சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31, 1875 - டிசம்பர் 15, 1950) (Sardar Vallabhbhai Jhaverbhai Patel) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 

குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார்.
இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் 
வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்,
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார். அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார்.
அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது. படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார்.
பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்
சாதனைகள்..

சோமநாதபுரம் கோயிலை கே. எம். முன்ஷியுடன் இணைந்து மீண்டும் எழுப்ப காரணமாக இருந்தவர்.

அகமதாபாத்தில் வக்கீல் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்சினைகளுக்கு உதவி, பிரபலமானார். 1917-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார்.
சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது காந்திஜியின் உரையைக் கேட்டவர், வக்கீல் தொழிலை உதறி சுதேசி இயக்கத்தில் இணைந்தார்.
குஜராத்தில் கேடா என்ற இடத்தில் பயங்கர பஞ்சம். ஆங்கிலேய அரசிடம் வரி விலக்கு கேட்டு விவசாயிகள் போராடினர். அரசு பணியாததால் காந்தி, படேல் தலைமையில் வரிகொடாமைப் போராட்டம் வெடித்தது. அரசு பணிந்தது. வரி ரத்தானது. படேலின் முதல் வெற்றி இது!
பார்டோலி என்ற இடத்தில் விவசாயிகள் நலன் காக்க நடைபெற்ற மற்றொரு சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் படேலுக்கு 
வெற்றி கிடைத்தது. அப்போதிருந்து மக்களால் ‘சர்தார்’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு போராட்டங்களும் சிறைவாசமும் அவருக்கு வாடிக்கையாகிப் போனது.
வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு காந்தி, படேல் கைது செய்யப்பட்டனர். எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது இருவருக்கும் நெருக்கம் வளர்ந்தது.
சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டார். இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக கருதப்பட்டார். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்துகொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்ததுதான் உள்துறை அமைச்சராக அவர் ஆற்றிய முதல் பணி. வி.பி.மேனனுடன் இணைந்து அகண்ட பாரதத்தை அமைத்தார்.
அகண்ட பாரதம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. அந்த இலக்குக்காக சகல வழிகளையும் பின்பற்றினார். சர்ச்சைகள், எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிதராக நின்று சமாளித்தார்.

75-ம் வயதில் இறந்தார். 1991-ல் படேலுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

#ஜெய்_ஹிந்த்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Dec 16
*எந்த அம்மனை வணங்கினால் என்ன பிரச்னைகள் தீரும்..!!*

மதுரை மீனாட்சி அம்மன்

மதுரையில் ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. Image
காஞ்சி காமாட்சி அம்மன்

அன்னை காமாட்சி நம்முடைய விருப்பங்களை எல்லாம் பூர்த்தி செய்பவள். காமாட்சி அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இந்த அம்மனுக்கு விருச்சிப்பூவால் மாலை கட்டி வணங்கிவிட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.
இருக்கன்குடி மாரியம்மன்

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் உள்ள மாரியம்மனை வழிபட்டால், தீராத வயிற்று வலி, கை, கால் வலி ஆகியவை குணமாகும். கண் நோய் உள்ளோர்கள் தேவிக்கு அபிஷேகம் செய்த நீரால் கண்களைக் கழுவ நோய் நீங்குகிறது என்பதும் நம்பிக்கை.
Read 9 tweets
Dec 16
*எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?

*இதோ*👇

1. *கருப்பு கவுணி அரிசி*

மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.

2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :

நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.

3. *பூங்கார் அரிசி* :

சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :

நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

5. *கருத்தக்கார் அரிசி* : 

மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 

6. *காலாநமக் அரிசி* :

புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:

மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 

8. *அறுபதாம் குறுவை அரிசி* :

எலும்பு சரியாகும். 

9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :

பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 

10. *தங்கச்சம்பா அரிசி* : 

பல், இதயம் வலுவாகும்
Read 11 tweets
Dec 16
மார்கழி மாதத்தின் மகத்துவம்.

ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு முந்தி பார்த்தீங்கன்னா மார்கழி மாசம்னாலே அதிகாலை வீதியே அதகளப்படும். Image
மேற்கத்திய கலாச்சாரம் நமது வேலையில் ஊடுருவி தற்போது நமது வாழ்க்கை முறையிலும் ஊடுருவிவிட்டது. முக்கியத்துவம் நிறைந்த விஷயங்கள் நமது நேரத்தை ஆக்கிரமித்தது போய் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நமக்கு பயன்தராத விஷயங்களுக்கு நாம் அதி முக்கியத்துவம் கொடுத்து
அதில் நேரத்தை வீணடித்து அதை பெருமையாக கருதும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும்.
Read 13 tweets
Dec 16
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் எல்லோரும் நல்லவரே. அதேநேரம், எல்லா மனிதர்களிடம் குற்றம், குறைகள் இருப்பதும் இயல்பான ஒன்றுதான்.
அந்தக் குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களைதெ திருத்துகிறேன் என்ற முயற்சியில் இறங்குவதுதான் மோசமான பின்விளைவுகளைத் தருகிறது.
கணவன், மனைவி, சகோதரர், உறவினர், நண்பர், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர், உடன் பணியாற்றுபவர் ஆகியோர் மீது அக்கறை காட்டுவதாக நினைத்து, அவர்களுடைய சில குற்றங்களைக் களைய முயற்சிகள் எடுப்பதுதான், அந்த உறவையே சிதைத்துவிடுகிறது.
Read 14 tweets
Dec 16
*தனுர் மாதப்பிறப்பு:*

குலதெய்வம், பூர்வீகம், போன்ற நமக்குக் கிடைக்க வேண்டிய பாக்கிய விஷயங்களை குறிப்பது 9-ஆம் இடம். இதனை மூன்றாவது திரிகோண ஸ்தானம் (பாக்கிய ஸ்தானம்) என்பார்கள். Image
தமிழ் மாதங்களில் இது ஒன்பதாவது இடம், தனுர் மாதத்தை குறிப்பது. தனுர் என்பது வில்லை குறிக்கும். மார்கழி குளிரில் உடல் வில் போல் வளையும் என்பதால், சீதோஷ்ணநிலையை அனுசரித்து தனுர் மாதம் என்றார்கள்.
தனுர் ராசியான குரு பகவானின் வீட்டில், சூரியபகவான் பிரவேசிக்கும் மாதம். மார்கழி மாதத்தை குறித்து, பகவான் கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார். 12 மாதங்களில் தனக்குப் பிடித்த மாதமாக இந்த மார்கழியைக் குறிப்பிடுகிறார்.
Read 9 tweets
Dec 16
சாரநாதப்பெருமாள் கோயில்

திருச்சேரை  என்னும் ஊரில் அமைந்துள்ள  கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை

1 Image
கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவரி ஆகியோருக்குத் தனி சன்னதி உள்ளன..

2
கோயில் உள் சுற்றில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், 
ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன.

3
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(