#ஸ்ரீசேஷாத்ரிஸ்வாமிகள் கூறிய ஆன்மீக அறிவுரை:
மந்திரம் சொல்லிச் சொல்லி கர்மாவை அழிக்கலாம். வாழ்க்கைப் போக்கையே மாற்றி விடலாம். மந்திர ஜபம் மனசை சுத்தம் பண்ணும். மனசு சுத்தமாகி விட்டது என்றால் போதும் நீ என்ன கேட்டாலும் கிடைக்கும். மந்திரம் வெறும் வார்த்தையல்ல. கந்தகம் என்பது ஒரு
வகை மண்ணு. அது வெடி மருந்தா மாறலயா? அந்த மாதிரி சில குறிப்பிட்ட வார்த்தைகள் உள்ளுக்குள்ள மாறுதல் நிகழ்த்தும். மந்த்ரம் சொல்லச் சொல்ல மனசு ஒருமுகப்படும். ஒருமுகப்பட்ட மனசுக்கு நிறைய சக்தி உண்டு. சந்தேகப் படாம உடனே மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும். நமக்கு என்ன ஆயுசு விதிச்சிருக்கோ
தெரியாது. அதனால இந்த ஆயுசிலேயே நல்லது கிடைக்க மனதில் தெளிவு கிடைக்க இப்பவே மந்திரம் சொல்ல ஆரம்பிக்கணும். ஒரு மணி நேரத்துக்கு மேல ஜபம் பண்ண முடியலையே சேஷாத்ரி. அந்த ஒருமணி நேரமும் மனசு எங்கெங்கோ சுத்துறதே, ஆர்வம் உள்ளவர்கள் ஆவலுடன் கேட்டார்கள். பண்ணி தான் ஆவேன்னு
உட்கார்ந்துடணும். அதுக்குப் பேர் தான் வைராக்கியம். என்ன தடுத்தாலும் எது குறுக்கிட்டாலும் தினம் ஒரு மணி நேரம் ஜபம்கறதை ஆரம்பிச்சுடணும். சிரத்தையா பண்ண ஆரம்பிச்சுட்டா ஒரு மணி நேரம் போறாது. மனசுக்கு பசிக்க ஆரம்பிச்சுடும். இன்னொரு மணி நேரம் பண்ணு. இன்னொரு மணி நேரம் பண்ணுன்னு
அதுவா கேட்கும். ஆரம்பத்தில் ஆர்வம் இருக்காது, ஆனால் கஷ்டப்பட்டு ஆரம்பிச்சுட்டா ஆர்வம் அதிகமானாலும். நான் ஏழு வயசிலேயே கார்த்தாலே 1 மணி நேரம், சாயந்தரம் 1 மணி நேரம் ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அதனாலே கணக்கோ பாட்டோ பூகோளமோ, இங்கிலீசோ பள்ளிக்கூடமோ முக்கியமில்லைனு ஆயிடுத்து.
காசை விட ஜபம் தான் முக்கியம்னு போயிடுத்து. எல்லா அபிலாஷைகளும் ஜபத்தால் நடக்கும்கறபோது வேற இங்கு செய்ய என்ன இருக்கு. மனசு கேட்க, கேட்க ஜபம் பண்ணிண்டே இருக்கேன். என் மனசுக்கு பசி அதிகம். எத்தனை சாப்பிட்டாலும் நிரம்பாத வயிறு மாதிரி எத்தனை ஜபம் பண்ணினாலும் மனசுக்கு பத்தல.
பன்னெண்டு மணிநேரம் பண்றேன். தினம் ஒரு மணிநேரம் ஜபம் பண்ணினா, மனசு அமைதியாகும். கோபம் குறையும். இதைவிட அதிகமா பண்ணினா கோபம் அறவே போறதுக்கு வாய்ப்பிருக்கு. காலைல ரெண்டு மணி நேரம், சாயந்தரம் ரெண்டு மணி நேரம் பண்ணினா காதில் இனிமையான சங்கீதம் கேட்கும். உடம்பு இறகு போல லேசா
இருக்கும். நோய் உபத்திரவாதங்கள் இருக்காது. உணவு கவனமா சாப்பிடத் தோணிடும். ருசிக்கு நாக்கு அலையாது. உணவு குறைஞ்சு உள்ளம் பலமாயிடும்! கார்த்தாலே மூன்று மணி நேரம், சாயந்தரம் மூன்று மணி நேரம் ஜபம் பண்ணினா, முகத்துல மாறுதல் உண்டாகும். கண் கூர்மையாகும். உடம்பிலே இருந்து தேஜஸ் விசிறி
விசிறி அடிக்கும். நாம் சொல்லும் வாக்கு பலிக்கும். எட்டு மணி நேரம் ஜபம் பண்ணினா, நீ வேற, மந்த்ரம் வேற இல்ல. நீயே மந்திரமா மாறிடலாம். அதற்கப்புறம் நடக்கறதெல்லாம் ஆனந்தக் குதியல் தான். எதை பார்த்தாலும் சந்தோஷம் தான். பசிக்காது. தூக்கம் வராது. யாரையும் அடையாளம் தெரியாது. மனசு
கட்டுலேயிருந்து விடுபட்டு ஸ்வாமி கிட்ட நெருக்கமா போய்டலாம். அப்புறம் அதுவே உன்னை இழுத்துண்டு போய்டும். இன்னும் உக்கிரமா ஜபம் செய்ய, அந்த சக்தியே கூட்டிண்டு போய்டும். நீ உன்னோட கட்டுப்பாட்டில் இருக்கமாட்டே. முழுக்க முழுக்க ஸ்வாமிகிட்ட சரணாகதி ஆயிடுவே. அப்ப நீ என்ன கேட்டாலும்
கிடைக்கும். இதுல பெரிய சந்தோஷம் என்ன தெரியுமோ?உனக்கு வேணும்கறது ஒவ்வொன்றும் பகவானா பார்த்து, பார்த்துக் கொடுப்பார். உன் வார்த்தையெல்லாம் கடவுளுடைய வார்த்தை. உன் செய்கையெல்லாம் கடவுளுடைய செய்கை. எட்டு மணி நேர ஜபத்துக்கு அப்புறம் என்ன? எல்லா நேரமும் ஜபம் பண்ணனும்னு தோணிடும்.
எட்டு இருபத்தி நாலா மாறிடும். அதுல இன்னும் உக்கிரம் வந்துடும். மந்த்ர ஜபம் என்பது கற்றுக் கொள்வதில் இல்லை. பூஜை என்பது சொல்லித் தந்து செய்வது அல்ல. உள்ளிருந்து பீறிட வேண்டும். தன்முனைப்பாக கிளர்ந்து எழுந்து அதற்குள் தானே மயங்கிச் சரிதல் வேண்டும். சடங்காக செய்கிற போதும்,
எதிர்பார்த்து உட்காரும் போதும் செய்கிற விஷயத்தின் வீர்யம் குறைகிறது. ஸ்வாசம் போல இயல்பாக மாறிய செயல் தான் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்கிறது.
ஸ்ரீ சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா வேதம் பயிலும் குழந்தைகளிடம் பெரியவாளின்
தாய்ப்பாசம் ஈடற்றது. பற்பல முறை தன்னிடம் வரும் செல்வந்தர்களான
பக்தர்களிடம், எனக்கு நீ ஒரு உதவி
செய்வாயோ? என்று மஹாபெரியவா கேட்பார்கள். அவர் கேட்கும் உதவி வேதபாடசாலைக் குழந்தைகளுக்கு தித்திப்பு, காரம் பக்ஷணங்களை பண்ணி நீயே போய்
கொடுத்துட்டு வா என்பது தான். பிறகு சில நாட்களில் கழித்து அந்தப் பாடசாலை குழந்தைகள் மஹா பெரியவாளை தரிசிக்க வந்தால் உடனே அவர்களிடம், அன்று பக்ஷணம் வந்ததா? சாப்பிட்டாயா?என்று அக்கறையோடு கேட்பார்கள்.
மாடு கூடத் திங்காத அழுகல் வாழைப் பழம் வேதபாடசாலைப் பையன்களுக்கு, என்று பழமொழி போல்
கூறப்பட்ட காலத்தில் பெரியவாளின் பெரிய புரட்சி, பாடசாலை குழந்தைகளுக்கு அவர் காட்டிய அலாதி பிரியமும், அவர்களுக்கு செய்து கொடுத்த சௌகர்யங்களும்.
மகா பெரியவா வேதபாடசாலை குழந்தைகளுக்கான வசதிகளை உருவாக்கி கொடுத்த விதமே மிகச் சிறப்பு. ஒருமுறை பெரியவாளுக்கு அப்பளம் கொண்டு வந்த
#மகாபெரியவா
காஞ்சீபுரம் அஷ்டபுஜம் தெரு, சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி, டாக்டரைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போய்க் கொண்டிருந்த போது, பட்டப்பகல் நட்ட நடுத் தெருவில் மஞ்சள் சரட்டில் கோர்த்து இருந்த திருமாங்கல்யம் பறி போய் விட்டது. ஒட்டி உரசினால் போல, சைக்கிளில் வேகமாகப் பறித்துச்
சென்று மறைந்து போனான். வீட்டுக்கு வந்து, பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும் பெரியவா பாதுகைகளின் மேலிருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து, மஞ்சள் சரட்டில் கட்டி கழுத்தில் போட்டுக் கொண்டாகி விட்டது. உடனே நகைக் கடைக்குப் போய், திருமாங்கல்யம் வாங்கிக் கொண்டு வந்து, சரட்டில்
கோர்த்து கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் - என்பதெல்லாம் நடை முறைப்படுத்த முடியாத செயல் திட்டம். எப்படியும் பெரியவாளிடம் சொன்னால் தான் மனம் நிம்மதி அடையும். மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதகலாகவே இருந்தது. மூகூர்த்த நாள். சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
#MahaPeriyava (Excerpts from a meeting of Arthur Isenberg with Sri Maha Periyava on 20th April 1959 at Numbal near Chennai)
The person who sat opposite me was sixty five years old, slim, a bit on the smallish side. The top of his head was almost entirely bald or shaven, the
lower portion of his face was outlined by a white beard. He had white moustache and white eyebrows. His body was clothed in the saffron-coloured mantle of the Sannyasin. Not that any of this mattered. What did matter was his face, and more particularly, his eyes, which looked at
me with a mixture, or rather a fine blending, of intelligence, kindliness and compassion, while at the same time somehow reflecting a most gentle sense of humour. I had the definite sensation of being in the presence of man thoroughly at peace with himself, a Sage. The impression
Mr. Rangachari, an ardent devotee of #SriRamanaMaharishi who worked as a Telugu Pandit in Voorhees College at Vellore, one day came to Ramanashram at Thiruvannamalai and asked Sri Ramana Maharshi about ‘Nishkamya karma' (desireless action). There was no reply. After a while Sri
Bhagavan went up the hill and a few followed him, including the pandit.
There was a thorny stick lying on the way which Sri Bhagavan picked up; he sat down and began leisurely to work at it. The thorns were cut off, the knots were made smooth, the whole stick was polished with a
rough leaf. The whole operation took about six hours. Everyone was wondering at the fine appearance of the stick made of a spiky material. A shepherd boy put in his appearance on the way as the group moved off. He had lost his stick and was at a loss. Sri Bhagavan immediately
இது நான் நேரே பார்த்து நெகிழ்ந்த சம்பவம். அப்போது நுங்கம்பாக்கம் ஜம்புலிங்க நாயக்கர் தெருவில்
"உபநிஷத் ஆஸ்ரமம்" என்று ஒன்று இருந்தது. பரமாச்சாரியார் பட்டணத்துக்கு வந்தால் அங்கே தங்குவார். வெளியே கீற்றுக்
கொட்டகை போட்டிருப்பார்கள். கீற்றுத் தடுப்புக்குப் பின்னால் தான் பரமாச்சாரியார் உட்கார்ந்திருப்பார். மத்தியான நேரத்தில், சுமார் இரண்டு மணிக்கு மேல் பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்து அங்கே பாடுவார்கள். பரமாச்சாரியார் தரிசனம் கிடைத்த மாதிரியும் இருக்கும், சங்கீதம் கேட்ட
மாதிரியும் இருக்கும் என்பதால் ரசிகர்கள் அந்த நேரத்தில் வந்து கூடுவார்கள். நான் போயிருந்த அன்று, மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் பாடுகிறார். அந்தப்புறம் இருந்து பரமாச்சாரியார் கேட்டுக் கொன்டிருக்கிறார். மத்ய்மாவதி ராகத்தில் 'வினாயகுனி' பாடிக் கொண்டு இருந்தார் விஸ்வநாதய்யர். அதில்
ஆண்டிகளால் உலகமே வியக்கும் வண்ணம் கட்டப்பட்டது அருள்மிகு #திருசெந்தூர்_சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில், ஒரு கட்டிடக் கலை அதிசயம்.
கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்தில் இருந்தும் உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள். ஆனால், திருச்செந்தூர்
முருகன் கோயில் கடற்கரையில் இருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் உள்ளது. எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்தில்