#Periyar
வீட்டிற்குள்ளேயே இருந்து அரசியல் பேசும் தற்குறிகளே,
அரசியல்னா என்னன்னு தெரியுமா?
பணக்காரரான நடேசன் முதலியார், டாக்டருக்கு படிச்சிட்டு, Practice பண்ணலாம்னு வந்தா,
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல்னு எல்லா இடத்திலையும் ஒரு குறிப்பிட்ட கூட்டம் மட்டுமே
உக்காந்துக்கிட்டு ஆதிக்கம் பன்றதை சகிச்சுக்க முடியாம,
நம்ம பசங்களயும் படிக்க வப்போம்னு, எல்லாரும் வாங்க, படிங்கன்னு விடுதிய கட்டி... பிறகு பார்ப்பனர்கள் இல்லாதவர்கள் சங்கம்னு உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமை சங்கம்னு மாத்தி...
டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில்
அவமானப்பட்ட பணக்காரர் தியாகராயரையும் சேத்துக்குட்டு Justice partyன்னு தொடங்கி அதை நீதிக்கட்சியா மாத்தி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு,
உடம்பு சரியில்லாம இருந்தப்பவும் நம்ம பயலுவலோட எதிர்காலம் முக்கியமுன்னு, இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கே
போயி சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு...
மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஐ பயன்படுத்தி தேர்தல்ல நின்னு ஆட்சியை புடிச்சு...
19,000 ஆரம்ப பள்ளிகளை திறந்து, மதிய உணவு போட்டு,
எல்லாரையும் படிக்க வச்சு, அரசு வேலை வாங்கி கொடுத்து...
சமஸ்கிருதத்தை நீக்கி, நிறைய பேர மருத்துவம் படிக்க வச்சு...
கோயில்ல நடந்த அக்கிரமங்களயும், கோயில் சொத்துகளை திருடுனதையும் அடக்க இந்து அறநிலையத் துறைய ஆரம்பிச்சு
மக்கள திருத்த சுயமரியாதை இயக்கம் ஆரம்பிச்சு, ஊர் ஊரா போயி
செருப்பு, சாணி, மலத்தால அடி வாங்கி....
தேவதாசி முறையை ஒழிச்சு....
பறையர்களையும், நாடார்களையும் வைக்கம் சிவன் கோவில் வீதிக்குள்ள விடமாட்டோம்னு சொன்ன, தன் குடும்ப நண்பர் திருவிதாங்கூர் மஹாராஜாவை எதுத்து சிறைக்கு போயி....
பறையர்களையும், நாடார்களையும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ள
கூட்டிட்டு போனதால சிறைக்கு போயி...
தனி தமிழ்நாடு கேட்டு லாகூர்லேர்ந்து இங்கிலாந்து போறப்போ விமான விபத்துல தளபதி பன்னீர்செல்வத்தை இழந்து....
நீதிக்கட்சி காலத்தில் ஆரம்பிச்ச பள்ளிகள்ள 3000 பள்ளிகள மூடி, இந்திய திணிச்ச ராஜகோபால் என்ற ராஜாஜிய எதுத்து 2 வருடம் சிறையில இருந்து...
நீதிக்கட்சிய திராவிட கழகமாக்கி,
49ல திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆரம்பிச்சு...
குலக்கல்வி என்ற பேர்ல 6000 பள்ளிக்கூடங்கள மூடுன ராஜகோபால் என்ற ராஜாஜிய பதவிய விட்டு தூக்கி...
வச்சு, மேலும் சிவந்தான்பட்டி உட்பட பல கிராமங்கள்ள பள்ளிகளை திறக்க வச்சு... எல்லா பள்ளிகள்ளையும் மதிய உணவு போட்டு... எல்லா தரப்பு புள்ளைங்களையும் படிக்க வச்சு, வேலைக்கு அனுப்பி...
57ல்ல போட்டி போட்டு, 15 MLAக்களை பெற்று, 59ல சென்னை மாநகராட்சி தேர்தல்ல 49 MCக்களை வெற்றி பெறச்
செய்து மாநகராட்சி மேயராகி, 62ல 50 MLAக்களை பெற்று, 65ல இந்திய எதிர்த்த 1000 இளைஞர்கள, கக்கன் துப்பாக்கிகளுக்கு பலிகொடுத்து...
67ல் ஆட்சிய புடிச்சு,
பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் உட்பட, திராவிட கொள்கைளை சட்டமாக்கி...
1971ல 183 MLAக்களை பெற்று...
நிலச் சீர்திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தி...
ஒன்றியத்தின் எமர்ஜென்சியை எதிர்த்து, ஆட்சிய பறிகொடுத்து...
RSS, ராமச்சந்திரன வச்சு கட்சிய ஒடச்சப்பவும் கட்சிய காப்பாத்தி 89ல மீண்டும் ஆட்சிய புடிச்சு... ஜெயலலிதா, சுப்பிரமணியம் சாமி சதியால மீண்டும் ஆட்சிய பறிகொடுத்து...
வைகோ கட்சிய ஒடச்சப்பவும், கட்சிய காப்பாத்தி 96ல மீண்டும் ஆட்சிய புடிச்சு
இதை தடுக்க RSS, விஜயகாந்த வச்சு 10% வாக்குகள பிரிச்சப்பவும் மீண்டும் ஆட்சியை புடிச்சு
காங்கிரஸுக்கு பங்கு கொடுக்காம,5ஆண்டுகளும் ஆட்சி செய்து
எந்த ஈழத்துக்காக உழைத்தோமோ, அந்த இயக்கத்தாலேயே கொலைப்பழி சுமந்து
தலைவரை இழந்த பொழுதும் கட்சிய கட்டுக் கோப்பா வச்சு,
தமிழ் நாட்டில் தேர்தல் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி
இந்திய ஒன்றியத்துக்கே சவால் விடும் அளவுக்கு வளந்து இருக்கோமே
இதுதான் அரசியல்.
இந்த காலத்துலயே அஞ்சு லட்சம் ரூவா வாட்சு எங்கிறது பெரிய விஷயம் தான். ஆனா அந்ந்த காலத்துலயே ஒரு அஞ்சு லட்சம் ரூவா கதை நடந்துருக்கு.
நாப்பது வருசம் முன்னாடி. சாராய அதிபர் உடையார் கிட்ட வாங்கின அஞ்சு லட்சம் ரூவாய திருப்பி குடுக்க முடியாம முதல்வர் எம்சிஆர்-கிட்ட செயலலிதா அழுதுருக்கு.
அவரு அதுக்கென்ன, அந்த ரூவாய நான் குடுக்குறேன்னு சொல்லி குடுத்துட்டாராம்.
செயலலிதா-உடையார்-அஞ்சு லட்சம்-எம்சிஆர் சமாச்சாரம் இன்டரெஸ்டிங்கா இருக்கா? இன்னும் பாருங்க
அந்த உடையாருக்கு தான் முதல்வர் எம்சிஆர் சாராய கான்டிராக்ட் கொடுத்தார். அந்த உடையாருடைய சாராய தொழிலை பாத்த செயலலிதா
சில வருசங்களுக்குள்ள தானே சாராய ஆலை ஓணரா மாறிடுச்சு. அந்த உடையார் சாராய கம்பெனில வேலை பாத்த சீனிவாச அய்யருடைய மகன் சோ ராமசாமி அய்யர் செயலலிதா சாராய கம்பெனிக்கு டைரக்டரா ஆனாரு.
இந்தக் கலவரத்தில்
செயா வை உடையார் கொஞ்ச நாள் கஸ்டடியில பெரும்பாலானோர் மறந்து விட்டார்கள்
#விபிசிங்_நினைவுநாள்
11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?
“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்”
எத்தனைக்காலம் பதவியில் வகிக்கிறோம் என்பது முக்கியமல்ல.
என்ன செய்தோம் இம்மக்கள் போற்ற என்பதே
#ராஜகுடும்பத்துபிள்ளை
நல்ல வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் களமிறங்கி போராடியவர்
பெரியார்’ ‘வி பி சிங்’
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார்.
மண்டா சமஸ்தான மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார்.
வி பி சிங் எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடனேயே படித்து வந்தார்.காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.
இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சி மீது ஈர்ப்பு ஏற்பட்டது
பெண்களும் ஆண்களுமாக இலங்கைப் போராளிக் குழுவினர் சிலர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார்கள்.
நெடிய வலுவான வசீகரமான தோழர் ஒருவர்தான், அவர்களின் தலைவர் என்று அறியப்பட்டார்
தலைவர் என்ற மிதப்பு கண்களில் இல்லை.
உடல்மொழியில் எந்த அதிகாரத் தோரணையும் தென்படவில்லை. குரல் சாந்தமும் மென்மையுமாயிருந்தது. புன்னகை ததும்பும் இதழ்கள் தோழமைக்கு அழைப்பு விடுப்பன போன்றிருந்தன.
அங்கு சூழ்ந்து வாழ்ந்த தமிழ்மக்கள் அனைவரும், அவருக்கும் அவர் குழுவினருக்கும் அணுக்கமாயிருந்தார்கள்.
போராளிக்குழுத் தலைவன் என்றாலும் பாதுகாப்புக்கான எந்த ஆயுதமும், பாராவும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் அங்கு வளைய வந்து கொண்டிருந்தார். சென்னைத் தெருகளில் மொபட்டிலும் சைக்கிளிலும் மோட்டார் பைக்கிலும் எளிமையாகப் பயணித்துக்கொண்டிருந்த அவரை, அறிந்தோர் ஓர் அதிசயமாகத்தான் பார்த்தார்கள்.
சைவத்திற்கு பெயர்போன ஆதீன மடங்கள், தமிழை உயிராய் வளர்த்த ஆதீனங்கள் எதுவும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொள்ளவில்லை
திருப்பனந்தாள் காசிமடம்! குமாரகுருபரர் காசியில் ஸ்தாபித்த ஆதீன மடமாகும். இன்னமும் தமிழக பக்கதர்கள் தங்கும் சத்திரமும், மூவேளை அன்னதானமும்
கொடுக்கிற தமிழர்களின் காசிமடமாகும். அதன் பீடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்துகொண்டாரா?
திருவாவடுதுறை ஆதீனம்! உலகின் மிகப்பெரிய தமிழ்சுவடி நூலகத்தை கொண்டுள்ளதும், கடைசி மரபுத்தமிழ் ஆசிரியர்களும் கவிராசர்களுமான மகாமகா வித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, சுப்பிரமணிய தேசிகர்
ஆகியோரால் தமிழ் வளர்க்கப்பட்ட திருவாவடுதுறை ஆதீனம் கலந்துகொண்டாரா!?
திருக்கோவிலூர் உவேசாமிநாதன் தமிழறிந்தும், தமிழ்பாடியும், தமிழ் வளர்த்தும் நீண்ட வரலாற்றை கொண்டாடுகிற அனைவரும், உவேசாமிநாதன் கல்விகற்ற திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து யாரேனும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்துகொண்டனரா