தமிழின் தனித்துவத்தைச் சுவைபட விளக்கிய மாபெரும் கவிஞர் சுப்ரமணிய பாரதி. இவரின் உணர்வெழுச்சியால் பிறந்த பல கவிதைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் கனல் தெறித்தன.
தனக்குள் எழும் கருத்துகளை சற்றும் அச்சமின்றி தெளிவுடன் எடுத்துரைத்தவர் பாரதி.
ஒரு கவிஞன் என்ற ஒற்றை வரியில் இவரின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது.
சமூக ஆர்வலர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பாடலாசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ் மொழியையே தன் சுவாசமாகக் கொண்டவர், எழுச்சிமிகு சிந்தனைகளின் ஏகலைவன் என, பன்முகத்தன்மைகொண்ட தமிழர், பாரதி.
இந்திய விடுதலைப் போரில் இவரின் தமிழ் பெரும்பங்காற்றியதன் காரணமாகத்தான் இவரை 'தேசிய கவி' எனப் போற்றிப் புகழ்ந்தனர்.
பிறப்பு
திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர் - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு 1882ம் ஆண்டு டிச., 11ம் தேதி பிறந்தார் சுப்ரமணிய பாரதியார். சிறு வயதிலேயே தமிழ் மொழி அறிவும் தமிழ் உறவுகள் மீதான அக்கறையும் இவரிடம் இருந்தது.
தமிழ் மொழி மீதான சிந்தனைத் தெளிவும் பற்றும் வெகு விரைவிலேயே இவரை மாபெரும் புலவராக மாற்றியது. தன் 11ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலையும் அறிவையும் பயிற்சியால் வென்றார் பாரதி. 1897ல் பாரதியின் இல்லறத்தில் இனியாளாக பங்குகொண்டார் செல்லம்மா.
இலக்கியப் பணி
தமிழ் மொழி மீதும், இலக்கியப் பணி மீதும் தணியாத ஆர்வம்கொண்டவர் பாரதி. தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், சம்ஸ்கிருதம், வங்காளம், இந்தி என, பலவேறு மொழிகளைப் பயின்றார்.
'சுதேசமித்திரன்' என்ற தமிழ் பத்திரிகையில், 1904ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
பகவத் கீதையும்... பாஞ்சாலி சபதமும்!
இந்துக்களின் சுவாசமாக விளங்கும் பகவத் கீதையை 1912ல் தமிழில் மொழிபெயர்த்தார். பரத கண்டத்தின் மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை 'பாஞ்சாலி சபதம்' என்ற பெயரில் படைத்தார். கவிதைகள் புனைவதோடு சமுதாயக் கட்டுரைகளும் எழுதினார்.
சுதந்திரப் போராட்டத்தில் பாரதி
சுதந்திரப் போராட்டத்தின்போது இவரின் கருத்துகளும் கட்டுரைகளும் கவிதைகளும் உணர்ச்சிப் பிழம்பாகவும், காட்டுக் கனலாகவும் எழுந்து விடுதலை உணர்வை அனைவரது உள்ளத்திலும் விதைத்தன.
மக்கள் மத்தியில் விடுதலை விழிப்பு உணர்வை உருவாக்கியதில் பாரதி, பார் போற்றும் கவிஞரானார். இவரின் எழுச்சிமிகு உரையில் தமிழர்கள் விழிந்தெழுந்ததைக் கண்ட ஆங்கிலேயர், பாரதியின் பல்வேறு படைப்புகளுக்குத் தடைவிதித்து, அவரை சிறையில் அடைத்தனர்.
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமின்றி, உலக இலக்கிய ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்ட பாரதி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் யானையின் கால்களால் காயமடைந்து, உடல் நலிவடைந்து, 1921ம் ஆண்டு செப்., 11ம் தேதி உலகைவிட்டு பிரிந்தார்.
தமிழ் இலக்கிய உலகம் மட்டுமல்லாது, உலக இலக்கிய அரங்கிலும் மிகமுக்கிய இடத்தைப் பிடித்த பாரதி
பழந்தமிழ் நூல்கள் ஆறுமுகப்பெரு மானைப் ‘பிள்ளையார்’ என்றும்; விநாயகரை ‘மூத்த பிள்ளையார்’ என்றும் குறிப்பிடுகின்றன.
1
அதற்கு ஏற்றவகையில், அந்நூல்கள் சொன்னதற்கு ஆதாரமாக, இங்கே திருக்கழுக்குன்றத்தில் உள்ள மிகப்பழைமையான கல்வெட்டு, ஆறுமுகனை ‘ஆறுமுகப் பிள்ளையார்’ எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
2
விநாயகர்கள்
பல விநாயகர்கள் இங்கு உள்ளார்கள். பிரமராரண்ய விநாயகர்-வண்டு வனப்பிள்ளையார் மலைக்குக் கீழே உள்ள ஆலயத்தில் உள்ளார். சங்கு தீர்த்தத்தின் வடமேற்கில் - சந்நதி விநாயகர் - சண்முக விநாயகர். தேரடியில் - தேரடிப்பிள்ளையார். திருவாவடுதுறை மடத்திற்கு நேராக-சொக்கப்பிள்ளையார்.
ஐம்பொறிகளுக்குள்ளே யார் பெரியவன் என்ற போட்டி வந்துவிட்டது. உடனே கடவுளிடம் போய் முறையிட்டார்கள்.
பேசும் சக்தி சொல்லியது ஒரு மனிதன் தனக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டுதான் வாங்கிக் கொள்கிறான். பேசினால் தான் அவன் தன்னுடைய தேவைகளை அடுத்தவரிடம் சொல்ல முடியும்.
இன்றைக்கு எதையும் கேட்டு வாங்கிதான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. பேச்சு இல்லை என்றால் ஒன்றும் இல்லை. அதனால் நான் தான் பெரியவன் என்றது.
நேமம் என்ற ஊர். இங்குள்ள அமிர்தாம்பிகை உடனாய ஆவுண்டீஸ்வரர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
1
மகம் மற்றும் பூரம் நட்சத்திரக் காரர்களுக்கு பரிகாரத் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.இந்த ஆலயம் 11-ம் நூற்றாண்டில், சோழப் பேரரசின் அடையாளமாக விளங்கும் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
2
பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்த போன இந்த ஆலயம், சுமார் 80 ஆண்டுகளாக எந்த வழிபாடும் இன்றி மண்மூடிக் கிடந்துள்ளது.காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில், 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் இந்த ஆலயத்தின் திருப்பணி நடைபெற்று, மீண்டும் வழிபாட்டிற்கு வந்தது.
இது கவியரசர் எழுதிய ஒரு அற்புதமான பக்திப் பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இந்தப் பாடலுக்கான ஒரு விளக்க உரையாக எனக்கு வந்த ஒரு கட்டுரையை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
இப்படி ஒரு அற்புதமான விளக்கவுரை தந்திருக்கும் அந்தப் பெயர் தெரியாத நண்பருக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உண்மையிலேயே ஒரு அற்புதமான விளக்கத்தை அவர் கொடுத்திருக்கிறார்.
"கவியரசர் கண்ணதாசன் இயற்றி, அமரர் டி.எம்.எஸ் அவர்கள் பாடிய ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாடலை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. மெல்லிசை மன்னர் இசையமைத்த, இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
நம்மிடம் உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்களைத் திருத்த வேண்டும் என்று எண்ணினால் அங்கே மோதல்கள் தான் உண்டாகும்.முதலில் நாம் திருந்த வேண்டும். பிறகு மற்றவர்களைத் திருத்த முற்படுவோம்..
ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான்.
அவனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது.
பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை...
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு அறிஞர் வந்தார், அவருக்கு மருத்துவமும் பார்க்கத் தெரியும்..
அவர் மன்னரை சோதித்து விட்டு அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்கு, கண்களில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்...