ஸ்ரீமத் ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டினார்.
ஆனால் சுந்தர் காண்டத்திற்கு ஆஞ்சநேயர் பெயரை சூட்டினார் ஆனால் ஆஞ்சநேயர் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
வால்மீகி முனிவர் ஆஞ்சநேயரை போன்று சமயோசித புத்தி கூர்மையால் சரி வாயு புத்ரா சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டினார்.
இதன் பிறகு இந்த பெயரை நான் இனி கண்டிப்பாக மாற்ற முடியாது என்று ஹனுமனிடம் கூறிவிட்டார் வால்மீகி.
ஆஞ்சநேயரும் ஆஹா அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று சென்று விட்டார்.
வெகு காலம் ஆனதால் ஹனுமனுக்கு தன் அன்னையை பார்க்க ஆசை வரவே
அஞ்சனா தேவியை காண அங்கு சென்றார்.
தன் மகன் ஹனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்த அஞ்சனை வா சுந்தரா வா என்று அழைத்தாள்.
ஹனுமானுக்கு தூக்கி வாரி போட்டது.
தாயே தாங்கள் என்ன கூறினீர்கள் என்று.
அதற்கு சுந்தரா அதுதானே உன் பால்ய பருவ பெயர் நீ தான் மறந்து விட்டாய் ஹனுமா !!
சரி நான் உனக்கு பலகாரம் செய்ய செல்கிறேன் என்று சொல்லி உள்ளே சென்று விட்டார்.
அப்போது தான் ஹனுமனுக்கு புரிந்தது. தன் பெயரை வால்மீகி எனக்கே தெரியாமல் வைத்துவிட்டாரே என்று !!
சுந்தரகாண்டம் படிப்பவர்கள் எண்ணற்ற பலன்களை அடையலாம் என்று நம் ஆச்சாரியார்கள் கூறியுள்ளார்.
சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் அளவில்லாத நன்மைகளை இப்போது காண்போம் !!
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார்.
உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார்.
அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.
9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.
11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.
13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து
சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.
14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.
17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.
18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.
19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
21.சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.
22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.
23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.
24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.
25. ராம நவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.
26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.
29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.
30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.
31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.
34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.
35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில்
சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.
38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.
39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.
40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.
சுந்தரகாண்டம் ஸ்ரீராம் பட்டாபிஷேகம் படத்திற்கு முன்னால் தீபம் ஏற்றி பாராயணம் செய்தால் பலன்கள் உடனே பலிதமாகும்.
கஷ்டங்கள் வரும் போது படிப்பதால் உடனேயே நிவர்த்தியாகும்.
இந்தியாவின் பிரதிநிதியாக ஜநாசபைக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித்தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்களை அனுப்பி வைத்தார்...
ஐ.நா சபையில் காஷ்மீர் பற்றி சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது.
இந்தியாவின் பிரதிநிதி தன் பேச்சை துவங்கினார்
"என் கருத்தை சொல்லும் முன், ஒரு சிறு கதையை சொல்ல விரும்புகிறேன் காஷ்மீர் என்ற பெயர் வர காரணமாய் இருந்த ரிஷி காஷ்யாப் காட்டினூடே சென்று கொண்டிருந்த போது ஒரு அழகிய ஏரியை கண்டார்.
ஆஹா நாம் நீராட நல்லதொரு இடம் என்று தன் உடைகளை களைந்து ஓர் ஓரமாக வைத்துவிட்டு நீராட சென்றார்.
திரும்பிவருகையில், அவர் தம் துணிகளை யாரோ சில பாகிஸ்தானியர்கள் களவாடி சென்றிருந்தனர்."
*கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் தாரமங்கலம் கயிலாசநாதர் கோயில்; வியக்கவைக்கும் சிற்பக் களஞ்சியம்*!
மேற்கு பார்த்தபடி அமைந்த சிவன் கோயில் இது, இந்த பழைமையான சிவன் கோயில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு
மேலும் ஒரு சான்று எனலாம்.
1
இந்த கோயிலில் மூலவர் கயிலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள். இக்கோயிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுதுச் செல்வதாகக் கூறப்படுகிறது.
2
இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பிரபத்தி என்னும் வடமொழி ஸ்லோகம் "தாய், தந்தை, சகோதரன் நண்பன் அறிவு செல்வம் எஜமானுமாய் எல்லாமுமாய், இந்த உலகத்திலும் பரலோகத்திலும் எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கெல்லாம் நரசிம்மனே உள்ளான்.
*🙏🕉️வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது.
ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ஸ்ரீராமாயண உபன்யாசம், ஸ்ரீராமநாம ஜெபம் பாராயணம் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ, அங்கே ஒரு காலியான மணைப் பலகையைப் போட்டு வைப்பது வழக்கம். உபன்யாசத்தைக் கேட்க அனுமன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அப்பேர்ப்பட்ட ராம பக்தனான ஸ்ரீஅனுமனை வழிபட, சில வழிமுறைகளும் தத்துவங்களும் உள்ளன. அதை அறிந்து, உணர்ந்து ஸ்ரீஅனுமனைத் துதிப்போம்.*🕉️🙏