K. RAJESH Profile picture
Dec 17 21 tweets 6 min read
உங்கள் வயது 40+ ஆ?
போதுமான அளவு சேமிக்கவில்லை என்கிற அச்சம் உங்களை வாட்டுகிறதா? எதிர்காலத்தை பற்றிய பயமுள்ளதா?

சற்றே பயப்படுத்தலில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவது போல் இந்த வயது ஒன்றும் தாமதமான வயதல்ல.

மேலும் விபரமறிய: wa.me/message/GCVBKT…
பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் 40 வயதிற்கு மேலே நீங்கள் தொடங்கும் போது, அதிக வருமானத்தை விட 'அதிகமாக சேமிப்பதில்' தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. என்ன இவ்வளவு சுலபமா என்கிற ஐயம் எழுகிறதா? தொடர்ந்து படியுங்கள்.
நம்மில் பலர் 40 வயதை எட்டும் வரை முதலீடுகளையும் சேமிப்பையும் தள்ளிப்போடுகிறோம். அதற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கும். அது அவரவர் குடும்ப சூழ்நிலையைப் பொறுத்தது. 40 வயதை அடையும்போது கொஞ்சம் பயமும் சேர்ந்து விடுகிறது. ஐயையோ, நாம் நமது வாழ்க்கைக்கு தேவையான அளவு சேமிக்கவில்லையே என்று.
40 வயதிற்குட்பட்ட ஒருவர் வழக்கமாக 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்திருப்பார் இல்லையா? பெரும்பாலும், பணிக்கு சேரும் நேரத்தில் சேமிக்கத் தொடங்கியிருந்தால், இந்த காலமே போதுமானது. ஆனால், பலவித காரணங்களால் பலர் தங்கள் எதிர்காலத்திற்காக போதுமான அளவு சேமிக்கவில்லை என்பதை உணர்கிறார்கள்.
தங்கள் தொழிலில் சிறப்பாகச் செயல்பட்டு நல்ல சம்பளம் வாங்கினாலும் பலருக்கு இந்த கவலை இருக்கிறது. On an ideal case, உங்கள் 40களில் முதலீடு செய்வதற்கான முயற்சிகளை தொடங்குவது சிறந்தது அல்ல. ஆனால் நீங்கள் பயப்படும் அளவிற்கு மோசமும் இல்லை. அது ideal scenario. அனைவருக்கும் வாய்க்காது.
"Better late than never"

நீங்கள் தாமதமாக தொடங்கும் போது you have to compensate for the lost period of savings. இதிலுள்ள நல்ல அம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஆதரவாக சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா?

1) 20 வயதில் இருந்ததை விட அதிக சம்பளம்;
2) அதிக முதலீட்டு உபரி;
3) இன்னும் 15-20 வருட காலங்கள் வேலைவாய்ப்பும், வருமானமும் வருமென்கிற ஸ்திரத்தன்மை உள்ளது.

பெரும்பான்மையானோர் தங்களது கடன்கள் அனைத்தையும் அடைத்திருப்பர். வீட்டுக்கடன், தனிநபர் கடன் மற்றும் இதர கடன்கள் உட்பட. EMI'க்கள் உங்களுடைய செலவுகளில் ஒரு பகுதியாக தற்போது இல்லாததால்,
உங்களிடம் சற்றே அதிகமாக உபரி இருக்கும் இல்லையா? பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் நீங்கள் தொடங்கும் போது (முதலீடு செய்வது சற்று தாமதமாக இருந்தாலும்), 'அதிக வருமானம் ஈட்டுவதை' விட 'அதிகமாக சேமிப்பதில்' கவனம் செலுத்தவேண்டும்.
40 வயதின் முற்பகுதியில் உள்ள ஒரு நபர், தனது கார்ப்பரேட்/சம்பாதிப்பு வாழ்க்கையில் இன்னும் 15 வருடங்கள் மிச்சம் வைத்திருப்பார். 15 வருடங்கள் இருப்பதினால் தாராளமாக கொஞ்சம் calculated ரிஸ்க் எடுக்கலாம். தவறில்லை. அவரது போர்ட்ஃபோலியோவில் equity பெறுவதற்கு இதுவே சரியான நேரம்.
எனவே வருங்கால வைப்பு நிதி (EPF) பங்களிப்புகளைத் தவிர, மீதமுள்ள உபரியை (அல்லது குறைந்தபட்சம் அதில் ஒரு பெரிய பகுதியையாவது) பங்குகளுக்கு ஒதுக்குவது நல்லது.

எங்கே முதலீடு செய்வது?
ஒன்று அல்லது இரண்டு Large-Cap Index fund களை தேர்ந்தெடுக்கவும். அப்படி சரியான fund களை தேர்ந்தெடுக்க
சிரமமாக இருந்தாலோ அல்லது தெரியவில்லையென்றாலோ, Nifty/BSE அடிப்படையிலான Index fund ல் முதலீடு செய்யலாம். உங்கள் வயதிற்கு ஏற்ற ரிஸ்க் diversification இந்த fund கள் தாமாகவே கொடுத்துவிடும். உங்களுக்கு சற்று அதிக ரிஸ்க் appetite இருந்தால், Nifty Jr இன்டெக்ஸ் ஃபண்டையும் சேர்க்கலாம்.
ஒன்று/இரண்டு Flexi-cap அல்லது Large மற்றும் Mid-cap fund களை கூட சேர்க்கலாம். அதோடு கூட நீங்கள் ஒரு Pure Mid-Cap fund, International Fund மற்றும் சிறிது Gold Fund ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளலாம். ஆனால் தொடங்கும் போது அது அவ்வளவு அவசரம் இல்லை. இவை சிறிது நேரம் கழித்து வரலாம்.
உங்கள் SIP முதலீடுகளை அதிகரியுங்கள். வருடா வருடம் வரும் போனஸை செலவு செய்யாமல் முதலீடு செய்யுங்கள். உங்கள் வழக்கமான முதலீட்டை அவ்வப்போது அதிகரிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள். உங்கள் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும். உங்கள் முதலீடுகள் ஏன் தேக்கமடைய வேண்டும்?
SIPஐ அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் அதிகமாக முதலீடு செய்ய முயற்சிக்கவும். இப்படி தொடர்ந்து நீண்ட காலத்திற்கு நீங்கள் செய்து வந்தால், உங்கள் 'சிறுதுளி' முதலீடு, 'பெருவெள்ளமாக' மாறுவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

இணைக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்களுக்கு உபயோகப்படும்.
வழக்கமான மாதாந்திர முதலீடுகளுக்கு மேலதிகமாக, உங்கள் போனஸ், ஊக்கத்தொகை மற்றும் பிற வருமானங்களை எல்லாம் முதலீடு செய்ய வேண்டுமென்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த கூடுதல் பணத்தில் சிறிது செலவழித்தாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் தாமதமாக தொடங்கும் போது, அதில் ஒரு பெரிய பகுதி
சேமிப்பை நோக்கி செல்ல வேண்டும்.

நீங்கள் தாமதமாக வந்தால், தாமதத்தை ஈடுகட்ட நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். அதில் சிறிதும் உண்மை இல்லை. அதிக ரிஸ்க் எடுப்பது அதிக வருமானம் தரும் என்கிற உத்தரவாதம் கிடையாது. It might backfire. எனவே அந்த தவறை செய்யாதீர்கள்.
நல்லதொரு நிதி ஆலோசகரை அணுகுங்கள்.

20/30 வயதுகளில், சொந்தமாக தேடி, நேரடியாக முதலீடு செய்ய நல்ல முடிவாக இருக்கலாம். தவறு ஏதும் நேர்ந்தால், சரிசெய்ய உங்களுக்கு அப்பொழுது போதுமான காலம் உள்ளது. ஆனால் நீங்கள் 40 வயதில் இருக்கும்போது, time is a luxury for you.
ஒரு நல்ல முதலீட்டு ஆலோசகரிடம் (Financial Advisor) பேச தயங்காதீர்கள்.

DIY முதலீடு பேசுவதற்கு நன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்ய தாமதமாகிவிட்டதால், நிறைய பரிசோதனை முதலீடுகளை செய்ய உங்களுக்கு நேரம் குறைவாக இருப்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உங்கள் 50களில் முதலீடு செய்வது எப்படி?

50களின் முற்பகுதியில் இருந்ததைப் போல, நீங்கள் சற்று வயதானவராக இருந்தால், இதை மேலும் தாமதப்படுத்த வேண்டாம். நீங்கள் ஏற்கனவே கொஞ்சம் தாமதமாகிவிட்டீர்கள். ஆனால் தாமதிக்காமல் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.
"நான் கடனை எல்லாம் அடைத்துவிட்டு, பிறகு நான் சேமிக்கிறேன்" என்கிற எண்ணம் வேண்டாம். அலை ஓய்ந்தபின் கடலில் இறங்குவேன் என்கிற காத்திருப்புதான் அது.
கடன் இல்லாமல் இருப்பது தெய்வீகம். ஆனால் நீங்கள் உங்கள் 40 களில் இருந்தால் அல்லது இரண்டு கடன்களை வைத்திருந்தால், நீங்கள் செல்வத்தை
சேர்ப்பதற்கு கடன் எல்லாம் அடையட்டும் என்று காத்திருக்க வேண்டாம்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால்,முதலீடு செய்ய மேலும் தாமதப்படுத்தக்கூடாது. உங்களால் முடியும் போது தொடங்குங்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.

THE BEST TIME IS NOW.

#வாழ்கபணமுடன் 🙏🏼🙏🏼🙏🏼

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with K. RAJESH

K. RAJESH Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajeshkmoorthy

Dec 14
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

Mechanical Watches are THE MOST BEAUTIFUL of all!!! Image
TISSOT DOUBLE SAVONNETTE MECHANICAL

tissotwatches.com/en-in/t8654059…
TISSOT LEPINE MECHANICAL

tissotwatches.com/en-in/t8614059…
Read 5 tweets
Dec 2
e-Rupee - Digital Currency - என்ன? எதற்கு? எப்படி?

டிசம்பர் 1 ஆம் முதல், ரிசர்வ் வாங்கி, இந்தியாவில் டிஜிட்டல் currency யை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது. இதை CBDC என்று அழைக்கின்றனர். அதாவது, Central Bank Digital Currency. நமது வசதிக்காக e-Rupee என்றே அழைப்போம்.
இந்த பயன்பாட்டை பைலட் முறையில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல, ரிசர்வ் வாங்கி நான்கு வங்கிகளை தேர்வு செய்துள்ளது. அவை:
1) State Bank of India
2) ICICI Bank
3)Yes Bank
4) IDFC Bank

இந்த வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் ஒரு சில தனிநபர்கள் மற்றும் வியாபார நிறுவனங்களை
தேர்வு செய்து அவர்களுக்கு SMS மற்றும் ஈமெயில் மூலம் தகவல் அனுப்பப்படும். தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விருப்பப்பட்டால், அவர்கள் Google Playstore க்கு சென்று e-Rupee app ஐ தரவிறக்கம் செய்யவேண்டும். அவ்வாறு செய்கையில், அந்த app, அவர்களது SIMஐ வெரிஃபிகேஷன் செய்யும்.
Read 13 tweets
Nov 6
SIP என்றால் என்ன? SIP யில் எப்படி முதலீடு செய்வது? ஏன் இதனை ஒரு சிறந்த முதலீட்டு முறையென சொல்கிறார்கள்? பார்ப்போமா?

SIP என்றால் "Systematic Investment Plan".

அதாவது...
ஒவ்வொரு மாதமும்,
ஒரு குறிப்பிட்ட தொகையினை,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,
தவறாமல் முதலீடு செய்து வருவது.
சரி. முதலீட்டு வழிகளில், இதைத்தான் சிறந்ததொரு வழியென்று சொல்கிறார்களே. ஏன்?

பொதுவாக, முதலீடு செய்யும்போது, consistency மற்றும் discipline, இவை இரண்டும் மிக மிக முக்கியமானது. இதனை பின்பற்ற பெரும்பான்மையான முதலீட்டாளர்களால் முடியாது.
இந்த இரண்டையும், SIP முறை முதலீடு, முதலீட்டாளர்களை தவறாமல் பின்பற்ற வைக்கிறது. Automated Debit மூலம் Discipline மற்றும் consistency யை கொடுக்கிறது.

சரி. SIP மூலம் எதிலெல்லாம் முதலீடு செய்யலாம்?
1) Mutual Funds (பரஸ்பர நிதி)
2) Shares (பங்குகள்)
Read 11 tweets
Nov 4
வீட்டுக் கடன்கள் - An Alternative Approach

ரொம்ப மாசங்களா, வீட்டுக் கடன் பத்தியும், அதை கடன் மாதிரி பாக்காம, முதலீடு மாதிரி consider பண்ணினா, என்னவெல்லாம் செய்யணும்ன்னு ஒரு திரட்டு போடணும்ன்னு பிளான் பண்ணி, இப்போதான் பண்ண முடிஞ்சிது. முழுக்க படிங்க.
உங்களுக்கு/உங்க குடும்பத்துக்கு இந்த முறை சரியாக தோன்றினால், அதை செய்யுங்க. போதும்.

இந்த திரட்டுக்கு நாம எடுக்கப் போற கடன் விபரங்கள்:
தொகை: ₹60,00,000 (60 லட்சம்)
EMI தொகை: ₹50,186
கடன் காலம்: 20 ஆண்டுகள்
நீங்கள் செலுத்தும் மொத்த தொகை: ₹1,20,44,737
விலையில்லா வீடு:

நீங்க வாங்குற வீடு, உங்களுக்கு 20 வருட முடிவில் எந்தவொரு செலவுமில்லாமல் இலவசமாக வேண்டுமா? நான் சொல்லும் வழியை பின்பற்றுங்கள்.

EMI செலுத்துவது கூடவே, ₹15,000 க்கு ஒரு SIP தொடங்குங்கள். அந்த SIP முதலீட்டுத் தொகையை வருடா வருடம் 10% அதிகரித்துக் கொண்டே வாருங்கள்.
Read 6 tweets
Oct 28
குரங்குகளின் கையில் பூமாலை

RBI’s MPC வரும் நவம்பர் 3ஆம் தேதி கூடவிருக்கிறது. இது, வழக்கமான quarterly review அல்ல.

ரிசர்வ் வங்கி, தனது பணவீக்க கட்டுப்பாட்டு விகித (4% +/-2%) இலக்கை எட்டாததால், தங்களது விளக்கத்தை அரசுக்கு சமர்ப்பிக்கவே இந்த கூட்டம்.
கடந்த 9 மாதங்களாக ரிசர்வ் வங்கி எடுத்த வரி அதிகரிப்பு முயற்சியினால் பணவீக்க கட்டுப்பாட்டு இலக்கை எட்ட முடியவில்லை. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம் 7.41% ஆக இருந்தது.

இந்த நேரங்களில், கூட்டம் கூட்டி, ஏன் இலக்கை எட்ட முடியவில்லை? அதற்காக என்னவெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டது?
ஏன் அந்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன? அடுத்து என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பதை அறிக்கையாக அரசுக்கு சமர்ப்பிக்கவே இந்த அவசரக் கூட்டம் கூட்டப் படுகிறது.

கூட்டம் கூடுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. விஷயம் அறிந்தவர்கள் தான் அறிக்கைகளை தயாரிப்பார்களா?
Read 10 tweets
Sep 18
பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதை நமது குழந்தைகளுக்கு எவ்வாறு சொல்லித் தருவது?

வேகமாக வளர்ந்துவரும் காலத்தின் கட்டாயத்தினால், நம்முடைய குழந்தைகள் பல விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்கிறார்கள். இந்த சமயத்தில், நமக்கு 30+ வயதினிலே தெரிந்த பணத்தை கையாளும் விதங்களை இப்பொழுதே
பிள்ளைகளுக்கு சொல்லித் தருவது நல்லது என்றே கருதுகிறேன்.

சரி. முடிவு செய்தாகிவிட்டது. எப்படி கற்றுக் கொடுப்பது?

கற்றுக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன:
• விளையாட்டின் மூலம்
• நிஜ வாழ்க்கை அனுபவங்கள் மூலம்.

நிஜ உலகில் கற்றலை எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால்?
"ஒரு படி முன்னே" என்ற எனது உத்தியைப் பயன்படுத்தவும்.

இதைச் செய்வதற்கான சில வழிகள் இங்கே:

• எல்லா இடங்களிலும் பணம் வைத்திருப்பதில் இருந்து ஒருவித வங்கி அமைப்புக்கு செல்லுங்கள்.

அவர்களின் பணப்பை, பாக்கெட்டுகள் மற்றும் படுக்கையறையின் தரை போன்ற வெவ்வேறு இடங்களில் பணம் இருந்தால்,
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(