*🙏🕉️வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது.
ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ஸ்ரீராமாயண உபன்யாசம், ஸ்ரீராமநாம ஜெபம் பாராயணம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கே ஒரு காலியான மணைப் பலகையைப் போட்டு வைப்பது வழக்கம். உபன்யாசத்தைக் கேட்க அனுமன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அப்பேர்ப்பட்ட ராம பக்தனான ஸ்ரீஅனுமனை வழிபட, சில வழிமுறைகளும் தத்துவங்களும் உள்ளன. அதை அறிந்து, உணர்ந்து ஸ்ரீஅனுமனைத் துதிப்போம்.*🕉️🙏
*வெற்றி(லை) மாலை:*
அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கும் பக்தர்களில் சிலருக்கே இதன் பொருள் புரிந்திருக்கிறது. சீதாபிராட்டியை அனுமன் அசோக வனத்தில் ராமதூதனாகச் சந்தித்தபோது,
சீதை அனுமனின் தலையில் வெற்றிலையை வைத்து 'எப்போதும் சிரஞ்ஜீவியாக வாழ்வாய்!’ என்று ஆசி அருளினார். இதனால், வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் வளம் பெறலாம் என்பது ஐதீகம்!
*வடைமாலை_வழிபாடு* :
நவதான்யங்களில், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சக்தியைக் கொடுப்பது உளுந்து. அனுமனின் தாயார் அஞ்சனாதேவி உளுந்து வடையைச் செய்து கொடுத்ததால், ஸ்ரீஅனுமன் ஆரோக்கியமாகவும் திடமாகவும் திகழ்ந்தாராம். எனவே, அனுமனுக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால், நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
*வெண்ணெய்க்_காப்பு* :
ராவணனுக்கும் ஸ்ரீராமனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள். ஸ்ரீஅனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான்.
அப்போது, தேவர்களும் தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் அனுமன் கையில் வெண்ணெயைக் கொடுத்தார். அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பவேண்டும் என்பது குறிப்பு.
அதன்படியே செய்தார் அனுமன். காரியங்களில் வெற்றி கிடைத்திட, தேக ஆரோக்கியத்துடன் திகழ, ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, ஜெயபஞ்சகத் துதியைச் சொல்லி வழிபடலாம்.
*செந்தூரக்_காப்பு_வழிபாடு* :
அசோகவனத்தில் சீதையிடம் ராமதூதனாக வந்து சந்தித்த அனுமன் சொன்னதைக் கேட்டு, நெற்றியில் செந்தூரம் வைத்துக்கொண்டு, மகிழ்ந்து சிரித்தாளாம் சீதாதேவி. இதைக் கண்ட அனுமனும் மகிழ்ந்து, செந்தூரத்தை உடலெங்கும் பூசிக்கொண்டாராம்.
எனவே, செந்தூரக் காப்பு செய்து ஸ்ரீஅனுமனை வழிபட்டால், வீட்டிலும் மனத்திலும் எப்போதும் மகிழ்ச்சி தங்கும்.
*வாலில்_பொட்டிட்டுப்* *_பிரார்த்தனை:*
பாண்டவர்களில் பராக்கிரமசாலியாக விளங்கிய பீமன், திரௌபதி விரும்பிய பாரிஜாத மலரைத் தேடிக் கானகம் சென்றான். வழியில் கிழக் குரங்கு ஒன்று, நடுவில் வாலை நீட்டிப் படுத்திருந்தது.
அதைத் தாண்டிப்போக விரும்பாமல், வாலைச் சற்றுத் தள்ளி வைத்துக்கொள்ளும்படி சொல்ல, 'நான் மிகவும் களைப்புடன் படுத்திருக்கிறேன். முடிந்தால், நீயே என் வாலை தள்ளி வைத்துவிட்டுச் செல்’ என்றது குரங்கு.
அதன்படியே, அதன் வாலை பீமன் அலட்சியமாக நகர்த்த முயன்றபோது, ஒரு துளிகூட அதை அசைக்க முடியாமல் போகவே, அதிர்ந்து போனான் பீமன். கர்வம் அடங்கினான்.
பின்பு, அந்தக் குரங்குதான் ஸ்ரீஅனுமன் என்பதை அறிந்து, 'நான் அனுமனின் பக்தன். என்னால் முடியும்’ என்று சொல்லியபடி வாலை நகர்த்த முயல, அனுமன் மகிழ்ந்து அவனுக்குத் தன் வாலை நகர்த்தி உதவினார்.
'அனுமனின் வாலுக்கே இத்தனைச் சக்தி இருக்கிறதே! இதை வணங்கினாலே அருள் பெறலாமே’ என்று எண்ணினான் பீமன்.எனவே, வால் வழிபாடு விசேஷம்!
அனுமனின் அருளை எளிதில் பெற, வாலில் பொட்டு வைத்து வழிபடலாம். அதேபோல், மங்கல வடிவான மணியைக் கட்டி வழிபடும் வழக்கமும் உண்டு.
அனுமனின் வாலில் நவகிரகங்கள் சேர்ந்திருப்பதாக அவரது வழிபாட்டுக் கல்பம் கூறுகிறது. ஏழரைச் சனி காலங்களில் அனுமன் வழிபாடு, நம்மை அரணெனக் காக்கும்.
இந்தியாவின் பிரதிநிதியாக ஜநாசபைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்களை அனுப்பி வைத்தார்...
ஐ.நா சபையில் காஷ்மீர் பற்றி சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.
இந்தியாவின் பிரதிநிதி தன் பேச்சை துவங்கினார்
"என் கருத்தை சொல்லும் முன், ஒரு சிறு கதையை சொல்ல விரும்புகிறேன் காஷ்மீர் என்ற பெயர் வர காரணமாய் இருந்த ரிஷி காஷ்யாப் காட்டினூடே சென்று கொண்டிருந்த போது ஒரு அழகிய ஏரியை கண்டார்.
ஆஹா நாம் நீராட நல்லதொரு இடம் என்று தன் உடைகளை களைந்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு நீராட சென்றார்.
திரும்பிவருகையில், அவர் தம் துணிகளை யாரோ சில பாகிஸ்தானியர்கள் களவாடி சென்றிருந்தனர்."
*கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில்; வியக்கவைக்கும் சிற்பக் களஞ்சியம்*!
மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோயில் இது, இந்த பழைமையான சிவன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு
மேலும் ஒரு சான்று எனலாம்.
1
இந்த கோயிலில் மூலவர் கயிலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள். இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுதுச் செல்வதாகக் கூறப்படுகிறது.
2
இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம் "தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கெல்லாம் நரசிம்மனே உள்ளான்.