மிக மிக எளிமையாக வழிபடக்கூடிய தெய்வம் இந்த விநாயகர்.
மனம் உருகி தோப்புக்கரணம் போட்டு, இரு கைகளைக் கூப்பி நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்தாலும், அந்த வரங்களை உடனே கொடுத்து விடுவார்.
குழந்தை மனம் கொண்ட இந்த விநாயகர் அதிலும் கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் விசேஷமான இந்த சங்கடகர சதுர்த்தி வழிபடும் முறை
இன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு,
பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் கம் கணபதயே நமஹா’ என்ற மந்திரத்தை சொல்லி உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள்.
விரதம் இருப்பது அவரவர் விருப்பம்.
எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்கலாம் அல்லது பால் பழம் ஒரு வேளை உணவு சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
அது உங்களுடைய ஆரோக்கியத்தை பொருத்தது. மூன்று வேளை சாப்பிட்டு விநாயகர் வழிபாடு செய்தாலும் தவறு கிடையாது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டிற்கு உகந்த நேரம் மாலை நேரம் தான்.
மாலை 6:00 மணிக்கு வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.
வீட்டில் விநாயகரின் சிலை இருந்தால், அதற்கு கட்டாயம் அபிஷேகம் செய்ய வேண்டும்.
விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளருக்கன் பூ, அருகம்புல், அல்லது செம்பருத்தி பூ இந்த பூக்களால் அலங்காரம் செய்து வைத்துவிட்டு விநாயகருக்கு பிடித்த மோதகம் நிவேதியமாக வைக்க வேண்டும்.
வீட்டில் இந்த நிவேதினத்தை செய்து வைத்து மனதார உங்களுடைய பிரார்த்தனையை விநாயகரிடம் சொல்லி, பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து விநாயகருக்கு பிடித்த மந்திரங்கள் ஏதாவது இருந்தால் அதை சொல்லி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
வீட்டில் பூஜையை முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள்.
கோவிலில் விநாயகருக்கு உங்களால் முடிந்த அருகம்புல் பூக்கள் வாங்கி கொடுக்கலாம்.
கட்டாயமாக சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.
உங்களுக்கு இருக்கும் ஏதாவது ஒரு சங்கடம், ஏதாவது ஒரு கஷ்டத்தை மனதில் நினைத்து
அந்த கஷ்டம் அடுத்த சங்கடஹர சதுர்த்திக்குள் தீர வேண்டும் என்று சிதறு தேங்காயை உடைத்து விட்டு அடுத்த மாதம் 51 கொழுக்கட்டை செய்து, கோவில் நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டால், அந்த வேண்டுதல் உடனே பலிக்கும்.
(எண்ணிக்கை என்பது உங்கள் விருப்பம் தான். ஒற்றைப்படையில் 11 கொழுக்கட்டை, மோதகம் எது செய்து கொடுத்தாலும் நல்லது.
இந்த மாதம் இந்த வேண்டுதலை விநாயகரிடம் வைத்துப் பாருங்களேன்.
அடுத்த மாதத்திற்குள் உங்களுடைய சங்கடங்கள் எல்லாம் பறந்து போய்விடும்.
நம்பிக்கையோடு சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை செய்தால் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும்.
சிவபூஜை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும்.
சிவபூஜை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.
திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.
*சிவ சஹஸ்ர நாமாவளியை ப்ரம்ம புத்திரர்களில் ஒருவரான தண்டி என்பவர் உரைநடைப்படுத்தி தலைமுறை தலைமுறையாக வாய் வழியாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உபமன்யு முனிவர் உபதேசித்தருளினார்.*
*இந்த மஹிமை வாய்ந்த சிவ சஹஸ்ர நாமத்தின் மஹிமை அளவிடற்கரியது.*
*மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மபுத்திரருக்கு அற்புத மகிமை வாய்ந்த சிவ சஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை உபதேசிக்கிறார்.
இதை ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு முனிவரிடமிருந்து முன்பு கற்றுக்கொண்டார்.*
*இது முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்தில் சொல்லப்பட்டது.
பிரம்மாவின் குமாரனான தண்டி இதைச் சொர்க்கத்தினின்று பெற்றார்.
எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.*
*தண்டி இதை சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார்.
விநாயகர் தன் திருமேனியில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது போல் நவக்கிரகங்களுக்கும் தனது உடலில் இடம் கொடுத்துள்ளார்.
செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம்.
இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக் கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக 8 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவக்கிரக விநாயகரின் உருவ சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.
உடலின் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ள நவக்கிரக விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது.