*கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து,
புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.*
*உங்களுடைய தர்மமாக,* ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம்.
*ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும்,*
சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.
*புண்ணியத்தை விளக்கும் கதை :-*
ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர்.
எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான்.
புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்... என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன்,
எமதர்மனைப் பார்த்து, *இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்!*
அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே... என்று கேட்டான்.
அதற்கு எமதர்மன்,
இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர்.
அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.
மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர்.
ஒரு நாள்,
சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது,
இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர்,
அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர்.
அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்... என்றான் எமதர்மன்.
தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, சிவபூஜை செய்தவரை விட, *சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத் தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்...* என்று சொல்லி,
எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம்.
அதனால் தான்,
எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்... என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.
பலருக்கும் தங்கள் கணவன்மார்கள் தங்களை மதிப்பதில்லை,
தங்களிடம் உரிய அன்பைச் செலுத்துவதில்லை என்று நினைப்பதுண்டு.
சொல்லப்போனால் இந்த குறைபாடு தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தோன்றாத தம்பதிகளே இல்லை எனலாம்.
நேத்ராபதி என்றால் தன் மனைவியை கண் மணிபோல் வைத்துக் காப்பாற்றும் இமை போன்ற கணவனையும் குறிப்பதால் இத்தகையோர் வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் நலம்.
செம்பியன்களரி திருத்தலத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் இருகரங்களிலும் இரு தாமரை மலர்களை ஏந்திய படி காட்சி அளிக்கிறாள்.
இது கணவனும் மனைவியும் இரு கண்களாய் இணைந்து ஒன்றுக்கொன்று இணையாய் மலர வேண்டியவர்களே என்ற ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்வதாகும்.
காமாக்ஷி என்றால் கணவனைத் தவிர வேறு ஒருவரையும் மனதினாலும் தீண்டாத நேத்ரங்களை உடையவள் என்ற பொருளையும் குறிப்பவளே காமாட்சி அம்மன்.