காலத்தில் திரிபுவன சிங்கன் என்பவருக்கு ‘பிரமேகம்’ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட சர்க்கரை நோய் ஏற்பட்டது. அவர் கடத்தூர் மருந்தீஸ்வரரை வணங்கி வேண்டியதால் சர்க்கரை நோய் நீங்கி நலம் அடைந்தார். எனவே இறைவனுக்கு அமுது செய்ய நிலம் தானமாக வழங்கியதாக இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன
அர்ச்சுனேஸ்வரர் கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டது. சமசதுர வடிவிலான கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என 90 அடி நீளம் கொண்டது. அர்ச்சுனேஸ்வரர் கோவிலின் தெற்கு திசையில் இறைவனது வலது பக்கத்தில் கிழக்கு நோக்கி கோமதி அம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. மேலும்
இரு திருச்சுற்றுகள், இரு திருமுற்றங்கள், இரு திருவமுது மடங்கள், இரு வாசல்கள் என அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பம்சமாகும். பொதுவாக சிவன் கோவிலில் இறைவனுக்கு இடது புறமாக அம்மன் சன்னிதி அமைவது மரபு. ஆனால் கடத்தூரில் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்துக்கு வலது புறமாக 4 அடி உயரத்திருமேனி
கொண்டு, தனி சன்னிதியில் கோமதி அம்மன் அருள்பாலிக்கிறார். எனவே காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சியைப் போன்று கடத்தூர் கோமதியம்மனும் தனிச்சிறப்பு பெற்றவராய் திகழ்கிறார். சைவம், வைணவம் பேதம் இன்றி கருவறையின் மேற்கு கோஷ்டத்தில் இறைவனின் முதுகுப்பகுதியில் விஷ்ணு சன்னிதி அமைந்துள்ளது.
திருக்கோவில் திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, பைரவர் சன்னிதிகள் உள்ளன. சுவாமி சன்னிதியின் தெற்கு தேவ கோட்டத்தில் வெள்ளை நிறம் பளிங்குக் கல்லால் ஆன தட்சிணாமூர்த்தி சிலை உள்ளது. இந்த பளிங்கு திருமேனியானது காசியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறுகின்றனர்.
பொதுவாக சுயம்புலிங்கம் உள்ள கோவில்களில் நவக்கிரக சன்னிதி இருப்பதில்லை. இருப்பினும் இந்த திருக்கோவிலில் கோமதியம்மனின் தவத்தினை கண்ட சனிபகவான் தானும் தவமியற்றி வழிபட்டு வந்ததாக தல புராணம் சொல்கிறது. எனவே பக்தர்கள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்கள் மற்றும் ராகு, கேதுகளின் தோஷ காலங்கள்
உள்ளிட்ட இடர்பாடுகள் நிறைந்த காலங்களில் இங்கு தவமியற்றி நிற்கும் சனிபகவான், கால பைரவர் ஆகியோரை வணங்கி, பின் கோமதியம்மனை வணங்கி அர்ச்சுனேஸ்வரரை வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும்.
இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், பவுர்ணமி, அமாவாசை
மற்றும் தேய்பிறை அஷ்டமி, பைரவர் பூஜை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் பக்தர்களால் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாப்த பூர்த்தி ஆகியவையும் இங்கு கொண்டாடப் படுகிறது. ஆண்டு முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளி கோவில் அருகில் உள்ள அமராவதி ஆற்றின் நீரில் பட்டு பிரதிபலித்து
சுயம்புவாய் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள அர்ச்சுனேஸ்வரர் மீது படுவது சிறப்பம்சமாகும். சூரியன் திசை மாறும் காலங்களான உத்திராயணம், தட்சிணாயணம் காலங்களிலும் கூட சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பம்சமாகும்.
மேலும் ஆற்று
நீரில் படும் சூரிய ஒளி ஆற்றங் கரையைக் கடந்து 3 நிலை கோபுரம், நந்திதேவர், அர்த்தமண்டபம், மகாமண்டபம் வசந்த மண்டபம் கருவறை என 200 அடிக்கும் மேலாக பயணம் செய்து சிவலிங்கத்தின் மீது விழுவது அதிசயிக்கத்தக்க நிகழ்வாகும். அதிகாலையில் சூரிய பகவான் தன்கிரகணங்களை அர்ச்சுனேஸ்வரர் மீது
செலுத்தி வழிபடுவதால் இவ்விறைவனை வழிபடுவோருக்கு ராகு, கேதுவின் தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷமும் நீங்குவதாக ஐதீகம். அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத காலங்கள் தவிர மற்ற காலங்களில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது விழும் அதிசயத்தை காண முடிகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்
இருந்து 23 கிமீ தொலைவில் கணியூருக்கு அருகில் உள்ளது. காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடை திறந்திருக்கும். விஷேச தினங்களில் நடைதிறப்பு நேரம் மாறுபடும்.
ஓம் ஸ்ரீ அர்ச்சுனேஷ்வராய நமஹ
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 6
நூறாண்டுகளுக்கு முன்னர் வெளியான அருணாச்சல புராணம் எனும் பழைய புத்தகத்தில் வெளியான அருணாச்சல புராண படங்கள். படங்களுக்கான விளக்கக் குறிப்புகள் படங்களின் அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ImageImageImageImage
ImageImageImageImage
ImageImageImageImage
Read 5 tweets
Dec 6
#சிதம்பரம்_நடராஜர்
#Chidambaram_Natarajar
ஸ்ரீ சிவபெருமானை லிங்கமாக வடித்தே அனைத்து கோவில்களில் வழிபடுவது வழக்கம். சில தலங்களில் சிவ பார்வதி உருவம் வடிக்கப்பட்டு வணங்கப் படுகிறது. அனைத்து கோவில்களிலும் உற்சவராக பார்வதி தேவியுடன் சிவபெருமான் வீதியுலா வருவார், ஆனால் மூலவரே Image
உற்சவராக வீதியுலா வரும்
ஒரே ஆலயம் இந்த பூலோக கைலாயம் ஆன சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம் மட்டுமே!
மூலவரான ஸ்ரீ நடராஜ பெருமானின்
வேறு பெயர்கள், திருமூலநாதர் மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன். அம்பாள் இங்கே Image
உமையாம்பிகை என்றும் சிவகாமசுந்தரி என்றும் அழைக்கப் படுகிறார். இத்தலத்தின் தல விருட்சம்
தில்லைமரம் ஆகும். இந்த தலத்தின் தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
Read 48 tweets
Dec 6
#MahaPeriyava Maha Periyava’s message on Karthigai Deepam

We light up a series of earthen lamps on the day of the star of Kruttika in the month of Kaartigai. At that time we are to sing this sloka as given in the Shastraas:

Keedaa: Patangaa: Masagaascha Vrukchaa: Jale Stale Ye Image
Nivasanti Jeevaa: I Drushtvaa Pradeepam Na Cha Janma Baajaa Bavanti Nityam Svabasaa Hi Vipraa: II

This means, “We pray that, whosoever sees this lamp that we are lighting, they be worms, birds or mosquitoes or trees and such plants; all life forms which live in water or on earth
or may be human beings of whatever caste or creed; seeing this light may have the effect on them that all their sins are washed away and they may transcend the cycle of life and death and reach everlasting happiness”
Not only life forms in land and water. By saying ‘patangaa:’
Read 16 tweets
Dec 5
Until today I was under the belief that #Tansen was a Hindu! That little is my awareness of Indian History🤦🏽
Tansen was born in a Hindu family at Gwalior in present day MP as #Ramtanu His father Mukund Mishra, was a famous poet and a wealthy person. As a child Tansen could mimic Image
birds and animals perfectly. It is said that he used to scare many priests and commoners passing through the forests by imitating wild animals like tigers and lions. Legend has it that Tansen was once imitating a tiger when he was spotted by #SwamiHaridas a legendary saint and
musician cum poet. Swami Haridas recognized Tansen’s skills and accepted him as his disciple. He began his musical journey at a young age under Swami Haridas. He studied music under him for the next 10 years. Since Haridas was an exponent of the Dhrupad style of singing, Tansen
Read 15 tweets
Dec 5
#சுவாமி_ஹரிதாஸ் (பொ.ஆ1486-1516)
ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். ஒரு முறை இவர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த #புரந்தரதாசர் கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு, சரிகமபதநி சப்த ஸ்வரங்களைப் போதித்தார். இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில் Image
சிறந்து விளங்கிய பிரேமா கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தன் மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவனோ குடிகாரன், சூதாடி, இதைத் தாமதமாக
உணர்ந்த பட்டர், தவித்து மனம் மருகினார். ஆனால், பிரேமா மனம் தளரவில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்த அவள் ராமாயணம், பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டு வளர்ந்தாள். இந்நிலையில்
Read 16 tweets
Dec 5
#பக்தி பக்தர்களிடம் மிகுந்த பாசம் கொண்டுள்ள ஸ்ரீகிருஷ்ணர் துளசி இலையையும் கையளவு நீரையும் அர்ப்பணிக்கும் பக்தனிடம் தன்னை முழுமையாக விற்று விடுகிறார் என்று இந்த சுலோகம் கூறுகிறது.

துளசி தல மாத்ரேண ஜலஸ்ய சுலு கேன வா
விக்ரீணீதே ஸ்வம் ஆத்மானம் பக்தேப்யோ பக்த வத்ஸல

துளசி இலையையும் Image
நீரையும் தனக்கு அர்ப்பணிப்பவனுக்கு தான் பட்டுள்ள கடனை திருப்பி செலுத்த வழி தெரியாமல் துளசி இலைகள் நீருக்கும் சமமான செல்வம் தன்னிடம் இல்லை என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நினைக்கிறார். இதனால் பகவான் தன்னையே தன் பக்தனுக்கு அர்ப்பணித்து கடனை அடைக்கிறார். இதன் மூலமாக ஒருவன் பகவான்
கிருஷ்ணரை, துளசி இலையைக் கொண்டும். சிறிதளவு நீரை கொண்டும் எளிதில் திருப்திப் படுத்தலாம் என்பது தெளிவாகிறது. அவர் #பகவத்கீதையில் கூறியதை போல் இலையோ பூவோ பழமோ நீரோ அர்ப்பணிக்கும் போது அவர் மிகவும் திருப்தி அடைகிறார். அவர் தம் பக்தனின் சேவையை முற்றிலுமாக ஏற்கிறார். மிக மிக ஏழ்மை
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(