பலருக்கும் தங்கள் கணவன்மார்கள் தங்களை மதிப்பதில்லை,
தங்களிடம் உரிய அன்பைச் செலுத்துவதில்லை என்று நினைப்பதுண்டு.
சொல்லப்போனால் இந்த குறைபாடு தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தோன்றாத தம்பதிகளே இல்லை எனலாம்.
நேத்ராபதி என்றால் தன் மனைவியை கண் மணிபோல் வைத்துக் காப்பாற்றும் இமை போன்ற கணவனையும் குறிப்பதால் இத்தகையோர் வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் நலம்.
செம்பியன்களரி திருத்தலத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் இருகரங்களிலும் இரு தாமரை மலர்களை ஏந்திய படி காட்சி அளிக்கிறாள்.
இது கணவனும் மனைவியும் இரு கண்களாய் இணைந்து ஒன்றுக்கொன்று இணையாய் மலர வேண்டியவர்களே என்ற ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்வதாகும்.
காமாக்ஷி என்றால் கணவனைத் தவிர வேறு ஒருவரையும் மனதினாலும் தீண்டாத நேத்ரங்களை உடையவள் என்ற பொருளையும் குறிப்பவளே காமாட்சி அம்மன்.