#ஹனுமத்_ஜயந்தி_ஸ்பெஷல்
பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக் கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் #ஆஞ்சநேயர். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது
அனுமன் பிறந்த #அஞ்சனை_கிராமம். ஊரைச் சுற்றி கட்வா நதி ஓடுகிறது. இதை அஞ்சனை ஆறு என்றே அழைக்கின்றனர். இங்கே உள்ள குகைக்குள் மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதனச் சிலை உள்ளது. இதை 'பிராசீன் மூர்த்தி' என்கின்றனர். ஐந்து படிகளைக் கடந்து சற்று உயரே சென்றால்
அனுமனுடன் திகழும் அஞ்சனையின் புதிய பளிங்குச் சிலையையும், சற்று இடப்புறத்தில் இடதுகையில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் #பஜ்ரங்பலியின் சிறிய விக்ரகமும், வலது கோடியில் அஞ்சனாதேவியின் புராதன விக்ரகமும் உள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம், சிந்து வாடாவில், சாம்வலி என்ற இடத்தில்
#பள்ளிக்கொண்ட_அனுமன் கோயில் உள்ளது. நாக்பூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு. இங்கு கருவறையில் கதாயுதம் அருகில் இருக்க, கால் மேல் கால் போட்டுக் கொண்டு படுத்த நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் அனுமன். அரைக்கண் மூடிய நிலையில் இருக்கும் இவரைத் தூங்காமல் தூங்கும் நிலையில்
உள்ளதாகக் கூறுவர். இதுபோன்ற தரிசனத்தை வேறெங்கும் காண்பது அரிது.
#ராமதாசர் என்ற மகான் கங்கை நதியில் கண்டெடுத்த அழகிய ஆஞ்சநேயர் விக்கிரகம், காசிமா நகரில் உள்ள #அனுமன்_கட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மூலவரான இந்த ஆஞ்சநேயர் தன் வலதுகையைத் தலைக்கு மேல் தூக்கியவாரும் இடதுகையை
கீழே தொங்கவிட்டும் காட்சி அளிக்கிறார். சீதா பிராட்டியைத் தேடிச்சென்ற அனுமன், இராவணனது தர்பாரில் மிக கம்பீரமாக அவனுடன் வாதிடும் அனுமனின் திருக்கோலத்தை பிரசித்தி பெற்ற #கும்பகோணம்_ராமசுவாமி கோயிலில் தரிசிக்கலாம்.
பெங்களூர் மகாலட்சுமி புரத்தில் 22 அடி உயர #பிரசன்ன_வீர_ஆஞ்சநேயர்
கோயில் உள்ளது. சிறு குன்றின் மீது ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கியுள்ளார். இவருக்கு நேர் எதிரில் கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. ஆஞ்சநேயரின் வலதுகையில் சஞ்சீவி மலையும், இடது கையில் கதாயுதமும் கொண்டுள்ளார். இங்குள்ள சந்நதியை வலமாகச் சுற்றி வரும் போது அஷ்டலட்சுமிகளும், இடமாக சுற்றி வரும்போது
அஷ்ட விநாயகர்களும் அமைந்து இருப்பது மிகவும் சிறப்புக்குரியது.
காஞ்சியிலிருந்து கலவை செல்லும் வழியில் உள்ள ஊர் #ஐயங்கார்_குளம். இங்குள்ள அனுமன் ஆலயம் லட்சுமி குமார தாத்தாச்சாரியார் என்பவரால் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு 136 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. அதன்
தென்புறத்தில் நீராழி மண்டபம் போல் அழகாக அமைந்துள்ளது அனுமன் கோயில். ஒரே கல்லில் வடிக்கப்பட்ட தூண்கள், நாற்புறமும் கோபுரங்கள், நீண்ட மண்டபம், உட்பிராகாரம் என அமைந்துள்ளது. கருவறையில் கை கூப்பியவராக அருள்புரிகிறார் ஆஞ்சநேயர்.
மதுரை உசிலம்பட்டி சாலையில் ஆனையூர் உள்ளது. இந்த ஊரில்
உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில், ஆஞ்சநேயரின் தாயாரான அஞ்சனா தேவிக்குத் தனிச்சந்நதி உள்ளது. அஞ்சனா தேவியின் வலப்புறம் குழந்தை வடிவில் ஆஞ்சநேயரும், இடப்புறம் ஒரு பெண்ணும் காட்சியளிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ளது முடியனூர் கிராமம். இங்கே அனந்தவல்லி சமேத
ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தம் கால்களை கல்லால் ஆன சங்கிலியால் கட்டிக் கொண்டு இருக்கிறார். ராமாவதாரம் முடிந்து ராமர் வைகுண்டம் புறப்பட்டபோது அனுமனை அழைக்க, அனுமன் போக மறுத்து பூமியிலேயே இருக்க விரும்பி தன் கால்களை சங்கிலியால் கட்டிக்கொண்டுள்ளார்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வெளிப் புறத்தில் 'பக்த ஆஞ்சநேயர்' நெடிய உருவத்துடன் விஸ்வ ரூபியாக காட்சி தருகிறார். இவர் சந்நதியில் தான் திருப்பாணாழ்வருக்கும் சந்நதி இருக்கிறது.
ஆதிக்கு (முதலுக்கு)ப் பிள்ளையார், அந்தத்திற்கு (முடிவுக்கு) அனுமன். இவர்கள் இருவரும் இணைந்த வடிவமே
#ஆதியந்தப்பிரபு அர்த்தநாரீஸ்வர வடிவம் போல, சங்கர நாராயணர் வடிவம்போல இரட்டைக் கடவுள்கள் இணைந்த வடிவம் இது. இந்த வடிவத்தைச் சென்னை அடையாறு மத்திய கைலாச ஆலயத்திலும், சேலம் கந்தகிரி ஆலயத்திலும் வணங்கி வழிபடலாம்.
அலகாபாத், பிரயாகையின் கரையில் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் காணலாம். அவர்
சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். ஒரு தோளில் ராம-லட்சுமணரும் மற்றொரு கையில் கதாயுதமும் ஏந்திப்படுத்திருக்கிறார். காலடியில் மயில்ராவனின் உருவம் இருக்கிறது. போரிட்ட களைப்பில் ஆஞ்சநேயர் படுத்து இளைப்பாறும் கோலம் இது என்கிறார்கள். உடல் முழுவதும் சிந்தூரப் பொடி போட்ட அலங்காரக்
கோலத்தில் இருக்கிறார்.
அயோத்திமா நகரின் நடுவில் #அனுமன்மந்திர் உள்ளது.
சந்நதியில் வெள்ளி சிங்காதனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் அனுமனை அழகாக அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்கள். முகத்துக்கு மட்டும் குங்குமம் தடவி சிவப்பாக அலங்காரம் செய்கிறார்கள். இங்கே எப்போதும் பெண்கள் கூட்டம்
அதிகம்.
காசி மாநகரில் உள்ள #அனுமன்_காட் இலிருந்து காசி இந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் வழியில் 'சங்கட் நிவாரண ஆஞ்சநேயர் ஆலயம்' உள்ளது. இங்கே முழுக்க முழுக்க செந்தூர வர்ணம் பூசிய ஆஞ்சநேயர் வடிவத்தை வழிபடுகிறார்கள். எதிரே ராமர்-சீதை ஆலயமும் உள்ளது.
இமயத்தில் உள்ள
பத்ரிநாத்திலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில் பாண்டுகேஸ்வரம் உள்ளது. இவ்வூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் #அனுமன்சட்டி என்ற ஊரில் பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயம் உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் இங்கே வந்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.
பூரி ஜகந்நாதர் ஆலயத்தின் தட்சிண வாயிலின் உட்புறம் 15 அடி
உயரத்தில் கிரீடம் அணிந்த, பட்டுப் பீதாம்பரம் உடுத்திய அழகான ஆஞ்சநேயர் விக்கிரகம் அமைந்து உள்ளது. சங்கு வடிவமான சித்திர வாயிலுடன் கருவறை உள்ளது. சுமார் ஒரு கோடி பக்தர்கள் ஆண்டுதோறும் இங்கே வந்து வழிபடுகிறார்கள்.
கேரளம் திரூர் தாலுக்காவில் உள்ள ஆலத்தியூர் என்னும் ஊரில் கீர்த்தி
வாய்ந்த அனுமன் கோயில் உள்ளது. இங்கே சந்நதியில் ராமர்பிரான் சீதையில்லாமல் அனுமனுடன் இருக்கிறார். சீதையைத் தேடிச் செல்லும் அனுமனுக்கு அவளிடம் சொல்ல வேண்டியவைகளை சொல்லிக் கொடுக்கும் பாவத்தில் இருக்கிறார் ராமர். இங்கே பெரிய அளவில் அவல், நைவேத்தியம் தயாரிக்கப்படுகிறது. அதில் தேங்காய்
வெல்லம், சர்க்கரை, சுக்கு, சீரகம் போன்றவையும் உரிய விகிதத்தில் கலந்து தயாரிக்கிறார்கள். இதுவே பக்தர்களுக்கும் பிரசாதம்.
ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் ராமாயணத்தைப் பாராயணம் செய்யும் நிலையில் தனிச்சந்நதியில் காட்சித் தருகிறார். அருகில் ராமர் பட்டாபிஷேகம் கோலத்தில்!
ராணிப்பேடடையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது தெங்கால் என்ற ஊர். இங்குள்ள சிவாலயத்தில் நான்கு திருக்கரங்களுடன் மான், மழு ஏந்தியவாறு சிவசொரூபமாக காட்சி தருகிறார். இவரை #சிவசொரூ_ஆஞ்சநேயர் என போற்றுகிறார்கள். இவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார்
தஞ்சாவூரின்
மேல வீதியில் அமைந்துள்ளது #பிரதாப_ஆஞ்சநேயர் கோயில். மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது. இவர் வாயு மூலையில் கோயில் கொண்டிருப்பதால் 'மூலை அனுமார்' எனப்படுகிறார். இங்குள்ள ஆலயத்தூணில், யோக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவரை வணங்கி விட்டுத்தான் மராட்டிய மன்னர்கள் போருக்குச்
சென்றுள்ளனர்.
புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள குடுமியான் மலையில் 12-ம் நூற்றாண்டு சிவாலயத்தில் அழகான ஆஞ்சநேயர், தலையில் கிரீடம், முறுக்கு மீசை, வளைந்த புருவங்கள், கழுத்தில் விநோதமான மாலை, காலைச் சுற்றியிருக்கும் வால் என்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய வீர அனுமன் அருள்
பாலிக்கிறார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் 8-ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இங்கு ராமதூதனாக வந்த அனுமன் தனக்கு இருக்கை அளிக்காத இராவணன் எதிரில் தனது வாலையே சுருட்டி ஆசனமாக்கி அமர்ந்த நிலையில் அற்புத கோலத்தில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.
தாமிரபரணி நதி
வடக்கில் இருந்து தெற்காகப் பாயும் தட்சிண கங்கைக்கு அருகில் #தெய்வச்செயல்புரம் என்னும் தலத்தில் அருமையாகக் குடிகொண்டு அருளாட்சி புரிந்து வருகிறார் 'விஸ்வரூப சுந்தர வரத ஆஞ்சநேயர்' சுமார் 5 அடி உயரத்தில் சாளக்கிராமத் திருமேனியராக விஸ்வரூபம் எடுத்து நின்றபடி அருட்பாலிக்கிறார். இதை
அடுத்து மூலவர் சந்நதிக்கு மேல் சுமார் 77 அடி உயரத்தில் மற்றொரு அனுமனும் காட்சி தருகிறார்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மேற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஒரு அனுமன் கோயில். வால் இல்லாமல் கூப்பிய கரங்களுடன் அருள்கிறார் மூலவர் அனுமன்.
அருகில் அத்தி மரத்தில் உருவாக்கப்பட்ட அனுமன் அபய ஹஸ்த கோலத்தில் அருள்புரிகிறார். இக்கோயிலுக்குப் பின்புறம் ஆஞ்சநேயர் தீர்த்தம் வளாகத்தில் கடல் மணலால் ஆன சுயம்பு அனுமனையும் தரிசிக்கலாம் ஒரே கோயில் மூன்று அனுமன்கள்.
கர்நாடகாவில் உள்ள சிருங்கேரியின் மேற்கே 1200 வருடங்களுக்கு முன்
ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிருங்கேரியின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் #கெரே_ஆஞ்சநேயர் எண்ணற்ற பக்தர்களின் ஆராதனை தெய்வமாக விளங்கி வருகிறார்.
இராமபிரானின் வழிபாட்டிற்காகத் திருநள்ளாறு திருத்தலத்திலிருந்து தர்பைப்புல் எடுத்து வரும்போது அனுமன் அமர்ந்து இளைப்பாறிய இடம்
#அனுமந்தக்குடி. அனுமன் அமர்ந்த குடி என்பது அனுமந்தக்குடி ஆகிவிட்டது. இங்குள்ள சிவன் கோயிலில் ஆஞ்சநேயருக்கு தனிச் சந்நதி உள்ளது.
திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள தாடிக்கொம்பு எனும் சிற்றூர். இங்குள்ள சௌந்திரராஜ பெருமாள் ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. விஜயநகர அரசர்களால் உருவாக்கப்பட்டது
இங்குள்ள மண்டபத்தில் 10 அடி உயரமுள்ள நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் உள்ளன. போர்க்
கோலம் கொண்ட ராமனை அநாயசமாகத் தாங்கி நிற்கிறார் ஆஞ்சநேயர். முகத்தில் தம் இறைவனைத் தாங்கி நிற்கும் களிப்பு. வில்லில் பூட்டிய அம்பை எய்த நிலையில் காட்சி தருகிறார் ராமர். அபூர்வ சிற்பம் இது.
திருவனந்தபுரம் #தொழுவன்_கோட்டில் சாமுண்டி தேவி கோயில் உள்ளது. இங்கு ஆறு அடி உயரமுள்ள பஞ்சலோக ஆஞ்சநேயர் விக்கிரகம் உள்ளது. இந்தியாவிலேயே மிக உயரமான 'பஞ்சலோக ஆஞ்சநேயர் விக்கிரகம்' இதுதான். இந்தக்கோயில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே திறந்திருக்கும்
மயிலாடுதுறை-கும்பகோணத்துக்கு இடையில் உள்ளது கோழி குத்தி வான முட்டிப் பெருமாள் கோயில். இங்கு ஐந்தடி உயரத்தில் #சப்தஸ்வர_ஆஞ்சநேயர் என்ற அபூர்வமான விக்கிரகம் உள்ளது. இவர் மிகவும் வரப்பிரசாதி. பக்தர்களின் துன்பத்தை விரைந்து களைபவர். இவர் தனது நீண்ட வாலைச் சுருட்டி பின்னந்தலையில்
வைத்திருக்கிறார். இந்த விக்கிரகத்தை எங்கு தட்டினாலும் சப்தஸ்வரங்கன் ஒலிக்கும்.
மந்த்ராலயத்துக்கு அருகில் உள்ளது #பஞ்சமுகி திருக்கோயில். ராகவேந்திரர் தியானம் செய்து தரிசித்த ஆஞ்சநேயர் இங்கு குடிகொண்டுள்ளார். ஐந்து முகங்களுடன் அருள்புரிகிறார். இரவு நேரங்களில் கிராமத்தை வலம் வந்து
இவர் காப்பதாக ஐதீகம். அதனால் இவர் 'காவல் காக்கும் ஆஞ்சநேயர்' எனப்படுகிறார். அதனால் இவருக்கு பெரிய பெரிய காலணிகள் செய்து வைக்கப்படுகின்றன.
சிதம்பரம்-காரைக்கால் சாலையில் உள்ளது அனந்த மங்கலம். இங்கே #திரிநேத்ரதசபுஜ_வீர_ஆஞ்சநேயர் அருளாட்சி புரிகிறார். இந்த விசேஷ ஆஞ்சநேயர் மூன்று
கண்கள், பத்துக்கரங்கள், சிறகுகள், கரங்களில் பத்து வகையான ஆயுதங்கள் என போர்க்கோலத்தில் காட்சி தருகிறார்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி ஆலயம் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் 'கருடஸ்தம்ப ஆஞ்சநேயராகத் தனிக்கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார்.
கருடஸ்தம்பத்தின் அடிப்பாகம் 16 அடி சுற்றளவும், உயரம் 60 அடியுமாக உள்ளது. ஒரே கல்லில் உருவானது.
கர்நாடகாவில் உள்ள உடுப்பிக்கு கிழக்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறிய குன்று ஒன்றின் அடிவாரத்தில் உள்ள குளக்கரையில் விசேஷமான கோலத்தில் இருக்கும் அனுமனை தரிசிக்கலாம். மூலவரான
இவர் மேனி எங்கும் ரோமங்களுடன், கோவணம் மட்டும் அணிந்து #பாலரூப_ஆஞ்சநேயரார் ஆக தரிசனம் தருகிறார்.
இருளில் தெளிவாகவும், பகலில் மங்கலான தோற்றத்திலும் காட்சி தரும் அதிசய ஆஞ்சநேயரை மைசூர் சாமுண்டி மலையில் உள்ள #லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் தரிசிக்கலாம். இவர் இங்குள்ள துளசி
மாடம் அருகே சுயம்புவாகத் தோன்றியவர்.கர்நாடகா மாநிலம் பெங்களூரு 'மகாலட்சுமி லே அவுட்' என்ற இடத்தில் சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகளால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்ட ஆஞ்சநேயரைக் காணலாம். இவர் கம்பீரமான தோற்றத்தில் 27 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
ஆந்திர மாநிலம்
குண்டூர் அருகில் உள்ள பொன்னூர். இங்குள்ள பிரம்மாண்டமான ஆலயத்தில் சுமார் 30 அடி உயரமுள்ள கருடாழ்வார் மற்றும் சுமார் 25 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் ஆகியோர் ஒரே சந்நதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்புரிவதைக் காணலாம்.
சேலம் மாவட்டத்தில் நாமக்கல் மலைக்கோட்டையில் நின்ற திருக்கோலத்தில்
18 அடி உயரத்தில் திறந்த மண்டபத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார். இது பழமையான ஆலயம். ஏணி மீது ஏறி நின்றுதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவரது தலைக்குமேல் வால் சுருண்டிருக்கிறது. அனுமன் வளர்ந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
அரக்கோணத்திலிருந்து சுமார்
25 கி.மீ. தொலைவில் உள்ள சோளிங்கரில் சிறிய மலை மீது மேற்கு நோக்கி யோக நரசிம்மரைப் பார்த்த வண்ணம் யோக ஆஞ்சநேயர் அமர்ந்துள்ளார். இது மிகவும் அபூர்வமான சேவை. அழகிய பீடத்தின் மீது நான்கு கரங்களுடன் விளங்குகிறார். சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம், ஜபமாலையும் கொண்டு ஒரு கை விரல்களை
மடக்கிய நிலையிலும் காட்சி தருகிறார். இந்த லோக ஆஞ்சநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடக்கிறது. ஆறுகால பூஜையும் உண்டு.
நாகர்கோவில் குமரி மார்க்கத்தில் #சுசீந்திரம் என்ற புகழ் பெற்ற ஸ்தலம் உள்ளது. மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து #தாணுமாலயன் என்ற பெயரோடு எழுந்தருளி
உள்ளார்கள். இங்கே அனுமன் கூப்பிய கரங்களுடன் சற்று ஒய்யாரமாக நெளிந்தபடியே 18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார். பழம் பெருமை வாய்ந்த இத்திருக்கோயிலில் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தருளும் இவருக்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் என்பது திருநாமம்.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை ஒரு
கையிலும் இன்னொரு கையில் கதையையும் தாங்கி நிற்கும் காட்சியைக் காண வேண்டுமானால் ஆந்திர மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் காணலாம். இவர் பத்துக்கரங்களுடன், நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர் மற்றும் வானர முகத்துடன் காட்சி தருகிறார்.
சென்னை நங்கநல்லூரில்
கூப்பிய கரங்களுடன் 32 அடி உயரத்தில் விஸ்வரூபராக ஆதிவியாதிஹர ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார்.
பாண்டிச்சேரி அருகே பஞ்சவடி என்ற இடத்தில் வராகர், கருடர், ஆஞ்சநேயர், நரசிம்மர், ஹயக்ரீவர் என ஐந்து முகங்களுடன் சுமார் 36 அடி உயரத்தில் நின்ற கோலம் கொண்டு
அருட்பாலிக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள #நாந்தோரா எனும் திருத்தலத்தில் நின்ற திருக்கோலத்தில் சுமார் 110 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் விஸ்வரூப வடிவில் காட்சி தருகிறார்.
In the year 1924, Kaveri and Kollidam were overflowing with floods that threatened to merge them into a single river. Tiruvaiyaru and its surroundings were the worst affected by the floods. At that time, for nearly fifteen days, cartloads of cooked food were sent
from Kanchi Matam for the thousands of poor people in the area. The food was served by the Congress workers under the supervision of Lawyer Sarangapani Iyengar, leader of the Tiruvaiyaru Congress Committee. The daily culinary needs of SriMatam were reduced to the minimum, in
order to use the stored provisions for feeding the poor. They worshipped the great sage who fed them as God. The press praised this social service as the largest till then by a Sanatana Religious Institution.
During the last days of the year 1931, the persecution of the Congress
#ஒடத்துறை_ஸ்ரீஆற்றழகியசிங்கர்
கீழச்சிந்தாமணி
மூலவர் : லட்சுமி நரசிம்மர், ஆற்றழகிய சிங்கர்
உற்சவர் : அழகிய மணவாளன், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்
தாயார் : செஞ்சுலட்சுமி
தீர்த்தம் : காவேரி
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
புராணபெயர் : பத்மகிரி
ஊர் : ஓடத்துறை, கீழச்சிந்தாமணி
திருச்சி.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம் "தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கு எல்லாம் நரசிம்மனே உள்ளான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. அதனால் நரசிம்மனே உன்னை
சரணடைகிறேன் என்கிறது. குழந்தையாகிய பிரகலாதனின் தீவிர பக்திக்கும் நம்பிக்கைக்கும் கட்டுப் பட்டு அழைத்தவுடனே அஞ்சேல் என அடுத்த கணமே திருமால் எடுத்த அவதாரமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம். கணத்தில் தோன்றி ஒரு நாழிகையில் மறைந்த அவதாரத்தை பின்பு வந்த பல முனிவர்களும் ரிஷிகளும் தாங்களும் இந்த
#hanumanjayanti #HanumatPancharatnamStotra
Shri Hanumat Pancharatnam Stotra is composed by Jagadguru Sri Adi Sankara Bhagavad Pada. Shri Hanumat Pancharatna means Garland of Five gems on Shri Hanuman. Shri Hanuman with unswerving devotion towards Shri Rama is a humble devotee
who is spurred on to great deeds because of his unshakeable faith in Rama. Kanchi #MahaPeriyava has said Hanuman is empowered with both Intellect and Physical Strength and hence by worshiping him one will be blessed with all the wealth, namely wisdom, strength, fame, valour,
fearlessness, health, determination, articulateness. The phala sruti of Hanumat Pancharatnam says, one who recites this Pancharatna Stotra of Hanuman, becomes a devotee of Sri Rama, after having enjoyed all objects for a long time in this world.
These Sanskrit verses translated
#MahaPeriyava
Sri Maha Periyava was camping in Satara in Maharashtra. There were a lot of people waiting to have darshan of the Mahan. There was a devotee, who was proficient in playing the veena. On hearing about Paramacharya’s visit to Satara, he too came to visit HH. He had a
desire to play the veena in front of Maha Periyava. After some time, the veena player managed to have darshan of Maha Periyava. Upon having darshan, he requested Paramacharya if he could play a small piece on his veena. Maha Periyava gave him permission and he started to play the
veena. It is a well-known fact that Paramacharya was adept in all arts and fine-arts. The veena player’s performance was great and everyone in the crowd liked it very much. There was a brief silence following this and then Maha Periyava picked up the veena and played a small
#நற்சிந்தனை விஷ்ணு நாமத்தை சதா கீர்த்தனம் செய்வதால், கோடிக் கணக்கான தீர்த்த யாத்திரை ஸ்தலங்களை விஜயம் செய்த பலனைப் பெறலாம் என கூறுகிறது #வாமனபுராணம். கோடிக்கணக்கான புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதால் பெறாத பலனை ஹரி நாம கீர்த்தனையால் பெறலாம் என கூறுகிறார் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு
ஓர் உடை பழையதாகும் போது, அதை அகற்றி விட்டு வேறொன்றை அணிகிறோம். அது போல் ஆத்மா தனது ஆசைகளின் அடிப்படையில் உடையை மாற்றிக் கொள்கிறது. தெய்வீகத் துகளான ஆத்மா, நீர்வாழ்வனவற்றிலிருந்து தொடங்கி, மரம், செடிகளாகவும், பின்னர் பூச்சிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என்ற உடல்களினுள் இடம்
பெயர்கிறது. அதன்பின் மனித வாழ்விற்கு இடம் பெயர்கிறது. இங்கிருந்து நாம் மீண்டும் பரிணாமச் சுழற்சிக்கு கீழே இறங்கலாம் அல்லது தெய்வீக வாழ்விற்கு உயரலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. மனிதப் பிறவியின் சிறப்பு அதன் வளர்ச்சி பெற்ற உணர்வாகும். ஆகவே, பூனைகளையும்
Those who want to know about #MahaPeriyava can please read this detailed post. It gives a glimpse into how He became the head of Sankara Mutt and His life after that.
His Holiness Jagadguru Pujya Sri Chandrasekharendra Saraswathi Swamigal or the Sage of Kanchi was the 68th
Madathipathi of the Kanchi Kamakoti Peetam. He is one of the greatest saints that history has ever witnessed. He is usually referred to as “The Walking God” "Visible God of Kaliyuga" "Incarnation of God" "Embodiment of Love, Peace and Compassion” “Confluence of Dharma" "Destroyer
of all Evils" and “Essence of Knowledge".
Swaminathan (Purvashram name of His Holiness) was born on 20 May 1894, under Anuradha star into a Kannadiga Smartha Hoysala Karnataka family in Viluppuram, South Arcot District, Tamil Nadu. He was the second son of Subramaniya Shastrigal