பூலோகத்தில் ஒரு தெருவில் செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் வசித்து வந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தன் கடையில் ஓர் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து வணங்கி வந்தார். செல்வம் இல்லா விட்டாலும் சந்தோஷத்துடனும், மன அமைதியுடனும் இருந்து வந்தார்.
செல்வந்தரோ தினம் பல மணி நேரம் பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்து வந்தாலும், பல தலைமுறைக்குக் காணும் அளவு செல்வம் இருந்தும், நிம்மதியின்றி வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் நாரதர் விஷ்ணுவைப் பார்த்து, அந்த செல்வந்தர் சிறந்த பக்திமானாக இருக்கிறார். தினம் பூஜை புனஸ்காரம் என்று இருக்கிறார்.
அவர் நிம்மதியாய் வாழ ஏதாவது வழி செய்யக் கூடாதா? என்று கேட்டார்.
விஷ்ணுவும் சம்மதித்து அவரிடம், நீ பூலோகத்துக்குச் சென்று, நான் நாராயணனிடமிருந்து வருகிறேன் என்று கூறு. அதற்கு அவர் தற்போது நாராயணன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என கேட்பார்.
நீ அவர் தற்போது ஒரு ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார் எனச் சொல் என்று கூறி பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார்.
அப்படியே மறக்காமல் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடமும் சென்று விட்டு வாரும் என்றார்.
நாரதரும் முதலில் செல்வந்தர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். நீங்கள் யார்? என்று செல்வந்தர் கேட்க, தான் நாராயணனிடமிருந்து வருவதாகக் கூற, தற்போது நாராயணன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
என அவர் கேட்க,
விஷ்ணு கூறியபடியே நாரதரும் கூற அதற்கு அந்த செல்வந்தரோ, அது எப்படி முடியும்? இது நடக்கிற காரியமா? எனச் சிரித்தார்.
அடுத்து அந்தச் செருப்புத் தொழிலாளியை பார்க்கச் சென்றார் நாரதர்.
அவரிடமும் இந்த சம்பாஷணை நடைபெற்றது.
ஆனால் கடைசியாக பதிலுக்கு அந்த செருப்புத் தொழிலாளி, இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தைச் சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தையே தன் வாயில் காண்பித்தவர்... அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா? என்று பதிலளித்தார்.
இதனை அப்படியே நாராயணனிடம் வந்து சொன்ன நாரதரிடம் கடவுள் பக்தி என்பது பூஜை புனஸ்காரங்கள் செய்வது மட்டுமில்லை.
இறைவனின் பாதத்தைப் பூரண நம்பிக்கையுடன் நீயே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்தி.
இப்பொழுது தெரிகிறதா ஏழையின் நிம்மதிக்குக் காரணம் என்ன என்று என்றார் நாராயணர்.
காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத்தில் கலந்துவிடுகிறதோ அதுபோல் கடவுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும்.
நமக்கு அனுக்கிரஹம் செய்கிற பரமாத்மாவினிடத்தில் தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்குக் காரணமே இருக்கக்கூடாது.
பக்தி செய்கிறேன் செல்வத்தைக் கொடு என்று வியாபாரமாக்காமல், மனத்தூய்மையுடன் உண்மையான பக்தி செலுத்தினால் நாம் எப்போதும் கடவுளருகிலேயே இருக்கலாம். நிம்மதியான, நிறைவான வாழ்க்கையும் வாழலாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
எம்.எஸ்.அம்மாவுக்கு 'யுனைடட் நேஷன்ஸ்'ல் பாட வாய்ப்பு வந்தது. அவர் பெரியவாளிடம் வந்து தெரிவித்து ஆசி வேண்டி நின்றார்.
அவரும்," இது உனக்கு மட்டும் கிடைத்த கௌரவம் இல்லை; இந்திய மண்ணுக்கே கிடைத்த பெருமை. தெய்வீக இசைக்குக் கிடைத்த பெருமை. வெற்றிக் கொடி நாட்டி வா!" என்று ஆசி கூறி அனுப்பினார்.
அப்போதுதான் அது சர்வதேச அரங்கமாக இருப்பதால் அங்கு பாட 'மைத்ரீம் பஜத' என்ற பாட்டை பெரியவா எழுதிக் கொடுத்தார். அது பெரியவா உபதேசப் பாடல். பிரபல இசை மேதை வஸந்த் தேசாய் என்பவர் மெட்ட மைத்துக் கொடுத்தார்.
தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன.
தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன் எடுத்துரைத்தவர் பாரதி.
ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது.
சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட தமிழர், பாரதி.
ஸ்ரீ பவளவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ பவளவண்ணப் பெருமாள் திருக்கோவில், திருப்பவளவண்ணம் திவ்யதேசம், காஞ்சிபுரம்.
1
திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் உள்ளது.
2
வரலாறு
காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள்.
ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது,
மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,
சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, ராவணனை சந்தித்து அறிவுரை வழங்கியது, இலங்கையை எரித்தது- என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.
திருக்கழுக்குன்றம் சிவன் கோயிலின் தெப்பக்குளத்தில் பன்னிரண்டு ஆண்டுக்குக்கொருமுறை கடலின் ஆழ்கடலில் காணும் சங்கு உற்பத்தியாகி வெளி வருகிறது.
இவற்றை சிவாச்சாரியார்கள் சேகரித்து மக்கள்பார்வைக்கு வைத்துள்ளனர். இங்குள்ள மலையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போது கழுகு வட்டமிடும்
2 கர்னாடகா சிவகங்கை
தமிழநாட்டின் சிவகங்கையைப் போல் கர்னாடகாவிலும் ஒரு சிவகங்கை உண்டு. பங்களூரிலிருந்து 50 கிமீட்டர் தொலைவில் உள்ளது. இது குன்றோடு கூடிய ரம்மியமான இடம். இக்குன்றில் கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்குன்றில் மகர சங்கராந்தியின் போது ஒரு அதிசயம் நடக்கும்.
‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்.. பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.
எது நடந்தாலும், என்ன நடந்தாலும் அவைகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே ‘பொறுமை’
எதற்கும் உணர்ச்சி வசப்படாத தன்மையே ‘பொறுமை’ எதையும் சகித்துக் கொண்டு போவோர் பொறுமையாக இருக்க முடியும்.
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பைக் கண்டு பிடித்தார்.
ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது.
அப்போது எடிசன் எப்படி நொந்து போய் இருப்பார்...?
அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சம்பவம்...