*சிவ சஹஸ்ர நாமாவளியை ப்ரம்ம புத்திரர்களில் ஒருவரான தண்டி என்பவர் உரைநடைப்படுத்தி தலைமுறை தலைமுறையாக வாய் வழியாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உபமன்யு முனிவர் உபதேசித்தருளினார்.*
*இந்த மஹிமை வாய்ந்த சிவ சஹஸ்ர நாமத்தின் மஹிமை அளவிடற்கரியது.*
*மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மபுத்திரருக்கு அற்புத மகிமை வாய்ந்த சிவ சஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தை உபதேசிக்கிறார்.
இதை ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு முனிவரிடமிருந்து முன்பு கற்றுக்கொண்டார்.*
*இது முதலில் பிரம்மலோகத்தில் இருந்து தேவலோகமான சொர்க்கத்தில் சொல்லப்பட்டது.
பிரம்மாவின் குமாரனான தண்டி இதைச் சொர்க்கத்தினின்று பெற்றார்.
எனவே, இது தண்டியால் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது.*
*தண்டி இதை சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தார்.
இது மங்கலப் பொருட்கள் அனைத்திலும் மங்கலமாகக் கருதப்படுகிறது. இது கொடும்பாவங்களையும், கழுவ வல்லதாகும்.*
*உபமன்யு முனிவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உபதேசிக்கிறார்..*
*ௐ! வலிய கரங்களைக் கொண்டவனே (கிருஷ்ணா), துதிகள் அனைத்திலும் சிறந்த துதியான இதை நான் உனக்கு உரைக்கப் போகிறேன்.
வேதங்களின் வேதமானவனை,
புராதனப் பொருட்கள் அனைத்திலும் புராதனமானவனை,
சக்திகள் அனைத்திற்கும் சக்தியாகத் திகழ்பவனை,
தங்கள் அனைத்திற்கும் தவமாக இருப்பவனை,
அமைதியான உயிரினங்கள் அனைத்திலும் பேரமைதி கொண்டவனை,
கட்டுப்பாடு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் சிறந்த கட்டுப்பாட்டுடையவனை,
நுண்ணறிவு கொண்ட அனைத்து உயிரினங்களைக் காட்டிலும் நுண்ணறிவைக் கொண்டவனை,
தேவர்களின் தேவர்களாகவும்,
முனிவர்களின் முனிவனாகவும் காணப்படுபவனை,
வேள்விகள் அனைத்திலும் சிறந்த வேள்வியாகவும்,
மங்கலம் நிறைந்த பொருட்கள் அனைத்திலும் பெரும் மங்கலம் கொண்டவனாகவும் கருதப்படுபவனை,
ருத்திரர்கள் அனைவரின் மேலான ருத்திரனை,
பிரகாசத்துடன் கூடிய அனைத்திலும் பிரகாசமிக்கவனை,
யோகிகள் அனைவரின் யோகியை,
காரணங்கள் அனைத்திலும் காரணனை,
இல்லாமையால் உலகங்கள் அனைத்தும் சென்று சேர்பவனை,
இருப்பில் உள்ள அனைத்து உயிர்களின் ஆன்மாவாக இருப்பவனை.
அளவற்ற சக்தியுடைய ஹரன் என்று அழைக்கப்படுபவனையே இந்தத் துதி குறிப்பிடுகின்றது.*
*அந்தப் பெரும் சர்வேஸ்வரனின் உத்தமமான ஆயிரத்தெட்டுப் பெயர்களை (சஹஸ்ரநாமத்தை) நான் உரைக்கப்போகிறேன், கேட்பாயாக.
ௐ! மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, அந்தப் பெயர்களைக் கேட்பதால் நீ உன் விருப்பங்கள் அனைத்தும் கனியப் பெறுவாயாக (என்றார் உபமன்யு).*
*வாசுதேவன் (கிருஷ்ணர்) “ௐ யுதிஷ்டிரரே!, மறுபிறப்பாள முனிவர் உபமன்யு, தம் மனத்தைக் குவித்து, மதிப்புடன் கரங்களைக் கூப்பி (மஹாதேவனுக்குப் பொருந்தும்) இந்தப் பெயர்களின் தொகுப்பைத் தொடக்க முதல் சொல்லத் தொடங்கினார்.*
அந்தப் பத்தாயிரம் பெயர்களின் சாரத்தையே பிரதிபலிக்கின்றன.*
*இந்தப் பெயர்களின் தொகுப்பானது, மிகக் கொடிய பாவத்தையும் கழுவும் வல்லமை பெற்றதாகும்.
நான்கு வேதங்களின் தகுதி இதற்கும் உண்டு.
இது முயற்சியுடன் புரிந்து கொள்ளப்பட்டு, குவிந்த ஆன்மாவுடன் நினைவில் செதுக்கப்பட வேண்டும்.
இது மங்கலம் நிறைந்ததாகும். இது முன்னேற்றதை வழிவகுக்கும். இது ராட்சதர்களுக்கு அழிவை உண்டாக்கும். இது பரிசுத்தமடையச் செய்யும் பெருமை கொண்டது.*
*பரமேஸ்வரனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், அவனிடம் அனைத்தையும் அர்ப்பணிக்கும் மனோபாவம் கொண்ட
நம்பிக்கையுள்ளவனுமான ஒருவனால் மட்டுமே இது சொல்லப்பட வேண்டும்.*
*இந்தப் பெயர்களின் தொகுப்பு தியான யோகமாகப் பார்க்கப்படுகின்றது.
இது தியானத்தின் உயர்ந்த நோக்கமாகவும் பார்க்கப்படுகின்றது.
ஒருவன் ஜபமாக இதைத் தொடர்ந்து உரைக்கவேண்டும்.
இஃது உயர்ந்த புதிரைக் கொண்டதாகும்.*
*ஒருவன் தன் இறுதி கணத்திலாவது இதை உரைத்தாலோ, உரைப்பதைக் கேட்டாலோ அவன் உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறான்.
இது புனிதமாகும்.
ஏனென்றால் அனைத்து நன்மைகளும் நிறைந்த இது மங்கலமானதாகவும் அனைத்துப் பொருட்களிலும் சிறந்ததாகும்.*
*அண்டமனைத்தின் பெரும்பாட்டனான பிரம்மனால் அனாதிகாலத்தில் தொகுக்கப்பட்டு, துதிக்கப்பட்டதால் இது துதிகளில் எல்லாம் சிறந்த துதி (ஸ்தோத்திரம்) என அனைத்திலும் முதன்மையான இடத்தில் அவனால் இது வைக்கப்பட்டது.*
*அந்தக் காலத்திலிருந்து உயரான்ம மஹாதேவனின் மகிமையையும்,* *பெருமையையும் உரைக்கும் இந்தத் துதி தேவர்கள் அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு,*
சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும்.
சிவபூஜை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும்.
சிவபூஜை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.
திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.
விநாயகர் தன் திருமேனியில் முருகர், தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு இடம் கொடுத்துள்ளது போல் நவக்கிரகங்களுக்கும் தனது உடலில் இடம் கொடுத்துள்ளார்.
செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம்.
இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக் கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக 8 அடி உயரத்தில் காட்சியளிக்கும் நவக்கிரக விநாயகரின் உருவ சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.
உடலின் பல்வேறு இடங்களில் நவக்கிரகங்கள் இடம் பெற்றுள்ள நவக்கிரக விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது.