இன்று 13/12/2022 செவ்வாய்க்கிழமை கோரக்கர் அவதரித்த நாள் கோரக்கர் ஜெயந்தியாக (கார்த்திகை மாதம் - ஆயில்ய நட்சத்திரம்) கொண்டாடப்படுகிறது.
சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார்.
சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன்.
ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர்.
என் நிலைமைக்கு தீர்வு எப்படி வரப்போகிறதோ என கலங்குகிறேன், என்றாள் கண்ணீர் சிந்தியபடியே.
அம்மா ! அழாதே. இதோ! திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார்.
திருநீறுடன் தெருவில் சென்று கொண்டிருந்த போது
அவளது தோழி ஒருத்தி பார்த்தாள்.
சாமியார் திருநீறு தந்த விபரத்தை அந்தப்பெண் தோழியிடம் சொன்னாள்.
தோழி அவளிடம், அடிபைத்தியக்காரி ! யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா ! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய்.
அந்த சாமியார் உன்னை தன் தவறான இச்சைக்கு ஆட்படுத்தி விடுவார். இதை வீசி எறிந்து விடு, என்றாள்.
தோழி சொன்னதிலும் உண்மையிருக்குமோ என்று பயந்து போன அந்தப் பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.
சில ஆண்டுகள் கடந்தன.
அந்தப் பெண், இப்போதும் அழுது கொண்டிருக்க, மச்சேந்திரர் வந்தார்.
அப்போது தான், மேற்கண்ட கேள்வியைக் கேட்டார்.
சுவாமி ! என்னை மன்னிக்க வேண்டும்.
தாங்கள் கொடுத்த திருநீறை என் தோழி சொன்னதால் பயத்தில் அடுப்பில் போட்டு எரித்து விட்டேன்.
எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை.
என்னை மன்னிக்க வேண்டும் என்றாள்.
அவளது நிலைமையில் யார் இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்கவில்லை.
சரியம்மா ! உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டுவீர்கள் ?
ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா ? என்றார்.
இல்லை சுவாமி அடுப்புச்சாம்பலை இதோ அந்த எருக்குழியில் (கழிவுகளை உரமாக்கும் தொட்டி போன்ற அமைப்பு) போட்டு வைத்திருக்கிறோம்,
பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள்.
நான் திருநீறை எரித்து சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது, என்றாள்.
மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகமிருக்கிறது, என்றவர், எருக்குழியில் அருகே போய், கோரக்கா ! என குரல் கொடுத்தார்.
என்ன சித்தரே ! என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா, என்றார் சித்தர்.
அப்போது, சாம்பலைக் கொடுத்த நாளில் இருந்து, இதுவரை கடந்த பத்தாண்டுகளைக் கடந்த நிலையில், பத்து வயது சிறுவன் ஒருவன், தெய்வ லட்சணங்களுடன் எழுந்து வந்தான்.
அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர். சுவாமி ! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமை அறியாமல், வீசி எறிந்தேன்.
இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன்.
என அழுதவள், மகனை அரவணைத்துக் கொண்டாள்.
ஆனால், அந்த சிறுவனோ அன்னையின் பிடியில் இருந்து தன்னை உதறிக்கொண்டு வெளிப்பட்டான்.
நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன். இருப்பினும், நான் இந்த பூமிக்கு வர காரணமாக இருந்ததற்கும், என் தாய் என்ற முறையிலும் உன்னை வணங்குகிறேன்.
நான் இந்த (மச்சேந்திரர்) சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.
கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்காமல் போனாலும், மகனின் உறுதியான பேச்சால் ஆடிப்போன அந்தத்தாய், வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள்.
அவ்வாறு கோரக்கர் அவதரித்த நாளே கோரக்கர் ஜெயந்தியாக (கார்த்திகை மாதம் - ஆயில்ய நட்சத்திரம்) கொண்டாடப்படுகிறது.
ஒரே குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் செய்ய வேண்டிய வழிபாடு.
ஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் .
அதே போல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் .
கணவன் - மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால் தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் .
சில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது.
அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால்,
ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர்.
மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தல வழிபாட்டுக்குச் செல்பவர்கள் காண வேண்டிய மிகவும் முக்கியமான இடங்களில் வன துர்க்கை ஆலயமும் ஒன்று.
மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று அதைப் பற்றிக் கூறுகிறார்கள்.
மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே இல்லை என்றும் கூறுகிறார்கள்.
மற்றும் ஒரு விசேஷம்.
எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்பித்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளதாம்.