கேரளாவில் சமீபத்தில் துவங்கி நடந்து வரும் பன்னாட்டு திரைப்பட விழாவில் ஈரானை சேர்ந்த இயக்குனர் மஹ்னாஸ் முகம்மதி அவர்களுக்கு Spirit of Cinema எனும் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த விருதை அவர் சார்பாக கிரேக்க இயக்குனர் அதினா ரேச்சல் சங்காரி பெற்றுக் கொண்டிருக்கிறார்.
மஹ்னாஸ் இங்கே இல்லை. காரணம், கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக அங்கே நடந்து வரும் போராட்டங்களில் மஹ்னாசும் கலந்து கொண்டு ஆதரவு அளித்து வருகிறார் என்பதால் இந்தியா வருவதை ஈரானிய அரசு அனுமதிக்கவில்லை. அவர் வேறு இங்கே வந்து விழாவில் அது பற்றி ஏதாவது பேசி தங்களுக்கு சங்கடம் வேண்டாம் என்று
யோசித்திருக்கிறார்கள் போல.

ஆனால் மஹ்னாஸ் வேற லெவல். தன்னால் பயணிக்க முடியாது என்றால் என்ன? 'இந்த மயிருதானேடா உங்களுக்கு பிரச்சினை!' என்று தனது கூந்தலின் சிறிய பகுதியை வெட்டி அதை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த கிரேக்க இயக்குனர் அவர் சார்பாக விருதைப் பெறுகையில்
மஹ்னாசின் முடிக்கற்றையை பிடித்துக் கொண்டு வாங்கி இருக்கிறார். கூடவே மஹ்னாஸ் எழுதிக் கொடுத்த ஒரு சிறு உரையையும் படித்திருக்கிறார். 'இந்த முடிக்கற்றை எனது துன்பங்களை பிரதிபலிக்கிறது. துன்பங்கள் முடிவடையும் நேரம் வந்து விட்டதை குறிக்கிறது. நேற்று ஈரான் அரசு 23 வயது மொஹ்சென் ஷிகாரியை
ஹிஜாப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தூக்கிலிட்டிருக்கிறது. இந்த நேரத்தில் எனது முடிக்கற்றையை அனுப்புவதற்குக் காரணம் உங்கள் அனைவருடைய ஆதரவும் குரலும் எங்களுக்குத் தேவை என்பதினால்தான்,' என்று பேசி இருக்கிறார். பின்னர் மஹ்னாஸ் வேண்டுகோளுக்கு இணங்க கூடி இருந்தவர்கள்
Women, Life, Freedom' என்ற கோஷத்தை எழுப்பி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட போது அவர் அனுப்பிய கடிதத்தில் 'நான் ஒரு பெண், நான் ஒரு படைப்பாளி - இந்த தேசத்தில் ஒரு குற்றவாளியாக கருதப்பட இந்த இரண்டு விஷயங்கள் போதுமல்லவா?'
என்று எழுதி இருந்தார்.

நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மஹ்னாஸ். நேரடியாக இருக்க இயலாது எனினும் சிந்தனாரீதியில் இருக்கிறோம். நீங்கள் அனுப்பிய முடியைப் போற்றுகிறோம். 'எங்கள் ம*யி*ருக்கு சமமாகக் கூட உங்கள் சட்டங்களை மதிக்கவில்லை,' என்று நீங்கள் ஈரானிய அரசைப் பார்த்து சொல்வதாக
புரிந்து கொள்கிறோம். விரைவிலேயே உங்கள் துன்பங்கள் தீரும். மதங்களின் மடமைகள் குறித்த புரிதல் சமூகங்களும் வரும். மனிதர்கள் முக்கியமா மதங்கள் முக்கியமா எனும் கேள்விக்கு சமூகங்கள் மனிதர்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பிப்பார்கள். பெண்கள் வாழ்வு சிறக்கும். விடுதலை பிறக்கும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தென்குமரி தென்றல்

தென்குமரி தென்றல் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Stalinkumari

Dec 11
பெருமழை நேரங்களில் வெள்ள பாதிப்புகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் விடிய விடிய சாலையில் நின்று சரிசெய்யும் படங்களை காணும் போது,
எண்ணிய வேலைகளை எந்த நேரத்திலும், எத்தகைய உடையிலும் சாலையில் நின்று செயலாற்றும் இப்படிப்பட்ட வேலைச்சுதந்திரம் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட Image
குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் பெண்களுக்கு வாய்க்குமா என நான் பல நேரங்களில் எண்ணுவது உண்டு...

மனமிருந்தால் இங்கு அனைத்தும் சாத்தியமே என்று பதவியேற்ற நாள் தொட்டு #சென்னை_மேயர் #பிரியா_ராஜன் ஒவ்வொரு பெருமழையின் போதும் இரவு முழுவதும் சாலையில் நின்று நிவாரணப்பணிகளை
மேற்கொண்டு வருவது புதிய நம்பிக்கை கீற்றுகளை நெஞ்சத்தில் வார்த்தது.
மேயரை மேற்கோள் காட்டி அன்மையில் நிறைய பெண் கவுன்சிலர்கள் களத்திற்கு வந்திருப்பதும் மகிழ்வை தந்தது ...

இதன் அடுத்தக் கட்டமாக, உனக்கான தலைமுறையையே உருவாக்கித்தர முடிந்த எம்மால் ,
துரித நேரங்களில் மோட்டார் காரில்
Read 6 tweets
Dec 10
எனை மாற்றிய நிகழ்வு..
மணிகண்டனுக்கு 27 வயது..அவன் தாய் மாமன் மகள் சந்தியாவுடன் 5 ஆண்டு கால காதல்.. தைப்பூசம் அன்று முருகனுக்கு வேண்டுதல் நிறைவேற்ற மொட்டை போட்டிருந்தான். குழி விழுந்த கண்களுடன் சிங்கப்பூரின் "தேக்கா"வில் வீராசாமி ரோட்டில் உள்ள மினிமார்ட் கடையின் முன் நின்று
பத்திரிகை யை நீட்டினான்.!
அண்ணா அடுத்த வாரம் ஊருக்கு (கன்னியாகுமரி மாவட்டம்.
ராஜாக்கமங்கலம்)
போறேன்.இன்னும் 10 நாட்களில் வீடு கிரகப்பிரவேசமும் அன்றே என்னுடைய நிச்சயதார்த்தமும் என்றான்.ஒரு மாதம் கழித்து திருமணம் என்றான்
யார் இவன்?
என்ன தொழில் செய்கிறான் என்றால்? சிங்கப்பூரில் ஒரு
பெயின்ட் கம்பெனியில் டிரைவர் மற்றும் மேற்பார்வையாளர்.
ஆனால் மாலை 5 மணி யுடன் வேலை முடிந்துவிடும் அதன் பிறகுHDB(HOUSING BOARD) வீடுகளில் இரவு நேரங்களில் பெயின்ட் கான்ட்ராக்டர் எடுத்திருந்தான்.அதனால் மாலை வேலை முடிந்தவுடன் தன் வேலையாட்களை அழைத்து சென்று இரவு முழுவதும் பெயின்ட்
Read 11 tweets
Dec 10
எங்கோ ஒரு கோட்சே என்ற பார்ப்பனன் மகாத்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றதற்காக

எங்கோ ஒரு TT கிருஷ்ணமாச்சாரி என்ற ஒன்றிய அமைச்சர் கொள்ளையடித்தார் என்பதற்காக

எங்கோ ஒரு IPS அதிகாரி சபேசன் கொள்ளையடித்தார் என்பதற்காக

எங்கோ ஒரு சங்கராச்சாரி கோவிலுக்குள் கொலை செய்தார் என்பதற்காக
எங்கோ ஒரு ராணுவ அதிகாரி KR ராகவன் கொள்ளையடித்தார் என்பதற்காக

எங்கோ ஒரு ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் ஒரு இலட்சம் கோடி கொள்ளையடித்தார் என்பதற்காக

எங்கோ ஒரு தேவநாதன் குருக்கள்
கோவில் கருவறையில்
காமலீலை செய்ததற்காக

எங்கோ ஒரு மடாதிபதி ஏதோ ஒரு எழுத்தாளரை பாலியல்
தொந்திரவு செய்தார் என்பதற்காக

எங்கோ ஒரு கோவில் குருக்கள்
கோவிலில் சிறுமியை வன்புணர்ச்சி செய்ததற்காக,

எங்கோ ஒரு ராஜப்பா குருக்கள்
100 கிலோ தங்கத்தை திருடியதற்காக

ஒட்டு மொத்த பார்ப்பனரையும்
தவறாகப் பேசக்கூடாது.

ஆனால்...

எங்கோ ஒரு முஸ்லிம்
குண்டு வைத்ததற்காக,
ஒட்டு மொத்த
Read 4 tweets
Dec 9
ஒரு மாநிலத்தில் மட்டும் கிடைத்த வெற்றி, எப்படி பிற தோல்விகளுக்கெல்லாம் ஈடாகுமெனப் புரியவில்லை. இன்று நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த தோல்வியைப் பற்றி யாரும் பேசுவதில்லை. எந்த ஊடகமும் விவாதிப்பதில்லை.குறிப்பாக உத்தர பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க.
தோல்வியடைந்திருக்கிறது. இது பேசுபொருளாகவே இல்லை" குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களோடு சேர்ந்து பல மாநிலங்களில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. பிஹாரின் குர்ஹனி, சட்டீஸ்கரின் பானுபிரதாப்பூர், ஒடிசாவின் பாதாம்பூர்,
ராஜஸ்தானின் சர்தார்ஷஹர், உத்தர பிரதேசத்தின் கடௌலி, ராம்பூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் குர்ஹினியிலும் ராம்பூரிலும் மட்டுமே பா.ஜ.கவால் வெற்றிபெற முடிந்தது.உத்திரபிரதேசத்தின் மைன்புரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்
Read 5 tweets
Dec 8
பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

சீத்தாராம் யெச்சூரி கேள்வி?

புதுதில்லி, டிச.6- ஜி 20 நாடுகளின் தலைமைப்பொறுப்பு இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு வந்திருப்பதையொட்டி அது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத் திற்கு, ஒன்றிய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத் தில் Image
கலந்துகொண்டு, மார்க்சிஸ்ட் யின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதா வது: இந்தக் கூட்டமானது, ஜி.20 நாடுகளின் தலை மைப்பொறுப்பை இந்தியா ஏற்பது தொடர்பாகவும், இது தொடர்பான கூட்டங்களை 200 இடங்களில் நடத்த இருப்பது தொடர்பாகவும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை
கூறுவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு உறுப்பு நாட்டுக்கும் வந்துகொண்டிருக்கிறது. ஜி.20இல் அங்கம் பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கும் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு கிடைத்திடும்.
1999இல் தெற்கு ஆசிய நாடுகளில்
Read 15 tweets
Dec 8
மீனவர்களுக்கு எப்போதுமே எம்.ஜி.ஆர் என்றால் உயிர். அதிலும் படகோட்டி, மீனவ நண்பன் போன்ற திரைப்படங்களுக்கு பின் அவர் மீனவர்களுக்கு தங்களுள் ஒருவராகிப் போனார். கடற்புரத்தில் அவருக்குப் பெயர் "பப்பா". பப்பா என்றால் தாத்தா.
"ஏக்கி! பப்பா படம் போட்டிருக்கான்" என்றுதான் பெண்களும் Image
பேசுவார்கள். இன்று வரை மீனவர்களிடம் பெரும் ஓட்டு வங்கி அதிமுகவுக்கு உண்டு.

அவர் மீனவர்களுக்கு கொடுத்த முதல் அடி 1982 ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தின் போது. ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அரசு தரப்பில் இரண்டு, மூன்று என கணக்கு சொல்லப்பட்டது. மீனவ
கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப் பட்டு அவர்களுக்கான உணவு பொருட்கள் கிடைக்காமல் செய்யப் பட்டது. குடிநீர்க் கிணறுகளில் டீசலும், மனிதக் கழிவுகளும் கொட்டப் பட்டன. இவை அனைத்தும் காவல் துறை உதவியுடன் நடந்தது.

அடுத்த அடி 1985ம் ஆண்டு.

12 கிமி தூரமுள்ள மெரினா கடற்கரை
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(