Dr MouthMatters Profile picture
Dec 17 18 tweets 3 min read
#திமுக
திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) பற்றி பல விஷமத்தனமான பொய்கள் பரப்பப்படுகின்றன..
ஆனால் உண்மை அப்படி அல்ல.
திமுக நாட்டுப்பற்றுள்ள கட்சி. சுதந்திர போராட்ட இயக்கத்தில் இணைந்து போராடிய திராவிட கழகத்தின் செல்லப்பிள்ளை திமுக..
திமுகவின் தந்தை திராவிட கழகத்திடம் பயந்தே வெள்ளையர்கள் சென்னையில் இருந்து ஓடினார்கள் என்பது திராவிட வரலாறு..
திமுக வை தொடங்கிய அண்ணாத்துரை என்பவர், மிகப்பெரிய அறிஞர்.
அவர் தமிழில் எழுதிய தத்துவங்களை ரஷ்ய மொழியிலும், ஆங்கிலத்திலும் காப்பியடித்து பல ஆண்டுகளுக்கு முன்பே
மேற்கத்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் கட்டுரைகளாகவும், புத்தகங்களாகவும் எழுதியிருக்கிறார்கள்...
"எங்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கமே இதுதான்.. நான்பாட்டுக்கு கவிதையை எழுதி கசக்கி போட்டுவிடுவேன், அதை எடுத்து எவனோ சினிமா பாட்டா போட்டுவிடுவான் "
என்று சந்தானம் ஒரு சினிமாவில் சொன்னது
உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு பதிவர் பொறுப்பல்ல.
சட்டமன்றத்தில் கண்ணியமாக நடந்து கொள்வதில் திமுகவினருக்கு இணை யாரும் இல்லை..
படிதாண்டா பத்தினி, மாற்றான் தோட்டத்து மல்லிகை, திராவிட நாடு எங்கே என்று தெரிந்து கொள்ள பாவாடை நாடாவை…..
என்றெல்லாம் மிக கண்ணியமாக, அவையடக்கத்துடன் பேசி உலக அரங்கில் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டியவர்கள் திமுகவினர் மட்டுமே.
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவிடம் நடத்தப்பட்ட சம்பவம் இவர்கள் பெண்களை தங்கள் கண்கள் போல் மதிக்கும் நல்லொழுக்கத்தின் அத்தாட்சி...
இன்றும் கச்சத்தீவை மீட்க ஆவேசமாக போராடும் ஒரே இயக்கம் திமுகதான்.
கச்சத்தீவு யார் ஆட்சியில் தாரை வாக்கப்பட்டது என்று கேட்பவர்கள் தமிழின துரோகிகள்..
சமஸ்கிருதத்தை ஒழிக்க திராவிடம், உதயசூரியன், கருணாநிதி என்ற கலப்படமில்லாத சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தும் தந்திரயுக்தியை
உலக சரித்திரத்தில் வேறெங்கும் காணமுடியாது...
இதில் இசுடாலின் என தூய தமிழில் யாராவது அழைத்தால் அவரை உடன் பிறப்புகள் தூய தமிழில் வாழ்த்துவது காதுகளில் தேன் போல பாயும்..
ஹிந்தி மொழியை தமிழகத்தில் நுழைய தடை விதித்து சாதனை படைத்தது திமுக..
ஆனால் பிளாக்கில் சாராயம் விற்பது போல அவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுவது ஏன் என்று கேட்டால் அதுதான் திராவிடியம் என்ற பதில் வரும்..
கள்ளச் சாராயத்திலிருந்து அப்பாவி மக்களின் உயிரை காப்பாற்ற சாராயத்தை தனது கட்சி தலைவர்களின் சாராய ஆலைகளில் உற்பத்தி செய்து
அதை அரசு மூலமாக விற்பனை செய்து குடிமகன்களின் குடி காக்கும் விடியல் அரசு, திமுக அரசு..
நிலமற்றவர்கள் அனைவருக்கும இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்க உறுதியளித்த, கலைஞர் இடப்பற்றாக்குறை காரணமாக அவர்களுக்கு தனது இதயத்தில் இடம் கொடுத்த பாசத் தலைவன்...
ரௌடியிசம், கட்டப் பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு போன்றவை என்ன என்பதை இன்றுவரை தெரிந்து கொள்ளாத விடியல் அரசு திமுக அரசு..
ஊழலுக்கு நான் நெருப்பு என திமுக தலைவர் முழங்குவார்,
அந்த நெருப்பில் ஆ.ராசா, செந்தில் பாலாஜி போன்ற பலர் குளிர் காய்வார்கள்..
இலங்கை தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்ட ஒரே இயக்கம் தி.மு.க மட்டுமே..
ஆனால் உரிமை கிடைப்பதற்குள் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் அவசரப்பட்டு உயிரை விட்டுவிட்டால் அதற்கு கழகம் பொறுப்பாக முடியாது..
ரஷ்ய அதிபர் ஸ்டாலின் சாவதற்கு இரண்டு நாள் முன்பே இரங்கல் கூட்டம் நடத்திய வரலாறு இவர்களுக்கு மட்டுமே சொந்தம்.
இதில் அவரின் பெயரை இப்போதைய தலைவருக்கு அப்போதைய தலைவர் சூட்டியது வேற லெவல்..
சென்னையை சிங்கார சென்னையாக மாற்றிய பெருமை இவர்களுக்கே சொந்தம்.
தற்போது சென்னையை வெனிஸ் நகருக்கு இணையாக இந்த அரசு தரம் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது.
விவசாயிகளின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய சென்னையில் 2500 கோடியில் பூங்காவும், 100 கோடியில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சிலையும் அமைக்க பாடுபடும் இயக்கம் திமுக.
கொரோனா தடுப்பூசிக்காக உலக அளவில் டெண்டர் கோரிய ஒரே மாநில அரசு திமுக அரசுதான்.
இது சைனா அதிபர் ஜின்பிங்கையே மிரள வைத்தது என உடன் பிறப்புகள் புளகாங்கிதம் அடைந்தனர்.
நீட் தேர்வு ரத்து, கச்சத்தீவு மீட்பு, என்று கொடுத்த
வாக்குறுதிகளை மறக்காமல் வாக்குறுதிகளாகவே வைத்திருக்கும் ஒரே அரசு...
உலகின் ஆகச்சிறந்த அறிவாளிகள் படிக்கும் ஒரே பத்திரிக்கையான முரசொலி இவர்கள் குடும்ப பத்திரிக்கை....
ஆனால் பாருங்கள் நிறைய உடன் பிறப்புகள் ஏனோ முரசொலியை படிப்பது இல்லை...
காரணம் மதிய உணவுக்கு மட்டுமே அவர்கள் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதால்..
சுயமரியாதை திருமணம் என்ற உலகின் ஆகச்சிறந்த நகைச்சுவை நாடகத்தை இன்றளவும் நடத்தி கொண்டு இருக்கும் ஒரே நாடக கம்பெனி திமுகதான்...
சாதியை தமிழகத்தில் இருந்து முற்றாக ஒழித்து விடுவோம் என சூளுரைத்து விட்டு திமுக தலைவர்கள் சாதி சங்க மாநாடுகளில் பெருமிதமாக கலந்து கொள்ளும் அழகே தனி....
இனியாவது திமுக வின் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு பச்சை திராவிடனாக மாறுங்கள் மாக்களே..

Sundar S

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr MouthMatters

Dr MouthMatters Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GanKanchi

Dec 17
நன்றி திரு காமாட்சிதேவர் மகராஜன் அவர்கள் *மோடி வந்த பிறகு ப.சிதம்பரம் பங்களாவில் உள்ள தொட்டிகளில் கோடிக்கணக்கில் முட்டைகோஸ் பயிரிடாதது ஏன்?*
*இப்போதெல்லாம் சுப்ரியா சூலே தனது பத்து ஏக்கர் நிலத்தில் 20 கோடி மதிப்பிலான பயிர்களை ஏன் பயிரிட முடியவில்லை?*
*ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி போன பிறகு ராபர்ட் வதேரா ஏன் நிலம் வாங்கவில்லை?*
*உ.பி.யில் இருந்து சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறிய பிறகு அகிலேஷ் யாதவ் சைஃபை விழாவை ஏன் கொண்டாடவில்லை?*
*பகுஜன் சமாஜ் கட்சி அரசு வெளியேறிய பிறகு, மாயாவதியின் பிறந்தநாளில் வைரம், கிரீடங்கள் மற்றும் நோட்டுகளால் எடை போடப்படாதது ஏன்?*
*காங்கிரஸ் அரசு போன பிறகு மும்பையில் ஏன் ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, தாவூத் இப்ராஹிம் மீண்டும் பிறக்கவில்லை?*
Read 5 tweets
Dec 17
Sri Meenakshi Amman Temple ❤🇮🇳
Sri #Meenakshi Amman Temple, Tamil Nadu In the ancient temple city of #Madurai, in the state of Tamil Nadu, on the southern bank of Vaigai river, stands the magnificent Meenakshi #Amman Temple. It is dedicated to
Meenakshi (Sanskrit term meaning 'fish eyed'), a form of #Goddess Parvati, consort of Lord #Shiva, worshipped here as Lord Sundaresvara. The goddess Meenakshi is the principal deity of the temple, unlike most Shiva temples in #South India where Shiva is the principal deity.
Read 15 tweets
Dec 16
ஒரு குடிகாரக கணவன்‌. நன்றாகக்‌ குடித்து விட்டுப்‌ போதையில்‌
மனைவியோடு சண்டை போடுகிறான்‌. மனைவி ஏதோ வேகத்தில்‌ திட்டி
விடுகிறாள்‌. அவள்‌ திட்டிவிட்டாளே என்று அரிவாளை எடுத்துக்‌ கொண்டு
அவளைத்‌ துரத்துகின்றான்‌. துரத்தப்படும்‌ மனைவி வெகு வேகமாக ஓடுகிறாள்‌.
ஓடிப்போனவள்‌
கணவனுக்குத்‌ தெரியாமல்‌ ஒரு வீட்டில்‌ அடைக்கலம்‌
கேட்கிறாள்‌. அவளுக்கு ஒருவன்‌ அடைக்கலம்‌ கொடுக்கிறான்‌. வீட்டுக்குள்ளே அவளை மறைத்து வைக்கிறான்‌. பின்னாலேயே கணவன்‌ வருகிறான்‌. “என்‌
மனைவி இங்கே வந்தாளா? ” என்று கேட்கிறான்‌.
உடனே அடைக்கலம்‌ கொடுத்தவன்‌, 'நாம்‌ உண்மையல்லவா பேச வேண்டும்‌”
என்று கருதக் கூடாது.
என்ன செய்ய வேண்டும்‌?
“இல்லையே! உன்‌ மனைவி இங்கே வரவில்லையே! அவள்‌ யாரென்றே
எனக்குத்‌ தெரியாதே!” என்று ஒரு பொய்யைச்‌ சொல்ல வேண்டும்‌.
அப்படி அவன்‌ பொய்யைச்‌ சொன்னால்‌, அவளின்‌ கணவன்‌ வேறொரு
Read 16 tweets
Dec 15
சபரிமலையின் ஏழு அம்சங்கள்....
கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்கின்றனர்.
அதன்படி ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை ஏழு அம்சங்களை கொண்டு திகழ்கிறது. அவற்றை பற்றி பார்க்கலாம் .
சபரிமலை :
பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில் சபரிமலை சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தி புனித நாளில் பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி உருவாய் காட்சியளிப்பார்.
பம்பை :
பம்பை நதிக்கரையில் முனிவர்கள், குடில்கள் அமைத்து யாகம் செய்ததாக புராண வரலாறு கூறுகிறது. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாகும். இன்றும் ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்து வருகின்றனர்.
Read 12 tweets
Dec 15
இந்த படத்தில் இருக்கும் இவர் தான் சபரிமலை ஐயப்பசாமிக்கு 'உறங்கும் பாட்டு ஹரிவராசனம் பாடலை இயற்றியவர்.
சபரிமலையில் ஐயப்பசாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறங்குப்பாட்டு அர்த்தசாமபூஜை முடிந்த பின் நடை சாத்தும் பாடலாக ஒலிக்கும்.
இந்தப் பாடலை இயற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கம்பங்குடி
ஸ்ரீ குளத்து ஐயர்.
இவர் 1920 - ஆம் வருடம் இந்தப் பாடலை இயற்றினார்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி எனும் ஊரில் பிறந்தவர்.
கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற
Read 12 tweets
Dec 14
படித்ததில் பிடித்தது*

*ராமநாத ஐயர்* என்பவர் மிகச்சிறந்த மற்றும் பிஸியான வக்கீலாக இருக்கிறார். அவரிடம் ஒரு கொலைகாரன் சென்று சொல்கிறான்.

"ஐயா இரண்டு பேரை கொலை செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள். எத்தனை பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்று!!
கொலைகாரர்களை கூட காப்பாற்றும் தொழிலா நான் இருக்கிறேன்? என்று அந்த ராமநாத ஐயர் நினைக்கிறார். அதன் பின் வெறுத்துப்போய் கோட்டை [Coat] சுழற்றி வைக்கிறார். அதற்கப்புறம் சாகும் வரை அவர் கோட் [Coat] போடவில்லை.
சட்டத்தை குறித்து *"லா லெக்ஸிகன்" (The Law Lexicon)* என்கிற புத்தகத்தை எழுதுகிறார்.

அதைத்தான் அப்போதைய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி அவர்கள்,
ஒரு கூட்டத்தில் இந்த புத்தகம் குறித்து பேசும்போது - ஒவ்வொரு வழக்கறிஞரும் அவசியம் படித்து பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(