M.SivaRajan Profile picture
Dec 23 23 tweets 4 min read
#பஞ்சமுக_ஆஞ்சநேயர்

*பஞ்சமுக ஆஞ்சநேயர் அவதரித்த கதை*

குதிரை (ஹயக்ரீவர்), நரசிம்மம், கருடன், வானரம் (ஆஞ்சநேயர்), வராஹம் ஆகிய ஐந்து திருமுகங்கள் கொண்ட ஆஞ்சநேயரை சில கோயில்களில் - விக்கிரகங்களாகவும்,

வீடுகளில் வண்ண படங்களாகவும் காணலாம்

இந்த வடிவம் தான் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
இப்படி, மகிமை மிகு ஐந்து திருமுகங்களுடன் அனுமன் தோன்றியதற்கான காரணத்தை விளக்கும் கதை இது:

யுத்தத்தில் கணக்கிலடங்காத தன் போர் வீரர் களை இழந்த ராவணனுக்கு,

'ஸ்ரீ ராமனால் தானும் கொல்லப்படுவோமோ?' என்ற பயம் எழுந்தது.
எனவே, அவன் பாதாள உலகின் வேந்தனான மயில்ராவணனை வரவழைத் தான்.

பிரம்மனைக் குறித்து தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவன் மயில்ராவணன்.

மாயாஜாலங்கள் செய்வதில் நிபுணன்.

தன்னை வணங்கிய மயில்ராவணனிடம் தனது நிலையை எடுத்துக் கூறி,
ராம, லட்சுமணரை அழிக்கும் படி உத்தரவிட்டான் ராவணன்.

அவன் கட்டளையைச் சிரமேற் கொண்ட மயில்ராவணன், ராம - லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் செய்து புறப்பட்டான்.
விபீஷணனின் ஒற்றர்கள் மூலம் அறிந்த சுக்ரீவன், ராம- லட்சுமணரைப் பாதுகாக்கும் படி அனுமனிடம் கூறினார்.

அனுமன், ராம - லட்சுமணரை பர்ணசாலையின் உள்ளே அமர்த்தி,

தன் வாலினால் பர்ணசாலையைச் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன் மீது அமர்ந்து காவல் புரிந்தார்.
விபீஷணரின் உருவெடுத்த மயில்ராவணன், அனுமனிடம் வந்தான்.

ராம, லட்சுமணரைப் பார்த்து வருவதாகக் கூறி உள்ளே சென்றவன் தனது மாய சக்தியால் அவர்களைச் சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

''மாருதி ஜாக்கிரதை, மயில்ராவ ணன் என் உருவத்தில் கூட இங்கு வர முயற்சிப்பான்.."
என்று அனுமனை எச்சரித்து புறப்பட்டான்.

பாதாள லோகம் வந்த மயில் ராவணன், ராம - லட்சுமணரை நிஜ உருவம் பெறச் செய்தபின் சிறை வைத்தான்.

மயில்ராவணன் சென்ற பிறகு உண்மையான விபீஷணர் அனுமனிடம் வந்தார்.

''இப்போது தானே வந்து போனீர்கள்!'' என்று அவரிடம் வினவினான் அனுமன்.
தான் வரவில்லையே என்றார் வீபிஷணர்.

அனுமன் பதற்றத்துடன் பர்ணசாலைக்குள் சென்று பார்க்க அங்கே ராம - லட்சுமணர் இல்லை.

இது மயில் ராவணனின் வேலையே என்று உணர்ந்தார்.
அவரிடம் மயில் ராவணனது இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹி ராவணன் பற்றியும் சொன்னார் விபீஷணன்.

ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும்,

அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் சொன்னார்.
அதன் படி பாதாள லோகம் சென்ற ஆஞ்சநேயர்,

அங்கிருந்த காளிதேவி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்கு பின்னால் மறைந்து கொண்டார்.

மயில்ராவணனும் மஹிராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம - லட்சுமணரை அழைத்து வந்தனர்.
அப்போது, ''மயில்ராவணா உனது பக்திக்கு மெச்சினேன். நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு.

நீ வர வேண்டாம்!'' என்று காளி போல குரல் கொடுத்தார் அனுமன்.

அதன் படி ராம- லட்சுமணருடன் மஹிராவணன் கோயிலுக்குள் நுழைந்ததும் ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்துக் கொன்றார்.
பிறகு, தான் கொண்டு வந்திருந்த வில், அம்புகளை ராம - லட்சுமணர்களிடம் கொடுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும் படி வேண்டினார்.

நெடுநேரமாகியும், மஹிராவணன் திரும்ப வராததால் சந்தேகம் கொண்ட மயில்ராவணன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
ராம - லட்சுமணர்களை தன் தோள்களில் அமர செய்து மயில்ராவணன் மீது அம்பு களைத் தொடுக்கச் செய்தார் அனுமன்.

மயில்ராவணன் மாயப் போர் புரிந்தான்.

போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணிய அனுமன்,

ராம - லட்சுமணரைக் கீழே இறக்கி விட்டார்.
போரைத் தொடருமாறு கூறி, மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுகளைத் தேடிப் புறப்பட்டார் அனுமன்.

விபீஷணர் கூறியபடி ஏழு கடல்கள் கடந்து, ஒரு தீவை அடைந்தார்.

அங்கு தன்னை எதிர் த்த அரக்கர்களை அழித்து, தடாகம் ஒன்றில் தாம ரைப் பூவுக்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை
எடுத்துக் கொண்டு திரும்பினார்.

'ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொன்றால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்!'

என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தான் மயில்ராவணன்.

அப்படி முடியா விட்டால், கொல்ல முயல்பவரே மடிய நேரிடும்.
அசரீரி மூலம் இதையறிந்த அனுமன் வானரம், நரசிம்மம், கருடன், வராஹம், குதிரை முகங்களோடு விசித்திர உருவெடுத்தார்.

இதைக் கண்ட மயில் ராவணன் நிலை தடுமாறினான்.

ஆஞ்சநேயர் அவனிடம், ''அதர்ம வழிகளில் சென்ற அரக்கனே, நீ அழியப் போகும் நேரம் வந்து விட்டது'' என்று கூறி
பெட்டியைத் திறந்து ஐந்து வண்டுகளையும், ஐந்து முகங்க ளின் வாயினால் ஒரே நேரத்தில் கடித்துத் துப்பினார். வண்டுகள் இறந்தன.

மயில் ராவணன் பாதாளமே அதிரக் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான்.
பிறகு ராம - லட்சுமணர்களை தோள்களில் தூக்கிக் கொண்ட ஆஞ்சநேயர் இலங்கையை அடைந்தார்.

வானர சேனைகள் மகிழ்ந்தன.

பிறகு நடந்த போரில் ராவணன், ஸ்ரீ ராமரால் கொல்லப்பட்டான்.

'ஸ்ரீராமருக்கு வெற்றி' என்ற கோஷம் எங்கும் ஒலித்தது.

தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
மயில்ராவணனின் பிராணன் வாயு சொரூப மானதால்,

தன் உயிரை பறக்கும் ஐந்து வண்டுகளாக மாற்றிக் கொள்ள பிரம்மனிடம் வரம் பெற்றிருந்தான்.

ஒரே நேரத்தில் ஐந்து வண்டுகளையும் எவராலும் பிடிக்க முடியாது என்று இறுமாந் திருந்தான்.
சகல சக்திகளையும் பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயர்,

ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் பாய்ந்து பிடித்ததுடன் அவை எங்கு சென்றாலும் அவற்றைக் கொல்லும் வல்லமை படைத்த பஞ்ச முகங்களுடன் உருவெடுத்தார்.
தாவித் தாவிச் செல்ல வானரம்,

ஆகாயத்தில் பறக்க கருடன்,

பாய்ந்து செல்ல நரசிம்மம்,

பூமியில் ஓட குதிரை,

பாதாளத்தினுள் நுழைய வராஹம் என

'பஞ்சமுக ஆஞ்சநேயராக' உருவெடுத்து மயில்ராவணனை அழித்தார்.
பஞ்ச இந்திரியங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் துயரப்படும் நாம்,

மகிமை மிக்க பஞ்சமுக ஆஞ்சநேயரை தியானித்து வழி பட்டால் தைரியம், பலம், பெரும் புகழ், புத்திக் கூர்மை, ஆரோக்கியம், நல்ல எண்ணங்கள், மன நிம்மதி, குடும்ப ஒற்றுமை, நல்லுறவு ஆகியவற்றுடன் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Dec 23
#வீணை_ஏந்திய_அனுமன்.

ஒரு சமயம் வீணை இசைப்பதில் வல்லவர்களான நாரதருக்கும் தும்புருவுக்கும் வீணையில் யார் சிறந்தவர் என்ற சர்ச்சை எழுந்தது.

தீர்ப்பளிக்க தகுதியானவர் சிவனே என தீர்மானித்து கைலாயம் புறப்பட்டனர்.
வழியில் இருந்த அடர்ந்த காடு ஒன்றில் ஒரு பாறையின் மீது அமர்ந்த படி அனுமன்

*ஜெய் ஶ்ரீராம் ஜெய ஜெய ஶ்ரீராம்*

என ராமநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தார்.

இருவரையும் கண்ட அனுமன் "எங்கே செல்கிறீர்கள்" எனக் கேட்க, இருவரும் நடந்ததைத் தெரிவித்தனர்.
௺"எங்கே எனக்காக நீங்கள் இருவரும் வீணையை இசையுங்கள் கேட்கலாம்" என அனுமன் வேண்ட,

இருவரும் தனித்தனியே வீணை இசைத்தனர்.

"இருவரும் மிக அருமையாக வீணை இசைத்தீர்கள்! நானும் ஒரு முறை இசைக்கலாமா? " என்ற அனுமன்

வீணையை வாங்கி இசைக்கத் தொடங்கினார்.
Read 7 tweets
Dec 23
#சுந்தர_காண்டம்

சுந்தர காண்டம் பாராயணம் 5 நிமிட பாராயணம் செய்யும் போது அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை அல்லது ஒரு சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும்.

'#ராம' நாமம் எங்கு ஒலித்தாலும் அங்கே ஆஞ்சநேயர் ப்ரசன்னமாவார் என்பது ஐதீகம்.

அவர் அமருவதற்காகத் தான் அந்த ஆசனம்.
இந்த 5 நிமிட பாராயணம் உங்கள் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை, ஏற்றங்களை கொண்டு வரும்.

நம்பிக்கையோடு தினசரி படியுங்கள்.

ஸ்ரீ ராம ஜெயம்

சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு

ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான்

இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இராமதூதன் சென்றான்.
Read 14 tweets
Dec 23
#ஜெய்_ஸ்ரீராம்

#ஹனுமன்_சாலீஸா

ஸ்ரீ ராமரின் தீவிர பக்தனான ஹனுமனின் பக்தியைப் போற்றும் விதமாக,

ஹனுமன் சாலீஸாவின் மகத்துவம் என்ன,

அதனை எப்படி பாராயணம் செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போமா !

ஸ்ரீ ராம ஜெயம் என்று சொன்னால் நம்மைத் தேடி வந்து அனைத்து தெய்வங்களும் அருள் புரிவார்கள்.
அதைவிட ஹனுமன் தான் முதலில் வருவார்.

ஸ்ரீராமரை தன் உயிராக நினைத்தவர் ஹனுமன்.

அப்படிப்பட்ட சிரஞ்சீவி ஹனுமனின் பெயரை சொன்னாலே துன்பங்கள், துயரங்கள், தடைகள், தொல்லைகள் தவிடு பொடியாகும்.

ஹனுமனின் அருளைப் பெற துளசிதாசர் வட மொழியில் அருளிய ஹனுமன் சாலீசா எனும் திருமந்திரத்தை
ஹனுமன் ஜெயந்தி இன்றைய தினம் சொல்லி நம் துன்பங்களை வெல்வோம்.

இந்த ஹனுமன் சாலீஸா மந்திரத்தை பாராயணம் செய்யும் முன் உடலை தூய்மை படுத்திக்கொண்டு, தூய ஆடையை உடுத்தி மாருதியை மனதார நினைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும்.
Read 17 tweets
Dec 22
#வைகுண்ட_ஏகாதசி

ஸ்ரீ ரங்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி பெருவிழா தொடங்குகிறது.

இவ்வருட வைகுண்ட ஏகாதசி திருநாள் முன்னிட்டு இன்று (22-12-2022) வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகம் எனப்படும் அரையர் சேவையோடு திருஅத்யாயன திருநாள் தொடக்கம்.
இராமானுசரின் விருப்பப்படி ஸ்ரீ பராசர பட்டர் மேல்கோட்டையில் வாழ்ந்து வந்த மாதவாச்சாரியை இந்த திருநெடுந்தாண்டகம் வியாக்கியானத்தை கொண்டு வாதப் போரில் வென்று தன்னுடைய சீடராகி ஆக்கினார்.
இந்த மாதவாச்சாரியாரே பின்னர் நஞ்சீயர் என்று அழைக்கப்பட்ட பராசரபட்டரின் சீடர்.

பராசரபட்டர் பெரிய பெருமாளின் வளர்ப்பு மகன். இந்த நிகழ்ச்சியைக் கேட்ட பெரிய பெருமாள், பராசரபட்டர் இந்த வியாக்கியானம் சொல்லி கேட்க ஆசைப்பட்டார்.
Read 6 tweets
Dec 22
#ஸப்த_குரு_தரிசனம் !

திருச்சி சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் உள்ளது பிச்சாண்டார் கோவில்.

ஸ்ரீ பிச்சாண்டார் (சிவன்),

ஸ்ரீ புருஷோத்தம பெருமாள்,

பிரம்மதேவன் ஆகிய மூவரும் அருள் வழங்கும் ஒப்பற்ற திருத்தலம் இது.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட ஆலயம்;

108 திருப்பதிகளில் ஸ்ரீ ரங்கத்துக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் திருக்கோயில்;

63 சிவ மூர்த்தங்களில் ஒன்றான பிச்சாடனர் திருக்கோலத்தில் சிவனார் காட்சி தரும் தலம்;
விமானத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் குருபகவான் ஸ்தானத்தில் பிரம்மா அருளும் அற்புதம்...

இப்படி, இந்தக் கோயிலுக்குச் சிறப்புகள் நிறைய உண்டு.

முக்கியமாக...

பிரம்ம குரு,

விஷ்ணு குரு,

சிவ குரு,

சக்தி குரு,

சுப்ரமண்ய குரு

ஆகியோருடன்
Read 4 tweets
Dec 22
#பஞ்சாட்சர_உபதேச_திருவிழா

💥 *பஞ்சாட்சர உபதேச விழா - 28.12.2022* 💥

மார்கழி - 13 புதன்கிழமை.

ஸ்ரீ அமுதவல்லி அம்பாள் ஸமேத ஸ்ரீ பாரிஜாதவனேஸ்வர சுவாமி திருக்கோவில் - திருக்களர்.

மாலை : ஸ்ரீ ஷண்முகப் பெருமானுக்கு அபிஷேகம்.

*உபதேச காட்சி* தொடர்ந்து திருவீதியுலா.
ஆண்டுக்கொருமுறை மார்கழி வளர்பிறைசஷ்டி சதயநட்சத்திரம் கூடிய நன்னாளில் நடைபெறும் உபதேச விழாவில் அன்பர்கள் கலந்துகொண்டு #பஞ்சாட்சரம் ஜெபித்து திருவருளும் குருவருளும் பெற அன்புடன் அழைக்கிறோம். 🙏
இத்தலத்தில் தான் ஷண்முகப் பெருமான் குருமூர்த்தமாக எழுந்தருளி

துருவாசர், வியாஸர், காலவர் மற்றும் கந்தமாதன பருவதவாசிகளாகிய அறுபதினாயிரம் முனிவர்களுக்கும் திருஐந்தெழுத்து (பஞ்சாட்சர)உபதேசம் செய்தருளினார்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(