இன்று டிசம்பர் 26-12-2022, சுபகிருது வருடம், மார்கழி 11, திங்கட்கிழமை.
இன்று சந்தோஷ வாழ்வு தரும் திருவோண நக்ஷத்திரம் மாலை 04.41 வரை.
இன்றைய சிறப்பு : திருவோண விரதம்.
இன்றைய வழிபாடு :
பெருமாளுக்கு துளசிமாலை சாத்துதல்.
திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத்தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம்.
இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
பெருமாளுக்கு உகந்த திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரமான இன்று.
திருவோண விரதம் மேற்கொள்ளுங்கள்.
திருமாலை மாலையில் ஆலயம் சென்று தரிசியுங்கள். வாழ்வில் எல்லா சந்தோஷங்களையும் தந்தருள்வார் பெருமாள்!
திருவோணம் நோன்பு என்பது, திருவோண நட்சத்திரத் தோடு கூடிய நன்னாளில் நோற்கும் விரதம்.
இந்த விரதம் பெருமாளுக்கு உகந்த அற்புதமான நாள்.
திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
வீட்டின் தரித்திரம் விலகும். ஐஸ்வர்யம் பெருகும்.
மனக்குறைகளும் கிலேசங்களும் காணாமல் போகும்.
மிக முக்கியமாக, இந்த நாளில் திருவோண விரதநாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தை யும் துடைத்தருள்வார் திருமால். அவர்கள் விரும்பிய தெல்லாம் தந்தருள்வார்!
திருமணம் தாமதமாகிக் கொண்டிருக்கிறதே எனும் நிலை முற்றிலுமாக மாறும். கல்யாண மாலை தோள் சேரும்.
அதே போல், நீண்ட காலம் குழந்தை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள், மகாவிஷ்ணு வை வணங்கி,
அவரின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே இருங்கள். விஷ்ணு புராணங்களைப் பாராயணம் செய்யலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட்களை எல்லோருக்கும் விநியோகித்து மகிழலாம்.
விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.
சகல தோஷங்களும் விலகும்.
சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை குலதெய்வமாகக் கொண்ட வர்கள், சுக்கிர யோகம் தடைப்பட்டிருப்பவர்கள், பெருமாளை தரிசித்து துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
கடன் தொல்லை யில் இருந்து விடுபடுவீர்கள். கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாமல் போகும்!
திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும்.
12 திருவோணம் நாட்களில் விரதம் இருந்தால் வாழ்வில் செழிப்பின் உச்சத்துக்கே போய் விடுவீர்கள். இது பலரும் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை.
திருவோண விரத நாளில், பெண்கள் திருமாலை தரிசித்து வேண்டிக் கொண்டால், அவர்களின் கண்ணீரையும் கஷ்டத்தையும் துடைத்தருள்வார் திருமால்.
அவர்கள் விரும்பியதெல்லாம் தந்தருள்வார்!
இன்றைய நாளில், மாலை வேளையில், வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுங்கள். சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் மட்டும் வீட்டில் நிறைந்திருக்கும் என்பது உறுதி!
பெருமானின் அருளாசி பெற திருவோண நட்சத்திர விரதத்தை அனைவரும் கடைபிடிக்கலாம்.
திருவோண விரதத்தை ஒருமுறை வாழ்வில் இருந்தால் கூட அத்தனை பாக்கியங்களும் கிடைக்கும் என்பது நியதி.
நாம் எல்லோருமே பிறந்த நேரம், தேதி, நட்சத்திரம் மற்றும் இராசி என்று கேட்டால் யோசிக்காமல் சொல்லி விடுவோம்.
ஆனால் உங்கள் பிறந்த திதி என்ன என்று கேட்டால் அது இறந்தவர்களுக்கு தானே என்று கேள்வி கேட்போம்.
கை தேர்ந்த ஜோதிடர்களுக்கு மட்டும் தெரிந்த இந்த பிறந்த திதி சூட்சுமத்தை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சாக்த வழிபாட்டு முறையின் படி உங்கள் திதியை வைத்து அதற்குண்டான திதி தேவதைகளை வழிபாடு செய்து வந்தால் நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்க முடியும்.
இதைதான் விதி படி சிறப்பாக வாழ திதி தேவதை வழிபாடு அவசியம் என் நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்
உங்களுக்குண்டான பிறந்த திதியை வைத்து நீங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாவற்றிலும் நிச்சயம் பிரமாண்ட வெற்றிகள் கிடைக்கும்.
கொஞ்சம் ஆண்டாளின் கிளிக்குப் பெயர் கல்யாணக் கிளி … அரங்கனுக்கு கிளியைக் கொண்டு தூது அனுப்பினாள் ஆண்டாள் …
தூது சென்று வந்தக் கிளியிடம் , உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று ஆண்டாள் கேட்க ,
கிளியும் … உங்கள் கையில் நான் என்றும் இருக்க அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டமைக்கு இணங்க …. ஆண்டாள் கையில் கிளி எப்பொழுதும் இருப்பது ஐதீகம்...
அரங்கனிடம் காதல் தூது சென்றதால் , இந்தக் கிளிக்கு , கல்யாணக் கிளி என்று பெயர் வந்தது .
இதை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பிரத்யேகமாக தினமும் செய்கிறார்கள்.
அதற்கென்றே ஒரு குடும்பத்தினர் கோவிலுக்கு அருகில் வசிக்கிறார்கள் .
சுத்தமான வாழை நார் மற்றும் மரவள்ளிக் கிழங்கின் இலைகளைக் கொண்டு இந்தக் கிளியின் உடலும் முகமும் வடிவமைக்கிறார்கள் .