#சுவாமி_ஹரிதாஸ் (பொ.ஆ1486-1516)
ஸ்ரீரங்கநாதரின் சன்னிதியில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தவர் கிருஷ்ண பட்டர். ஒரு முறை இவர் இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்த #புரந்தரதாசர் கிருஷ்ண பட்டரின் மகள் பிரேமாவுக்கு, சரிகமபதநி சப்த ஸ்வரங்களைப் போதித்தார். இதன் பின்னர், கர்நாடக சங்கீதத்தில்
சிறந்து விளங்கிய பிரேமா கோயிலில் ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வந்தாள். அவள் பாடுவதைக் கேட்கும் அனைவரும் மெய் மறப்பார்கள். இந்த நிலையில் ஏழ்மை நிலையில் இருந்த கிருஷ்ணபட்டர் தன் மகளை தூரத்து உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். அவனோ குடிகாரன், சூதாடி, இதைத் தாமதமாக
உணர்ந்த பட்டர், தவித்து மனம் மருகினார். ஆனால், பிரேமா மனம் தளரவில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அளவற்ற பக்தி கொண்டிருந்த அவள் ராமாயணம், பாகவதம் ஆகியவற்றைத் தொடர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராமகிருஷ்ணன் எனப் பெயரிட்டு வளர்ந்தாள். இந்நிலையில்
மது போதையில் காவிரி வெள்ளத்தில் சிக்கி இறந்தான் அவன் கணவன். மகளின் நிலை குறித்த கவலையால் மனம் உடைந்து போன கிருஷ்ண பட்டரும் இறந்து போனார். கணவனையும், தந்தையையும் இழந்த பிரேமா, ஸ்ரீரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல் குழந்தையுடன் வாரணாசிக்குச் சென்றாள். அங்கு தர்மசத்திரம் ஒன்றில்
தொண்டாற்றி வந்தாள். காசியில் அனைவரும் அவளை, #பிரேமாபாய் என்றே அழைத்தனர். அப்போது அவளின் மகன் ராமகிருஷ்ணனுக்கு வயது பத்து. தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசுவதில் திறன் பெற்றிருந்தான் அவன். மேலும், தாயிடம் கர்நாடக சங்கீதமும் கற்று வந்த ராமகிருஷ்ணன் உபன்யாசம், கலாட்சேபம்
போன்றவற்றைக் கூறக் கேட்டு ஸ்ரீகிருஷ்ண பக்தனாகவும் விளங்கினான். ஒருநாள் சத்திரத்துக்கு அடியார்கள் சிலர் வந்தனர். அவர்களை பக்தியுடன் வரவேற்றாள் பிரேமா பாய். இவர்களுக்கு உணவளித்து உபசரிக்கலாம் ஆனால் கங்கைக் கரையில் தினமும் நடக்கும் பாகவத உபன்யாசத்தைக் கேட்க முடியாது. விருந்தினர்களை
உபசரிக்காமல் இருப்பது தவறு. சிறிது நேரம் யோசித்தவள் அடியவர்களுக்கு தான் உணவளித்து, பாகவதம் கேட்க மகன் ராமகிருஷ்ணனை அனுப்பி பிறகு அவனிடம் விவரமாய் கேட்டுத் தெரிந்து கொள்வது என்று முடிவு செய்தாள். அதன்படி மகனை பாகவதம் கேட்க அனுப்பினாள். உபன்யாசம் முடிந்து வீடு திரும்பிய
ராமகிருஷ்ணனிடம், உபன்யாசத்தில் இன்று பவுராணிகர் என்ன சொன்னார்
என்று ஆவலுடன் கேட்டாள். அம்மா! கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு, வளர்ப்பு, லீலைகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் தசம ஸ்கந்தம் பற்றி விளக்கினார். குழந்தை கண்ணன் புழுதியில் விளையாடியது, வெண்ணெயைத் திருடி உண்டது, யசோதா
துரத்தியும் பிடிபடாமல் ஓடியது ஆகியவற்றை விவரித்தார். கோலைக் கையிலெடுத்து அடிக்கப் போவதாய் யசோதா பயமுறுத்துகிறாள். குழந்தைக் கண்ணன் அழத் தொடங்குகிறான். ஏதேனும் ஒரு வகையில் கண்ணனைத் தண்டிக்க எண்ணி அவனை உரலோடு பிணைத்துக் கட்டுகிறாள் யசோதா. ஆனால், குறும்புக்காரக் கண்ணனோ கட்டிய
உரலையும் சேர்த்து இழுத்தபடி வீட்டின் பின்புறம் சென்று ரெட்டையாக நின்ற மருத மரங்களுக்கு இடையே புகுந்தான். உபன்யாசத்தில் இன்று இதைத்தான் சொன்னார் என்றான். இதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட பிரமோ பாய், மெய் மறந்தாள். நான் கண்ணனின் காலத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொண்டாள். கண்ணா! உன்னையா
உரலில் கட்டிப் போட்டார்கள்?கயிறு இறுக்கி உன் வயிறு வலிக்குமே நீ மர இடுக்குகளில் நுழைந்து செல்லும் போது ஏதாவது பூச்சிகள் உன்னைக் கடித்தால் என்னாவது? என்னால் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. இப் போதே கயிறை அவிழ்த்து விடுகிறேன் என்றவாறு கங்கையை நோக்கி ஓடினாள். அம்மா
அம்மா என்று கூவியபடி சிறுவன் ராமகிருஷ்ணனும், அவளது பக்தியைக் கண்டு வியந்த அடியவர்களும் அவளைப் பின் தொடர்ந்தனர். பிரேமா பாய் கங்கை நதியில் குதித்தாள். அவள் விழுந்த இடத்தில் இருந்து ஓர் ஒளிப் பிழம்பு விண்ணை நோக்கிச் சென்றது. ஜோதி வடிவாகச் செல்லும் பிரேமா பாயை அனைவரும் வணங்கினர்.
தந்தையைக் காவிரியிலும் தாயை கங்கையிலும் இழந்த ராமகிருஷ்ணன், தான் பிறந்த பூமியான ஸ்ரீரங்கத்துக்கு வந்தான். அங்கு அரங்கன் சன்னிதியில் கிருஷ்ண சைதன்ய மகாபிரபு பக்தர்களுடன் ஆடிப்பாடி ஆனந்த நிலையில் இருப்பதைக் கண்டு பரவசமுற்றான். நாடெங்கும் போய் பக்தியைப் பரப்பிய மகானான சைதன்ய மகா
பிரபுவுடன் இணைந்து அவரைப் பின்தொடர்ந்தான். மொகாலய படையெடுப்பின் போது, பெர்ஷியா நாட்டுக்குச் சென்று மறைந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, பெர்ஷியன் சங்கீதத்தைக் கற்றுத் தேறிய ராமகிருஷ்ணன் திரும்பி வந்ததும் குருவின் ஆணைப்படி பிருந்தாவனத்தை அடைந்து ஸ்ரீகிருஷ்ண நாம
சங்கீர்த்தனம், பாகவத சேவை என்று தனது வாழ்நாளைக் கழித்தான். இந்த ராமகிருஷ்ணனே பிற்காலத்தில் தீட்சை பெற்று, #ஸ்வாமி_ஹரிதாஸ் என்ற பெயரில் புகழ்பெற்றார். இவர் உருவாக்கியதே ஹிந்துஸ்தானி சங்கீதம். அக்பர் சபையில் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த, தான்சேன் சங்கீதம் பயின்றது ஸ்வாமி
ஹரிதாஸிடம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம்🙏🏻.

விஷ்ணுவை பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் படிக்கலாம் srimahavishnuinfo.blogspot.com

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Dec 7
Today is #DattatreyaJayanti #DattaJayanti
Lord Dattatreya is one of the 24 Vishnu’s Incarnations. Lord Dattatreya was born of Rishi Atri and Anausya. The name Dattatreya can be divided into two words, Datta (means Giver) and Atri (Sage Atri). Lord Dattatreya considered as guru Image
of environmental education, gained enlightenment by his observation from surrounding, which provided him 24 gurus. These gurus explain the problems of mundane attachments, and teach the path towards the spiritual self-realization of the Supreme. The core message of Dattatreya is: Image
“Never judge by surface appearances but always seek a deeper Truth”.
Lord Dattatreya has three faces, six hands. The three faces represented the Trinity (Brahma, Vishnu and Shiva). Each pair of hands carries two of the symbols of the three deities. The four dogs who are with Him
Read 34 tweets
Dec 7
#கார்த்திகை_தீப_ஸ்பெஷல் #கணம்புல்ல_நாயனார் தில்லை வீதியெங்கும் மூவாயிரவர் திருமனைகளில் கார்த்திகை தீபங்கள் வைக்க தொடங்கி இருந்தனர், அவற்றை கண்டதும் நாயனாருக்கு இதயம் வேகமெடுத்து துடித்தது. சர்வேஸ்வரா! தீபம் வைக்கத் தொடங்கி விட்டார்களே உங்கள் ஆலயம் தீபமின்றி இருளுமே, என்ன செய்வேன் Image
என்று வாய்விட்டு பதறினார். வடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி மக்களுக்குத் தலைவனாக விளங்கியவர் சிவனருட்செல்வர் என்னும் நாயனார். அவர் கோவில்களுக்கு விளக்கேற்றுவதை தம் பணியாக செய்து வந்தார். நற்பணி செய்து வந்த இவருக்கு
நாளடைவில் வறுமை தொற்றியது. தன் நிலபுலன்களை விற்று அங்கே இருக்க பிடிக்காமல் தேசாந்திரியாக சென்ற அவர் தில்லை வந்தார். அவ்விடம் மிகவும் பிடித்து போக அங்கேயே தங்க முடிவு செய்தார். தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள #திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை
Read 14 tweets
Dec 6
#Kashi_Visit
If one goes to Kashi on a pilgrimage it is said that one must give up eating a fruit, a vegetable, and a leaf forever! What’s the reason behind that?
According to the Shastras, nowhere it is said if one goes to Kashi one must give up these.
Whatever was told in the Image
Shastras has been either knowingly or unknowingly changed by some one in their favor with half knowledge.
What do the scriptures say about Kashi Kshetra?
Go and take a holy dip in the Ganges at Kashi. Leave #Kayapeksha (Kaya means the physical body and Apeksha is desire) and
#Phalapeksha (Phalapeksha means the desire on the results of the activities that we are supposed to do). So the elders said, be with the thought of devotion on God alone. Over time it has become
literally the Kaya (in Telugu, a Vegetable or an unripe fruit)
and Phala (a ripened
Read 6 tweets
Dec 6
நூறாண்டுகளுக்கு முன்னர் வெளியான அருணாச்சல புராணம் எனும் பழைய புத்தகத்தில் வெளியான அருணாச்சல புராண படங்கள். படங்களுக்கான விளக்கக் குறிப்புகள் படங்களின் அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ImageImageImageImage
ImageImageImageImage
ImageImageImageImage
Read 5 tweets
Dec 6
#சிதம்பரம்_நடராஜர்
#Chidambaram_Natarajar
ஸ்ரீ சிவபெருமானை லிங்கமாக வடித்தே அனைத்து கோவில்களில் வழிபடுவது வழக்கம். சில தலங்களில் சிவ பார்வதி உருவம் வடிக்கப்பட்டு வணங்கப் படுகிறது. அனைத்து கோவில்களிலும் உற்சவராக பார்வதி தேவியுடன் சிவபெருமான் வீதியுலா வருவார், ஆனால் மூலவரே Image
உற்சவராக வீதியுலா வரும்
ஒரே ஆலயம் இந்த பூலோக கைலாயம் ஆன சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயம் மட்டுமே!
மூலவரான ஸ்ரீ நடராஜ பெருமானின்
வேறு பெயர்கள், திருமூலநாதர் மூலட்டானேசுவரர், சபாநாயகர், கூத்தப்பெருமான், விடங்கர், மேருவிடங்கர், தட்சிணமேருவிடங்கர், பொன்னம்பல கூத்தன். அம்பாள் இங்கே Image
உமையாம்பிகை என்றும் சிவகாமசுந்தரி என்றும் அழைக்கப் படுகிறார். இத்தலத்தின் தல விருட்சம்
தில்லைமரம் ஆகும். இந்த தலத்தின் தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
Read 48 tweets
Dec 6
#MahaPeriyava Maha Periyava’s message on Karthigai Deepam

We light up a series of earthen lamps on the day of the star of Kruttika in the month of Kaartigai. At that time we are to sing this sloka as given in the Shastraas:

Keedaa: Patangaa: Masagaascha Vrukchaa: Jale Stale Ye Image
Nivasanti Jeevaa: I Drushtvaa Pradeepam Na Cha Janma Baajaa Bavanti Nityam Svabasaa Hi Vipraa: II

This means, “We pray that, whosoever sees this lamp that we are lighting, they be worms, birds or mosquitoes or trees and such plants; all life forms which live in water or on earth
or may be human beings of whatever caste or creed; seeing this light may have the effect on them that all their sins are washed away and they may transcend the cycle of life and death and reach everlasting happiness”
Not only life forms in land and water. By saying ‘patangaa:’
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(