மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தல வழிபாட்டுக்குச் செல்பவர்கள் காண வேண்டிய மிகவும் முக்கியமான இடங்களில் வன துர்க்கை ஆலயமும் ஒன்று.
மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம்.
சுமார் 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று அதைப் பற்றிக் கூறுகிறார்கள்.
மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே இல்லை என்றும் கூறுகிறார்கள்.
மற்றும் ஒரு விசேஷம்.
எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்பித்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளதாம்.
திருக்கடையூருக்கு அறுபதாவது வயது திருமணம் செய்து கொள்ளப் போகின்றவர்கள், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மார்க்கண்டேயர் ஆலயம் மற்றும் அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி உள்ள இந்த வன துர்க்கை ஆலயமும் சென்று விட்டு திரும்பினால் பலன் கிடைக்கும் என்றும் ஐதீகம். .
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரே குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருந்தால் செய்ய வேண்டிய வழிபாடு.
ஒரு சில குடும்பங்களில் ஒரே ராசிக்காரர்கள் இருப்பார்கள் .
அதே போல் கணவன் மனைவி இருவருமே ஒரே ராசிக்காரர்களாகவும் இருப்பார்கள் .
கணவன் - மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால் தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் .
சில சமயங்களில் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஒரே ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது.
அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால்,
ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர்.