TTF Vasan போலவே எங்கள் ஊரில் ஒரு நண்பர் DJF VLOGS என்கிற ஒரு You tube channel வைத்திருக்கிறார்.வெறும் 39 மணிநேரத்தில் கோவையிலிருந்து லடாக் சென்ற TTF வை போல, திருத்துறைப்பூண்டியிலிருந்து-லடாக்கை மூன்று நாளில் அடைவதுதான் திட்டம்.வீட்டில் தஞ்சாவூர் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு
லடாக் கிளம்புகிறார்.
கையில் பண இருப்பு வெறும் 3000 ரூபாய்தான்,Sponsorகளை நம்பி லடாக் வரை பயணம் செய்ய வேண்டும்,நான் செய்வது சரியா தவறா,கழுத்தை நெறிக்கும் கடன்,லடாக் சென்று வந்தால் எதாவது மாறுமா என்று பார்க்கலாம் என்றுதான் அவருடைய வீடியோ தொடங்குகிறது.
அவருடைய You tube கணக்கில் சுமார் 127k subscribers. Shorts மூலம் இந்த அளவு ரீச் அடைந்திருக்கிறார்.
பயணம் ஆரம்பித்து மூன்று நாள்,நான்கு நாள்,ஐந்து நாள்,பத்து நாள் ஆகியும் லடாக்கை அடைய முடியவில்லை.கிட்டத்தட்ட காஷ்மீர் வரை சென்று லடாக் செல்லாமல் வண்டியை ஒரு ட்ரெயினில் ஏற்றிவிட்டு
வீடு திரும்பிவிடுகிறார்.பயணத்தை முடித்துக்கொள்ள இரண்டு காரணங்கள் ஒன்று பணமில்லாமல் போனது மற்றொன்று லடாக் குளிரை தாங்குமளவிற்கு எந்த உடைகளும் இல்லாமல் போனது.
பயணம் ஆரம்பித்த இரண்டாவது நாள் ஆந்திர பிரதேசத்தில் ஒரு சிறு விபத்தில் மாட்டிக்கொள்கிறார்.இந்த பயணத்திற்காக கிட்டத்தட்ட
உயிரை பணயம் வைத்திருக்கிறார்.அவருடைய முதல் வீடியோவில் சப்போர்ட் பண்ணுங்க இவ்வளோ பெரிய ரிஸ்க்க இதுக்காகத்தான் எடுக்கிறேன் என்றும் கூறியிருப்பார்.ஆனால் அவர் செல்லும் வழியில் போட்ட வீடியோக்கள் அனைத்துமே மிகச்சொற்பமான views மட்டுமே பெற்றிருந்தன.
Technical ஆக பேசினால் மேற்சொன்ன நபர் ஒரு 'digital creator'.Gig economy, Platform economy என்ற பரிணாமம் அடைந்திருக்கும் முதலாளித்துவ உற்பத்தி அதனுடைய நேரடி ஊழியர்களுக்கு வழங்கும் independent contractors,rapido pilot, content creator போன்ற பெயர்களில் இதுவும் ஒன்று.
கையில் ஒரு Smartphone இருந்தால் போதும் நீங்களும் ஒரு creator தான்.கையில் ஒரு வண்டி மற்றும் Smart phone இருந்தால் போதும் மாதம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என வரும் கவர்ச்சியான விளம்பரங்களில் மாட்டிக்கொண்டு Platform based தளங்களில் கசக்கி பிழியப்படும் தொழிலாளர்கள் எண்ணிக்கை
மளமளவென உயர்ந்தியிருக்கிறது.
Gig economy, platform economy யை பொருத்த வரை அந்த நிறுவனத்திற்காக வேலை செய்யும் எவருமே அதனுடைய ஊழியர்கள் கிடையாது.அந்தந்த நாடுகளில் இருக்கிற தொழிலாளர்கள் நல சட்டம் தங்களை கட்டுப்படுத்தாதவாறு தங்களுடைய ஊழியர்களுக்கு விதவிதமான பெயர்களை வழங்கி
சட்ட ரீதியாக தப்பித்துகொள்கிறது.
சாதாரண ஒரு பைக்,3000 ரூபாய் பணத்துடன் உயிரை பணயம் வைத்து லாடக் கிளம்பிய அந்த நபர்,YOU TUBE என்ற நிறுவனத்திற்காகத்தான் இது அத்தனையையும் செய்கிறார்.ஆனால் You tube நிறுவனம் அவரை ஊழியராக அங்கீகரிக்க போவதில்லை.அவருக்கு எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும்
பொருப்பேற்க போவதில்லை.
TTF VASAN போன்ற நபர்களின் வேகத்தை விட,அவர்களை role model ஆக எடுத்துக்கொண்டவர்கள் இந்த சந்தையில் சிக்க சீரழிய போகிறார்கள்.நாம் இணையதளத்தில் கடந்து வரும் அத்தனையும் வேடிக்கைகளுக்குமான பொருளாதார அடித்தளம் இந்த platform economy.
தங்களது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக பாஜக எடுத்திருக்கிற தற்போதைய weapon இந்த freebies.
கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் write off செய்யப்பட்ட கார்ப்பரேட் கடன் தொகை கிட்டத்தட்ட 9 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்.
Write off என்றதுமே சங்கிகள்
write off is different...Waiver is different என்று சங்கை கடிக்க வந்துவிடுவார்கள்.அதற்கும் சிறிய விளக்கம்.
தள்ளுபடி என்பது அரசாங்கம் ஒரு கடனை 100 சதம் தள்ளுபடி செய்வது எடுத்துக்காட்டு கல்வி கடன்கள்.மொத்தமாக தள்ளுபடி செய்தாலும் அதனால் ஏற்படும் இழப்பு மிகச்சிறியது.
Write off என்பது ஒரு legal process மூலமாக ஒரு கார்ப்பரேட் கடனை 90 சதவீதம் தள்ளுபடி செய்வது..அதாவது 30000 கோடி கடனில் வெறும் 3500 கோடியை மட்டும் வசூலிப்பது..write off நிறுவனமாக்கப்பட்ட கொள்ளைமுறை.
கடந்த 5 ஆண்டுகளில் இவ்வளவு மக்கள் பணத்தை கார்ப்பரேட்டிடம் வாரிக்கொடுத்திருக்கும்
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியிருக்கிற காடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
வீரப்பனுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேவாரம் தலைமையிலான அதிரடிப்படை சத்தியமங்கல காடுகளில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுடைய ஒடுக்குமுறையை செலுத்தினர்.காடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்த பழங்குடியின மக்களின் காடுகளுடனான உறவு இந்த அதிரடிப்படையால் முறிக்கப்பட்டது.
உணவு சேகரிக்க செல்லும் பழங்குடியின சிறுவர்கள் வீரப்பனுக்கு துப்பு சொல்ல செல்கிறார்கள் என்று சொல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.கர்ப்பம் தறிக்கிற ஒவ்வொரு பெண்ணும்,இந்த கர்ப்பத்திற்கு காரணம் வீரப்பன்தானே?எப்போ வந்தான்,ஏன் எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என்று கேள்விகளை…
வெள்ளையர்கள் 'நீக்ரோ' என்ற சொல்லை முழுமையாக கூட சொல்வதில்லை 'நிக்கர்'என்று சொல்லி மலினப்படுத்துவார்கள்.நிறவெறி கொண்ட வெள்ளையர்கள் மட்டுந்தான் இப்படி வெறுப்பில் இச்சொல்லை ஆள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.
கொஞ்சம் காலத்துக்கு முன்னர் நான் பணியாற்றிய கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக இருந்த ஒருவர் அமெரிக்கா செல்ல இருந்தார்.மெத்த படித்த இந்தியர்களின் குறிக்கோள் அமெரிக்காவில் பணிபுரிவதும் குடியேறுவதும்தானே.அந்தச் சமயத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்தபொழுது,'உங்க அமெரிக்க பயணம் எப்போ?
என்று கேட்டேன்.'எல்லாம் தயார்தான்....ஆனால் அந்த எம்பஸியில் ஒரு பிளடி நிக்கர் என்னென்னவோ கேட்டுண்டு இருக்கான் என்றார்.நீக்ரோ-நிக்கர் என்ற சொற்களை நான் பலமுறை கேட்டவன்தான்.
மத நிறுவனங்கள் நடத்தும் நாடகங்களில் சாத்தானுக்கு கருப்பு நிற உடைகளுக்கு பதிலாக 'சிகப்பு' நிற உடைகள் அணிவிக்கப்பட்டது...
அந்த சிகப்பு நிறம் வளர்ச்சி எதிரானது....
அந்த சிகப்பு நிறம் அறிவியலுக்கு எதிரானது....
அந்த சிகப்பு நிறம் பெண் விடுதலைக்கு எதிரானது....
அந்த சிகப்பு நிறம்..
ஜனநாயகத்துக்கு எதிரானது...என்கிற பிரச்சாரங்கள் ரஷ்ய புரட்சியை எதிர்த்து உலகமெங்கும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன.
பொய் பிரச்சாரங்களுக்கு பதிலடியாக,உலகின் முதல் செயற்கைக்கோளை(sputnik) கம்யூனிஸ்ட் ரஷ்யா விண்ணில் செலுத்தியது.
விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன்,முதல் பெண்மணி,முதல் விலங்கு கம்யூனிஸ்ட் ரஷ்யாவை சார்ந்தது.கல்வி,மருத்துவம்,சுகாதாரம் அனைத்திலும் கம்யூனிஸ்ட் ரஷ்யா முன்மாதிரியாக திகழ்ந்தது .
ராஜாவை சாதியை வைத்து வசைபாடுபவர்கள் இயல்பிலேயே சங்கிகள்,இருக்கிற கட்சி,அமைப்பு எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் மனரீதியில் வலதுசாரிகளோடு இணக்கத்திலிருப்பவர்கள்.அவர்களுடைய ராஜா வை பற்றிய விமர்சனம் ஆழ் மனதில் ஊறியிருக்கும் தலித் வெறுப்பிலிருந்து வருவது.அதற்கு எதிர்வினையாற்றுவது அறம்
மறுபுறம் ராஜாவின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்கள் சிறுபான்மையினர் நலன்,பாசிச எதிர்ப்பு என்று புள்ளிகளிலிருந்து வைக்கப்படுவது.Constructive விமர்சனங்களையும் 'தலித் என்பதால் தான் தாக்கப்படுகிறார் என்று ஒளிந்துக்கொள்வது escapism'.இளையராஜாவின் அரசியல் நிலைப்பாட்டை......
நியாயப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லாததால் எடுக்கப்படும் கடைசி ஆயுதம்.