வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரர் போன்ற மகான்கள் வழிபட்ட தலம் கர்நாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள தொட்டமளூர் அப்ரமேயப் பெருமாள் கோயில். ஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில் தவழும் அதே திருக்கோலத்தில் இங்கே தவழ்கிறான் கண்ணன். நான்காம்
நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இந்தக் கோவிலைக் கட்டி உள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப் படுகின்றன. கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனத்தைக் காணலாம். இங்கு மூலவராக மூன்றடி உயரத்தில் சாளக்கிராமக்
கல்லில் வடிவமைக்கப்பட்ட ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை ராமர் வழிபாடு செய்துள்ளதால் ‘ராம அப்ரமேயர்’ என்று பெயர். ‘அப்ரமேயன்' என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்' என்று பொருள். இந்த ஊருக்கு வேறு சில பெயர்களும் உள்ளது
தக்ஷிண அயோத்தியை, சதுர் வேத மங்களபுரம், ராஜேந்திர
சிம்ஹ நகரி ஆகியவை. இந்த ஆலயம் இரண்டு அடுக்கு ஆலயங்களாக உள்ளது. ஆலயத்தில் நுழைந்த உடன் எதிரில் தெரிவது அப்ரமேயர் சன்னிதி. அற்புதமான உருவ அமைப்பில் சாலிக்கிராம கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள மூலவர் தன் கைகளில் சங்கு மற்றும் சக்கராத்தை ஏந்தியும் மற்ற இரண்டு கைகளை இரண்டு முத்திரைகளைக்
காட்டியவாறும் நின்ற கோலத்தில் அருள் புரிகிறார். அவரைப் போன்ற வடிவமைப்பில் உள்ள உத்சவ மூர்த்தி ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் காட்சி தருகிறார். ஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள
விஷ்ணு தீர்த்தக் குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக் கிழமைகளில் மாலை
வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.
அடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்த வண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்
பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார். சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல
நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளார். அந்த பிராகாரத்திலேய தொடர்ந்து நடந்து வந்தால் ராமபிரான் சீதை மற்றும் லஷ்மணரோடு இருப்பதைக் காணலாம். சீதையுடன் ராமபிரான் அமர்ந்து இருக்க லஷ்மணர் கை கூப்பி அவர்களை வணங்கி
நிற்க ஹனுமார் கீழே அமர்ந்து அவர்களை கும்பிட்டவாறு உள்ளார். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோவில் மூடப்பட்டு இருந்தது. அதனால் அவர் வெளியில் இருந்தபடியே #ஜகத்தோதாரணா_அடிசிதள_யசோதா என்னும் கீர்த்தனையைப் பாடினார். ஆச்சரியம், கோவில் கதவு திறந்து
கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப் பார்த்தான். அதனால்தான் இன்றும் இத் திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்த வண்ணம் உள்ளார். நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில்
துலாபாரம் உள்ளது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால்
ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள். இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும்
நடைபெறுகிறது. இன்றும் அர்த்த ஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது.
இந்த ஆலயம் அமைந்து உள்ள மாலூரைக் குறித்து ஒரு அற்புதமான புராணம் உள்ளது. முன்னொரு காலத்தில் இங்கு ஒரு பெரிய நதி ஓடிக் கொண்டு இருந்ததாகவும், இந்தப் பகுதியை ஆண்டு வந்த
தமிழ் மன்னனை ஒரு யுத்தத்தில் தோற்கடித்த பகை மன்னன் அவனைக் கொல்லாமல் கை கால்களை மட்டும் வெட்டி முடமாக்கி விட்டு சென்று விட்டானாம். ஆனால் அந்த மன்னன் பெரும் கடவுள் பக்தி கொண்டவன்.
ஆகவே அவன் மனம் தளராமல் இங்கு பகவான் பாசுரங்களை துதித்தவாறு அந்த நதிக் கரையிலேயே கிடக்க அதிசயமாக அவன்
கைகால்கள் மீண்டும் முளைத்தன. ஆகவே தானியங்கள் முளை விழுந்து வளர்ந்து செடியாவதைப் போல மீண்டும் அவயங்கள் முளைக்கக் காரணமான அந்த ஊரை முளை வந்த ஊர் எனக் கூறி முளையூர், முலயூராகி, முளையூர் பேச்சு வாக்கில் மலயூராகி, மாலூராகி உள்ளது. இந்த கோவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்
என்று சொல்ல படுகிறது. இந்த கோவிலில் பெருமாள், தாயார், கிருஷ்ணன் சன்ன்னதிகள் தவிர வைகுந்தநாத சுவாமி, ஆழ்வார்கள், ராமானுஜர், கூரத்தாழ்வார், வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள முனிகளுக்கு தனி சன்னதிகள் உள்ளது. பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
சென்னப்பட்டினா. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் உள்ளது. சென்னை மைசூர் ரெயிலில் சென்று சென்னபட்டினா ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் பயணம் செய்தால், 10 நிமிடத்தில் கோவில் வாசலில் இறங்கலாம்.
காலை 8.30 முதல் மதியம் 12.30 மணி, மாலை 5.30 முதல் இரவு 8.30
மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் .
ஆலய விலாசம்:APRAMEYA AND NAVANEETHA KRISHNA TEMPLE,
Channapatna Taluk,
Dodda Mallur,
Bangalore District,
Pin :571501
Telephone: Sri Embar Venu : 09448077348.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
இந்த ஸ்தலம் ஹாசனில் இல்லை. பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் வழியில் சென்னபட்னா என்னும் ஊரில் மெயின் ரோடிலேயே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீமடம் எசையனூரில் முகாம் இட்டிருந்தது. வந்திருந்த எல்லா பக்தர்களுக்கும் காலையில் இருந்தே தரிசனம் கொடுத்துக் கொண்டும், சில பேர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டும் இருந்தார்கள் பெரியவர்.
பிற்பகல் மணி
இரண்டு ஆகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலில், காலையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து ஓர் அடி கூட நகர்ந்து விடாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது அந்தக் கிராமத்தில் இருந்து சிப்பாய், வெங்கடேசன் என்று இரண்டு பேர் வந்தனர். தினமும் தரிசனத்துக்கு வந்து பெரியவாளுக்கு அறிமுகம்
ஆனவர்கள். இருவரும் நேரே பெரியவாளிடம் போனார்கள்.
"இதப்பாரு..இப்ப மணி என்ன தெரியுமா? பன்னண்டுக்கு மேலே ஆச்சு. பொழுது விடிஞ்சதிலேர்ந்து ஒரு வாய் தண்ணி கூடக் குடிக்காம உட்கார்ந்திருக்கியே? ஏன் பட்டினி கிடக்கே? போய் சாப்பிடு" என்றார்கள்.
மெய்ப்பணியாளர்கள் திகைத்துப் போய் விட்டனர்.
துவம்சம் செய்ய ராவணனது பல சேனாதிபதிகள், மகன்களான இந்திரஜித் உட்பட பலர் மரணம் அடைந்தனர். ராவணன் மிகுந்த கவலையடைந்து இவர்களை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்த போது, பாதாள லோகத்தில் இருந்த அஹிமஹி ராவணர்களை நினைக்க உடனே மஹிராவணன் ராவணன் முன் தோன்றி, நண்பா ராவணா என்னை நினைத்து அழைத்தது
ஏனோ? உன் முகமும் கவலையில் உள்ளதே என வினவினான். ராவணன் சூர்ப்பனகை மானபங்கம் தொடங்கி தான் சீதாதேவியை சிறைப் பிடித்தது, ஜடாயு வதம், மாதா சீதாவின் பிடிவாதம், மற்றும் வானர ஹனுமன் வந்தது, இலங்கையை எரித்தது, இப்போது ஶ்ரீராமன் வானரப் படையுடன் போர் செய்ய வந்து அரக்கர் கூட்டத்தையும்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
இறையுணர்வை அடைய நாவின் முக்கியத்துவம் வைஷ்ணவ பரம்பரையில் ஒன்றான #கௌடீய_ஸம்பிரதாயத்தில் பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே சமயம் உயர்ந்த இலக்கான தூய கிருஷ்ண பக்தியை அடைவதற்கு இடையூறாக இருக்கும் இதர
விஷயங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப் படுகிறது. கிருஷ்ண உணர்வின் முக்கிய செயல்களான திருநாம உச்சாடனம், கிருஷ்ண பிரசாதத்தை ஏற்று மதித்தல் ஆகிய சேவைகள் நாவினால் செய்யப்படுவதால்,
ஸேவோன் முகே ஹி ஜிஹ்வாதௌ, பக்தித் தொண்டு நாவிலிருந்தே ஆரம்பமாவதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ண
பக்தியை அடைவதற்கு நாவே முதல்படியாகத் திகழ்கிறது. மூவகை குணங்களும் உணவுகளும் ஸத்வம், ரஜோ, தமோ ஆகிய முக்குணங்களாலான பௌதிக உலகில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என இங்கு வாழும் அனைத்து ஜீவராசிகளும் இந்த முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றனர். நாம் விரும்பி
#காஞ்சிபுரம்_பவள_வண்ணர்_கோவில்
ஸ்ரீ பவளவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ பவளவண்ணப் பெருமாள் திருக்கோவில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது. காஞ்சி புராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது.
பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப் போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப் பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை அழித்து பெருமாள் ரத்தம் தோய நின்றார். இவ்வாறு ரத்தம் தோய பிரவாளேச வண்ணராக நின்றதால்
பிரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார். இத்தலத்தின் இறைவன் பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி பவள வல்லி என்ற பெயரில் தனிக்கோவில் கொண்டுள்ளார். இத்தலத் தீர்த்தம் சக்கர தீர்த்தம். விமானம் பிரவாள விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. இறைவனின்
சிறுவயதில் கடவுள் மறுப்பு கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும்
பதில், “வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.” இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு சொல்கிறார் என்று தோன்றும்.
“நீ ஏதோ டபாய்க்கிற” என்பேன்
“நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை
எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான்” என்பார். அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும் போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக் கொள்ளச் சொல்ல மாட்டார். அவர் வேண்டிக் கொள்ளச் சொல்லுவது, நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ என்பார். இவை
#தீபம்_விளக்கு எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம். சகல விதமான செல்வங்களை சுகபோகங்களை விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். குல தெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில்
கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும். கணவன்-மனைவியிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெய்யால் விளக்கேற்ற வேண்டும். தேங்காய் எண்ணெய்யால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசு நெய்யால்
விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது. கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலை, தொல்லைகளை, பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெய்யின்