#ஒடத்துறை_ஸ்ரீஆற்றழகியசிங்கர்
கீழச்சிந்தாமணி
மூலவர் : லட்சுமி நரசிம்மர், ஆற்றழகிய சிங்கர்
உற்சவர் : அழகிய மணவாளன், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்
தாயார் : செஞ்சுலட்சுமி
தீர்த்தம் : காவேரி
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
புராணபெயர் : பத்மகிரி
ஊர் : ஓடத்துறை, கீழச்சிந்தாமணி
திருச்சி.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம் "தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கு எல்லாம் நரசிம்மனே உள்ளான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. அதனால் நரசிம்மனே உன்னை
சரணடைகிறேன் என்கிறது. குழந்தையாகிய பிரகலாதனின் தீவிர பக்திக்கும் நம்பிக்கைக்கும் கட்டுப் பட்டு அழைத்தவுடனே அஞ்சேல் என அடுத்த கணமே திருமால் எடுத்த அவதாரமே ஸ்ரீ நரசிம்ம அவதாரம். கணத்தில் தோன்றி ஒரு நாழிகையில் மறைந்த அவதாரத்தை பின்பு வந்த பல முனிவர்களும் ரிஷிகளும் தாங்களும் இந்த
அவதாரத்தை காண வேண்டும் என்று வேண்ட பக்தர்களின் குறை தீர்க்க அல்லது அவர்களுக்கு அருள் செய்ய வேண்டி அந்த அந்த தலங்களில் காட்சி தந்தவர் நரசிம்ம பிரபு. பல்வேறு தலங்களில் பல்வேறு கோலங்களில் நரசிம்மர் கோயில் கொண்டிருக்கும் இடங்களில் ஒன்று நம்பெருமாள் குடி கொண்டுள்ள திருவரங்கம்.
இத்தலத்துடன் #மேட்டழகியசிங்கர், #காட்டழகியசிங்கர், #ஆற்றழகியசிங்கர் என மூன்று நரசிங்கங்கள் தொடர்புடையன. இவற்றுள் ஆற்றழகிய சிங்கர் கோயில் கொண்ட வரலாற்றினை காண்போம்.
நரசிம்மாவதாரத்தில் தூணிலிருந்து வெளி வந்தார். ஆற்றழகிய சிங்கர் பூமிக்கு அடியில் இருந்து வந்தவர். திருச்சி
திருவெறும்பூருக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமம் சோழமாதேவி. ராஜ ராஜ சோழன் துணைவி சோழமாதேவி என்றும் அரசி பெருமாள் பெயரில் பக்தி கொண்டு எழுதி வைத்த ஊர் அவ்வூரில் ராஜ ராஜ விண்ணகர் என்ற பெயரில் ஒரு திருமால் கோவிலையும் கட்டி பல்வகை நிவந்தங்களையும் அளித்திருந்தாள். சோழ சாம்ராஜ்யம்
மெல்ல வலுவிழந்து பிற்கால பாண்டியர்களும் குறுநில மன்னர்களும் சோழ தமிழகத்தைப் பிரித்து தனித்தனியாக ஆளத் துவங்கிய நேரம் எதோ காரணங்களால் கோவில் சிதைந்து அழிந்து மண்மூடிப் போய் விளை நிலமானது. நாளடைவில் ஒரு விவசாயி கோவில் இருந்த இடத்தை உழுது கொண்டிருந்த போது ஏர் முனை பட்டு பூமிக்குள்
இருந்து வெளியே வந்தார் லட்சுமி நரசிம்மர். ஊரார் அனைவரும் கூடி புதுக்கோவில் அமைப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்திலிருந்து சிங்கம் ஒன்றின் பிளிறல் ஒலி கேட்டது.
ஒருவர் மீது அருள் இறங்கி, காவிரியின் வடகரையில் காட்டழகிய சிங்கராக இருந்து விலங்குகளிடம் இருந்து மக்களைக்
காப்பது போல் துஷ்டர்களிடமிருந்து தென் கரையில் அமர்ந்து மக்களைக் காக்கப் போவதாக கூறியது. அங்கே சிறிய திருவடி தனக்காக காத்துக் கொண்டு இருப்பதாகவும் தன்னை கிழக்கு நோக்கி நிறுவுக என அசரீரியாய் ஒலித்தது. கடவுள் கட்டளையை கருத்தாய் ஏற்ற மக்கள் மெல்ல நரசிம்ம மூர்த்தியை காவிரி தென்கரையில்
அமைந்திருந்த மண்டபத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கு அத்தல அதிபதியாக வடக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நரசிம்மர் வரவுக்காக காத்திருப்பது போல நின்றிருந்தார் நெற்றிக்கண் ஆஞ்சனேயர். ஆஞ்சநேயர் மூன்று கண்களுடன் மூலஸ்தானத்தின் உள்ளேயே விசேஷ பார்வையில் திவ்ய சொரூபத்தில் இங்கு உள்ளார்.
நரசிம்மரை ப்ரதிஷ்டை செய்த பிறகு மண்டபமே நிறைவானது போல் அமைந்தது. அது முதல் அங்கு தினமும் வழிபாடுகள் குறைவின்றி நடந்தன. ஆற்றங்கரையில் வாராது வந்து அமர்ந்து மாமணி அமர்ந்த பகுதி சிந்தாமணி எனவும் பெயர் பெற்றது. காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர் நரசிம்மர் வந்தமர்ந்த பின்பு அந்த இடம்
செல்வமும் நலமும் பெற்று வளரத் துவங்கியது. விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் திருவரங்கன் பால் மிக்க ஈடுபாடு கொண்டு பல திருப்பணிகளை செய்யும் போது ஆற்றங்கரையில் அமர்ந்து பல நலன்களை செய்து கொண்டிருந்த ஓடைக்கரை நரசிம்மர் மீதும் அவர்கள் கவனம் திரும்பியது. வீர பூபதி உடையார் என்பவர் அந்த சிறிய
மண்டபத்தை பிரித்து அழகிய கருவறை அமைத்து பெரியாக ஆக்கினார். ஓடத்தில் செல்வோர் நரசிம்மரையும் நெற்றிக்கண் அனுமனையும் வணங்கி விட்டு இக்கறை அல்லது அக்கறை செல்வது என்பது நடைமுறையாகிப் போனது. அழகிய சிங்கர் ஆற்றின் கரையில் இருந்ததால் காவிரிக்கரை ஆற்றழகிய சிங்கர் என்ற பெயர் நிலைத்தது.
ஆங்கிலேயர் காலத்தில் தென் மற்றும் வடகரையை இணைக்க பாலம் அமைத்த போது மூன்று முறையும் இடிந்து விழுந்தது. அச்சமயம் இத்தல ஆஞ்சனேயர் ஆங்கிலேய பொறியாளரின் கனவில் தோன்றி இத்தலத்து லட்சுமி நரசிம்ம ஸ்வாமிக்கு கர்ப்பக்ரஹம் (கருவறை) நிர்மணம் செய்து கொடுத்தால் பாலம் கட்டும் பணி எளிதில்
முடிவடையும் என்று கூறினார். அதன்படி கட்டி கொடுக்க பாலம் கட்டும் பணியும் முடிந்தது. கருவறையில் மூலவர் ஸ்ரீ ஆற்றழகிய சிங்கப்பெருமாள் தன் மடியினில் லட்சுமியை அமர்த்திக்கொண்டு லக்ஷமி நரசிம்மராக கிழக்கு நோக்கி சேவை அருளுகிறார். உற்சவர் அழகிய மணவாளன். மூலவர் சந்நதிக்கு எதிர் புறம்
மேற்கு நோக்கியபடி கருடாழ்வார் அமர்ந்திருக்கின்றார். கருடன் தனது வலது திருக்கரத்தில் நரசிம்மர் திருவடியும் இடது கரத்தில் தாயாரின் திருவடியையம் தாங்கி இருக்கும் படி சேவை சாதிப்பதால் கருட சேவை லெக்ஷ்மி நரசிம்மராக மிகவும் விசேஷமான ஸ்வரூபத்தில் அருள் பாலிக்கிறார். ஸ்ரீ நம்மாழ்வார்,
ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ இரமானுஜர் மற்றும் மணவாள மாமுனி சந்நதிகள் அமைந்து உள்ளன. காவேரியின் வடகரையில் காட்டழகிய சிங்கராகவும் காவேரி தென் கரையில் ஆற்றழகியசிங்கராகவும் சேவை சாதிப்பது தனி சிறப்பு. ஆதியில் திருவரங்கத்திற்க்கு செல்ல பாலம் இல்லாத காரணத்தால் காவேரியில் ஓடம் மூலம் சென்றனர்.
மாதம் மும்மாரி பெய்து காவேரியில் ஏற்படும் வெள்ள பெருக்கின காரணமாக, மக்கள் அவதியுற்று தரிசனம் செய்ய முடியாமல் வருந்தி பிரார்த்தனை செய்தததை ஏற்று ஸ்ரீரங்க பெருமாள் இத்தலத்தில் உபய நாச்சியாருடன் உற்சவராக ஸேவை சாதிக்கிறார். மூலவரை பிரதக்ஷணமாகச் சுற்றி வரும் பாதையில் பல்வேறு ஊர்களில்
உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் படங்கள் பெரிது பெரிதாக ஒரு சேர தரிசனம் செய்ய மாட்டப் பட்டுள்ளன. எப்பொழுதிலும் எவ்வகை வெள்ளம் வந்தாலும் காப்பாற்றி கரை சேர்க்கும் ஒரே தெய்வமாக இருக்கிறார். ஆதலால் ஆற்றைக் கடந்து செல்பவர்களும் வருபவர்களும் வணங்கி விட்டுச் செல்லுவதும் பலன் பெறுவதும்
இக்கோவில் வந்த நாளில் இருந்து வழக்கமாக உள்ளது. எதிரில் அனுமன் காட்சி தருவதால் கஷ்டங்கள் அனைத்தையும் தாண்டி கரை சேர்க்கும் தெய்வமாக விளங்குகிறார்.
மஹாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இது பிரார்த்தனை ஸ்தலமாக கருதப்படுகிறது,
திருமணத்தடை நீங்க 5 சனிக்கிழமைகள் ஜாதகத்தை வைத்து பூஜையும், கார்த்திகை ஞாயிறன்று 108 பிரதஷ்ணம் செய்து வர நினைத்த காரியம் உடனே நிறைவேறும். பிரதி ஸ்வாதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபட குடும்ப ஒற்றுமை தம்பதி ஒற்றுமை பெருகும். பிரதோஷத்தில் பிரார்த்தனை செய்ய குழந்தை பேறு உண்டாகும்.
பௌர்ணமியில் பிரார்த்தனை செய்ய வியாபாரம் பெருகும். அமாவாசையில் பிரார்த்தனை செய்ய ஸரீர ரோகங்கள் நிவர்த்தி ஆகும். சித்திரை ராம நவமி. வைகாசி நரசிம்ம ஜெயந்தி, கருட சேவை புறப்பாடு, ஆடி ஜேஷ்டாபிஷேகம், திருவாடிப்பூரம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆவணி பவித்தோர்ஸ்த்தவம், புரட்டாசி சனிக்கிழமை
மற்றும் நவராத்திரி நாட்கள். விஜய தசமி அன்று குதிரை வாகன புறப்பாடு, கார்த்திகை 5 ஞாயிற்றுக்கிழமையும் மிகவும் விசேஷமாக சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தை சங்கராந்தி அன்று திருமஞ்சனம் நடைபெறும். காட்டழகிய சிங்கர், மேட்டழகிய சிங்கர், ஆற்றழகிய சிங்கர் ஒரேநாளில் வழிபாடு செய்வது நம்
ஜென்ம பாவங்களை போக்கும்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிட நடைபயணத்தில் இந்தக் கோயில் உள்ளது. காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
In the year 1924, Kaveri and Kollidam were overflowing with floods that threatened to merge them into a single river. Tiruvaiyaru and its surroundings were the worst affected by the floods. At that time, for nearly fifteen days, cartloads of cooked food were sent
from Kanchi Matam for the thousands of poor people in the area. The food was served by the Congress workers under the supervision of Lawyer Sarangapani Iyengar, leader of the Tiruvaiyaru Congress Committee. The daily culinary needs of SriMatam were reduced to the minimum, in
order to use the stored provisions for feeding the poor. They worshipped the great sage who fed them as God. The press praised this social service as the largest till then by a Sanatana Religious Institution.
During the last days of the year 1931, the persecution of the Congress
#hanumanjayanti #HanumatPancharatnamStotra
Shri Hanumat Pancharatnam Stotra is composed by Jagadguru Sri Adi Sankara Bhagavad Pada. Shri Hanumat Pancharatna means Garland of Five gems on Shri Hanuman. Shri Hanuman with unswerving devotion towards Shri Rama is a humble devotee
who is spurred on to great deeds because of his unshakeable faith in Rama. Kanchi #MahaPeriyava has said Hanuman is empowered with both Intellect and Physical Strength and hence by worshiping him one will be blessed with all the wealth, namely wisdom, strength, fame, valour,
fearlessness, health, determination, articulateness. The phala sruti of Hanumat Pancharatnam says, one who recites this Pancharatna Stotra of Hanuman, becomes a devotee of Sri Rama, after having enjoyed all objects for a long time in this world.
These Sanskrit verses translated
#MahaPeriyava
Sri Maha Periyava was camping in Satara in Maharashtra. There were a lot of people waiting to have darshan of the Mahan. There was a devotee, who was proficient in playing the veena. On hearing about Paramacharya’s visit to Satara, he too came to visit HH. He had a
desire to play the veena in front of Maha Periyava. After some time, the veena player managed to have darshan of Maha Periyava. Upon having darshan, he requested Paramacharya if he could play a small piece on his veena. Maha Periyava gave him permission and he started to play the
veena. It is a well-known fact that Paramacharya was adept in all arts and fine-arts. The veena player’s performance was great and everyone in the crowd liked it very much. There was a brief silence following this and then Maha Periyava picked up the veena and played a small
#ஹனுமத்_ஜயந்தி_ஸ்பெஷல்
பாரத நாடெங்கும் உள்ள பல்லாயிரக் கணக்கான திருத்தலங்களில், எண்ணற்ற திருநாமங்களுடன், எண்ணற்ற திருக்கோலங்களில் கோயில் கொண்டு அனுக்கிரகம் புரிந்து வருகிறார் #ஆஞ்சநேயர். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து வடகிழக்கில் சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது
அனுமன் பிறந்த #அஞ்சனை_கிராமம். ஊரைச் சுற்றி கட்வா நதி ஓடுகிறது. இதை அஞ்சனை ஆறு என்றே அழைக்கின்றனர். இங்கே உள்ள குகைக்குள் மடியில் குழந்தை அனுமனுடன் திகழும் அஞ்சனா தேவியின் புராதனச் சிலை உள்ளது. இதை 'பிராசீன் மூர்த்தி' என்கின்றனர். ஐந்து படிகளைக் கடந்து சற்று உயரே சென்றால்
அனுமனுடன் திகழும் அஞ்சனையின் புதிய பளிங்குச் சிலையையும், சற்று இடப்புறத்தில் இடதுகையில் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் #பஜ்ரங்பலியின் சிறிய விக்ரகமும், வலது கோடியில் அஞ்சனாதேவியின் புராதன விக்ரகமும் உள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம், சிந்து வாடாவில், சாம்வலி என்ற இடத்தில்
#நற்சிந்தனை விஷ்ணு நாமத்தை சதா கீர்த்தனம் செய்வதால், கோடிக் கணக்கான தீர்த்த யாத்திரை ஸ்தலங்களை விஜயம் செய்த பலனைப் பெறலாம் என கூறுகிறது #வாமனபுராணம். கோடிக்கணக்கான புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்வதால் பெறாத பலனை ஹரி நாம கீர்த்தனையால் பெறலாம் என கூறுகிறார் ஸ்ரீ சைதன்ய மகாப்பிரபு
ஓர் உடை பழையதாகும் போது, அதை அகற்றி விட்டு வேறொன்றை அணிகிறோம். அது போல் ஆத்மா தனது ஆசைகளின் அடிப்படையில் உடையை மாற்றிக் கொள்கிறது. தெய்வீகத் துகளான ஆத்மா, நீர்வாழ்வனவற்றிலிருந்து தொடங்கி, மரம், செடிகளாகவும், பின்னர் பூச்சிகள், ஊர்வன, பறவைகள், விலங்குகள் என்ற உடல்களினுள் இடம்
பெயர்கிறது. அதன்பின் மனித வாழ்விற்கு இடம் பெயர்கிறது. இங்கிருந்து நாம் மீண்டும் பரிணாமச் சுழற்சிக்கு கீழே இறங்கலாம் அல்லது தெய்வீக வாழ்விற்கு உயரலாம். எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் கையில் தான் உள்ளது. மனிதப் பிறவியின் சிறப்பு அதன் வளர்ச்சி பெற்ற உணர்வாகும். ஆகவே, பூனைகளையும்
Those who want to know about #MahaPeriyava can please read this detailed post. It gives a glimpse into how He became the head of Sankara Mutt and His life after that.
His Holiness Jagadguru Pujya Sri Chandrasekharendra Saraswathi Swamigal or the Sage of Kanchi was the 68th
Madathipathi of the Kanchi Kamakoti Peetam. He is one of the greatest saints that history has ever witnessed. He is usually referred to as “The Walking God” "Visible God of Kaliyuga" "Incarnation of God" "Embodiment of Love, Peace and Compassion” “Confluence of Dharma" "Destroyer
of all Evils" and “Essence of Knowledge".
Swaminathan (Purvashram name of His Holiness) was born on 20 May 1894, under Anuradha star into a Kannadiga Smartha Hoysala Karnataka family in Viluppuram, South Arcot District, Tamil Nadu. He was the second son of Subramaniya Shastrigal