சிவபூஜை கற்பக மரம் போன்று விரும்பிய அனைத்தையும் தரவல்லது ஆகும்.
சிவபூஜை செய்வது அனைத்து தானங்கள், தருமங்கள், தவங்கள் செய்த பலனையும் அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அனைத்து வேள்விகளையும் செய்த பலனையும் ஒருங்கே தருவதாகும்.
சிவபூஜை செய்தவன் வாழ்வின் நிறைவில் சிவகணநாதராகித் தெய்வ விமானத்தில் ஏறி எல்லா உலகங்களிலும் சஞ்சரித்து மகிழ்ந்து பின்பு இறைவன் திருவடியில் இரண்டற கலப்பான்.
திருமுதுகுன்றத்தில் சிவலிங்கத்திற்கு ஒரு கை நீரால் திருமஞ்சனம் செய்து ஒரு மலரைச் சாத்தினால் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), மகாமேரு, வாரணாசி எனப்படும் காசி, பிரயாகை, கேகைநதிக்கரை, இமயமலை முதலிய மலைகள் முதலியவற்றில் நெடுங்காலம் தவஞ்செய்து தானதருமங்கள் செய்ததற்கு ஒப்பாகும்.
விருத்தகிரியில் ஒருநாள் சிவபூஜை செய்தால் அனைத்து விரதங்களை நோற்றப் பலனும் கோடி அசுவமேத யாகம் செய்த பலனும் உண்டாகும்.
அத் தலத்தில் சிவபூஜை செய்தவனுக்கு இயமவாதனை இல்லை.
விருத்தகிரியில் சிவபூஜை செய்தவன் எந்தப் பதங்களை விரும்பினாலும் அந்தப் பதமும் வரம்பில்லாத செல்வமும் அவனுக்குக் கிட்டும்.
மேலும் அட்டமா சித்திகளும் ஞானமும் அவனுக்குச் சித்திக்கும்.
மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தல வழிபாட்டுக்குச் செல்பவர்கள் காண வேண்டிய மிகவும் முக்கியமான இடங்களில் வன துர்க்கை ஆலயமும் ஒன்று.
மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று அதைப் பற்றிக் கூறுகிறார்கள்.
மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே இல்லை என்றும் கூறுகிறார்கள்.
மற்றும் ஒரு விசேஷம்.
எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்பித்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளதாம்.