இந்த உலக கோப்பை முடிந்தது, அவரவர் வீடு திரும்பி விட்டார்கள்!

5 மாச லீவுல போன தொழிலாளர்கள் Construction வேலைக்கு திரும்பி விடுவார்கள்!

அதுதான் நமக்கு வெளியில் தெரிவது!
இதில் தான்னிச்சையாக நடந்து கொண்டிருக்கும் ஒரு அரசியலை மேற்குலகு நிச்சயமாக கவனித்திருக்கும்!

Thread…👇

1/next
இத்தனை ஆண்டுகளாக வெவ்வேறு திசையில் நின்ற வளைகுடா மற்றும் இஸ்லாமிய நாடுகள் மெல்ல மெல்ல நெருங்கி வருகின்றது!
இது அமெரிக்கா போன்ற நாடுகளின் கண்ணை உறுத்தவே செய்யும்!

தற்போது #RussianUkrainian போருக்கு பிறகு அமெரிக்காவின் உலகளாவிய பெரியண்ணன் கைப்பிடியானது விலக துவங்கியுள்ளது!

2/next
52 நாடுகளாய் தனித்து பிரிந்து நின்ற இஸ்லாமிய நாடுகளை பெரிய அளவில் ஒன்றிணைக்க கத்தார் ஆடிய ஆட்டம் தான் இந்த உலக கோப்பை தொடர்!

சவுதி,துபாய் எல்லாம் USA வின் குரல்கள்!
மேற்கினை தாண்டி பேசி விட முடியாது என்பதே யதார்த்தம்!

அவர்களிடம் சண்டை போடுவது Qatar க்கு தான் நட்டம்.,

3/Next
இந்த நேரத்தில் தான்
WC- க்கான நாள் வரும் வரை அமைதி காத்தது கத்தார்!

முதலில் Ticket விற்பனையில் இஸ்ரேல் பெயரை நீக்கி #Palestine என இணைய தளத்தில் ஏற்றினார்கள்!
அது மறைமுகமாக USA எதிர்ப்பை பதிவு செய்தல்!

அதே நேரத்தில்,
ரஷ்யா விடம் EU பெற முடியாத எரிவாயு-வை EU க்கு வழங்குவது!

4/N
போட்டி துவங்கும் வரை, நிறைய பிரச்சனைகள் வெடித்து கிளம்பியது!
LGBTQ கைதுகள், பொது வெளியில் மேட்ச் ஒளிபரப்ப கட்டணம் என நிறைய!

ஆனால், போட்டி துவங்கியதும் ஆங்காங்கே பாலஸ்தீன் கொடியை பறக்க விட்டு இஸ்லாமிய நாடுகளை ஒன்றாக இணைக்க துவங்கினார்கள்!

5 / Next 👇
அடுத்ததாக, மேற்குலகும் அதன் ஊடகங்களும் பரப்பிய அவதூறுகளை உடைக்க,
Social Media வை நம்பினார்கள்!
அதில் முக்கியமாக Tik Tok பெரிதாக உதவியது!

Western பெண்களிடம் Qatar அனுபவம் பற்றியும்,West ஊடகங்கள் கூறும் Propaganda பற்றியும் கேள்வி கேட்டு பேட்டி எடுத்து ஒளிபரப்புவது!

6/next
Football பார்க்க வந்த பல
S Media Influencer -கள்
ஒரு இஸ்லாமிய நாட்டின் மீதான பார்வையை பெரும்பான்மையாக மாற்றி விட்டார்கள்!

இவை முதல் 7 - 10 நாட்களில் நடந்தேறி விட்டது!

அடுத்து, மதுபானம் கிடையாது மைதானங்களில் என்ற அறிவிப்பு பெரிய அளவில் எதிர்ப்பை சம்பாதித்தாலும்……,

7 /Next
இரு வாரத்தில்
"முதன்முறையாக பாதுகாப்பாக மைதானத்தில் Football பார்த்தோம்" என பெண்களே கூறியது தான் அதன் வெற்றி!

அதோடு Morocco வெற்றி என்பது மொத்த Arab World-யை இணைத்து விட்டதாக அரபிய நண்பர்கள் கருதுகிறார்கள்!

இந்த படத்தை காட்டி,
இப்படி இதற்கு முன் பார்த்துள்ளாயா என்கின்றனர்!

8/N
இது கத்தார் மன்னர், சவுதி கொடியுடன் அர்ஜெண்டினா -வுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் புகைப்படம்!

இதில் என்ன இருக்கிறது என்று கேட்டேன்,

சவுதி (Pro USA) - கத்தார் இரண்டும் இணைவது என்பது எங்களின் நீண்ட கால ஏக்கம் என்கிறார் அரபி நண்பர்!

9/next
Palestine -க்காக நீங்கள் (Arab world) ஏன் ஒன்றாக இணைந்து ஆதரவாக நிற்கவில்லை,
அவர்களும் நீங்களும் ஒரே மதம் என்று மட்டும் கூறிக் கொள்கிறீர்களே?
- என நான் பல முறை கேள்வி எழுப்பிய போதெல்லாம், பதில் இன்றி தடுமாறியுள்ளார்கள்.

ஆனால், முதன் முறையாக ஒரு வித நம்பிக்கையோடு…,

10 / next
நாங்கள் (Arab World) ஒன்றிணைவோம், சர்வதேச அரசியல் தளத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்!

Me:- அது எத்தனை % நடைமுறை சாத்தியம்?

ஒருவருக்கு மற்றொருவர் துணையாக நிற்பது என்பது தான் எங்களின் வாழ்வியல், சமய கோட்பாடு!
அது மெல்ல மெல்ல 52 நாடுகளிலும் நடக்கும்.

11/ Next
இதே சமயத்தில் OPEC-ல் (Organization Of the Petroleum Export Countries) இருக்கும் 13 நாடுகளில் Saudi & Venizula
முக்கியமானவை!
உலகின் 80% கச்சா எண்ணெய் இவர்கள் தான் ஏற்றுமதி செய்கிறார்கள்!
இதில் EU வின் பெரிய Supplier என்ற Russia வும் உள்ளது!

ரஷ்யா மீது தடை வந்த போது…,

12/Next
Qatar தான்…,
EU-க்கு Oil தர முன் வந்தது!

OPEC தற்போது USA விரும்பாத முடிவுகளை எடுக்க துவங்கி விட்ட நிலையில்…,
Gulf நாடுகள் ஒன்றிணைய தடையாக இருக்கப் போவது இஸ்ரேல் உடனான
சௌதி & அமீரக உறவுகள் மட்டுமே!

Billion $ செலவுகள் எந்த அளவு Diplomatic பலலை தரும் என்று காலம் சொல்லும்!

🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தோழன் O.3

தோழன் O.3 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @pk_comrade_03

Jun 17
" நல்லவேளை வந்துட்டீங்களா"
வாங்க……, வாங்க!

- இது உக்ரைன் உள்ளே ரஷ்ய ராணுவம் நுழைந்த பிறகு மரிய போல்-யை பிடித்த வீரர்களிடம் பெண் ஒருவர் உதிர்த்த வார்த்தைகள்!

இந்த செய்தி உங்களுக்கு புதிதாக கூட இருக்கலாம்!
நீங்க நம்புவதற்கு கூட மறுக்கலாம்!

Thread……👇
உக்ரைன் மக்கள் உலகம் முழுக்க அகதியாக செல்லும் அவல நிலைக்கு ரஷ்யா தான் காரணம் என மேற்குல ஊடகங்கள் சத்தியம் செய்யாத குறையாக செய்திகளை ஒளிபரப்பும் போது, எப்படி அந்த ஒரு பெண் அதுவும் சோவியத் தோட்டாக்கள் துளைத்த வீட்டுக்குள் இருந்து வெளி வந்து அந்த வார்த்தைகளை கூற காரணம் என்ன?
👇
2014- 15 ல் அமெரிக்க, இங்கிலாந்து, கனடா அரசுகள் ஆயுதங்களும் பணமும் கொண்டு வந்து குவிக்க ஆரம்பித்தது உக்ரைன் உள்ளே!
அதாவது ரஷ்யாவின் Border ல் தங்களுக்கு ஆதரவான ஆயுதபடை வேண்டுமென்று!

ஆனால்,
போதுமான நபர்கள் அவர்களிடம் இல்லை!

அதற்கும் ஆட்களை வேலைக்கு எடுத்து தந்தது US & UK
👇
Read 9 tweets
May 9
இது அவசரத்தில் எடுத்த முடிவா ?

திமுக ஆட்சிக்கு வந்து 2 மாதத்தில் இதே போன்ற நிகழ்வு நடந்ததும்., தோழர். திருமா சென்று ஆறுதல் கூறி அதற்கு இங்கே சிலர் அவரை விமர்சனம் செய்ததும் நீங்கள் அறிந்ததே !

உங்களுக்கும் எனக்கும் தெரிந்தது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது..,

1/Next
என்று சொல்கிறீர்கள் !
அப்படியே வேலை பளு என்று வைத்துக் கொண்டாளும்..., அதிகாரிகளை கையாளுவது யார் ?
இதை பற்றி எந்த முன் அறிவும் இல்லாதவர்களா அதிகாரிகள் ?
அல்லது அரசு அவர்களுக்கு சரியாக வழி காட்டவில்லையா ?

இயக்கங்கள் மக்களோடு நின்று நீதி மன்றம் சென்று உரிமையை மீட்க..,

2/ Next
வேண்டும் என்கிறீர்கள்,
சரி..,
எடப்பாடி ஆட்சியில் அதான் செய்தோம் !

சமூக நீதி ஆட்சி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஆட்சியிலும் அதை தொடர தயாராகவே உள்ளோம் !

ஏற்கனவே கோட்டை பட்டினத்தில் ஒரு மீனவர் உடலை Post Mortem கூட செய்ய வாக்கு இல்லாத அரசு என்று நிரூபித்து விட்டீர்கள்!

3 / Next
Read 4 tweets
May 9
2015 டிசம்பரில் பெய்த மழையை சாக்காக வைத்து பல குடிசை வாழ் மக்கள் இடம் பெயர செய்யப் பட்டனர்.
சைதாபேட்டை மற்றும் சென்னையின் முக்கிய பகுதியில் வசித்த பலர்,
செம்மஞ்சேரி, குமரன் நகர், கண்ணகி நகர் என!

1/ Next
இன்று அப் பகுதிகள் கிட்ட தட்ட ஓர்
தீண்ட தகாக பகுதிகள் போல காவல்துறையாலும் பகட்டு வாழ்க்கை பண்ணாடைகளாலும் சித்தரிக்கப் பட்டுள்ளது!
அங்கே தான் திருட்டு, களவு என பலரும் தொடர்பானவர்கள் இருப்பது போல!

உண்மையில் இவர்கள் தான் மனதளவில் "தாழ்த்தப் படும் " மக்கள்.

2/next
2016- ல் செம்மஞ்சேரி-யிலிருந்து,
ஓர் செயின் பறிப்பு வழக்கில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவனை அழைத்து சென்று கண் மண் தெரியாமல் போலீஸ் அடித்ததில் அவனின் செவித் திறன் பறி போனது!
மறு நாள் அவனை தவறாக அழைத்து சென்று விட்டோம் எனக் கூறி ரோட்டில் இறக்கி விட்டு சென்றது காவல் துறை!

3/next
Read 15 tweets
May 4
மேற்குலகம் Swift பரிவர்த்தனை-யில் தடை போட்டதும்……,
ரஷ்யா மொத்தமா முடிஞ்சுதுன்னு தான் நானெல்லாம் நினைச்சேன்!

April ல்ல இருந்து என் நாட்டு காசுல தான் நீ Oil வாங்கனும்னு…… புடின் அடிச்ச Bye cycle கிக்-யை யாருமே எதிர்பார்க்கலை!

அதோட ரிசல்ட் இது!

அதோட……,

1/Next
@Apple, @CocaCola MecD, Pepsi, KFC -ன்னு பல மேற்குலக சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ரஷ்யா-வை விட்டு வெளியேறி விட்டது!

எதுமே பேசாம அமைதியா இருந்துச்சு ரஷ்யா!
ஒரு மாசம் முடிஞ்சுது, நிதி அமைச்சர் ரஷ்யா-வுல இருக்குற அனைத்து வகை சிறு குறு நிறுவனங்களுக்கும் ஒரு அறிவிப்பு கொடுத்தார்.

2/N
Telecom, Cola, Fast food -ன்னு அத்தனைக்கும் அதே Specifications அதே சுவை
அதே Method ன்னு அங்க அங்க உற்பத்தியை தொடங்க சொல்லிட்டார்!

You Tube க்கு பதில் RTube வந்து விட்டது!
MecD-க்கு பதில் R Donalds……ன்னு வரிசையா Copy Paste போட ஆரம்பிச்சிட்டாங்க ரஷ்யா முழுக்க!

3/N
Read 7 tweets
Feb 27
NATO + (உக்ரைன்) vs ரஷ்யா மோதல்!

உலக அரசியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கு
மட்டும் அறிய வேண்டியவை:-

பனிப்போர் முடியும் போது, அதாவது #Soviet பிரியும் போது மேற்குலக நாடுகளும் பிரிந்து செல்லும் சோவியத் நாடுகள் சிலவும் ரஷ்யா-விடம் பரஸ்பர வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டனர்.

Thread..👇
அதில் ஒன்று எந்த காலத்திலும் NATO படைகளோடு Russia-வின் எல்லை நாடுகள் இணையாது ! இதன் மூலம் எந்த காலத்திலும் ரஷ்யாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று எதுவும் வரத்து என்பதே அது !
அதற்க்கு எந்த Paper Document-ம் கிடையாது !

#RussiaUkraineConflict
#NATO
#SovietUnion

👇
வாய் வார்த்தையில் Gentleman Agreement என்ற வகையிலேயே பேசி பிரிந்தனர் !

இன்று NATO விற்கு ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உக்ரைன் உள்ளே படைகளை நிறுத்தி கிழக்கு Europe -ன் எல்லைகள் அனைத்தும் NATO -வின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது ஆசை !

👇
Read 27 tweets
Feb 4
போராடி என்ன கிழிச்சிடுவீங்க என கேட்டும் சிலருக்கு இந்த கதை சமர்ப்பணம் !

போராடி கிழித்த கதை !

1955 டிச-1 அலபாமா மாகாணத்தின் Montgomery வீதியில் பயணிக்கும் ஓர் பேருந்தில் அமர்ந்திருந்தார் ரோஸா பார்க்-ஸ்.

Thread...,👇

#RosaParks
#BlackHistoryMonth
அவர் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளுமாறு ஓர் வெள்ளை இனத்தவர் அவரை பணிக்கிறார்!

நான் ஏன் எழ வேண்டும்? நானும் பயணச்சீட்டு பெற்று அதற்கான உரிய பணத்தை கொடுத்து தான் பயணிக்கிறேன் என்றார் ரோஸா!

இல்லை,நீ ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கை அதனால் நகர வேண்டும் என்கிறார்!

👇
அதாவது, நீ கருப்பின பெண் நான் வெள்ளை இனத்தை சேர்ந்தவள் எனவே இடத்தை எனக்கு விட்டுக் கொடு என்கிறார்!

அவர் மறுக்கவே, அந்த பேருந்தின் ஓட்டுனர் மீண்டும் கருப்பர்கள் அனைவரும் பின் பக்கமாக சென்று அமருமாறு பணிக்கிறார்! அனைவரும் சென்ற பின்னரும் ரோஸா எழ வில்லை!

👇
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(