ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை"
மடைகளை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன. .
வைரம் பாய்ந்த கட்டை என்று சொல்லப்படும் மரங்களையே தேர்வுசெய்து அதன் உள்தண்டை நீக்கிவிட்டால் உறுதியான நீண்ட குழாய் தயாராகிவிடும்.
அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்துவிடுவார்கள்.
இதுதான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களில் மடைகள் அமைக்கப்பட்டது.
வெள்ளக்காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப்பணியாகும்.
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.
மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்துவிடுவார்.
ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு ஓடை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்
மடை திறந்ததும் புயல்வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடைத்திறந்தவரையும் இழுத்துச்செல்லும்.
அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம்.
மடை திறக்க செல்பவர்கள் உயிர்பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச்செல்வார்கள்.
#சம்ஸ்கிருதம் பழைய மொழியோ, கதையோ அல்ல. வருங்கால விஞ்ஞான, தொழில்நுட்ப, எதிர்கால ஏணி.
1985 லேயே 20 ஆண்டுகள் ஆய்வு செய்த பிறகு, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாஸா விஞ்ஞானி ரிக் பிரிக்ஸ், கம்ப்யூட்டர் மூலமாக உருவாகும் செயற்கை நுண்ணறிவுக்கு சம்ஸ்க்ருதம்தான் பொருத்தமான மொழி என்று கூறினார்.
இதுவரை நாஸா இந்த ஆய்வு பற்றி வாயைத் திறக்காவில்லை என்றாலும் , விரைவிலேயே அது சமஸ்கிருதம் பற்றி அதிரடியாக அறிவிப்பு செய்யும் என்று கூறுகிறது பிரபல Business Strategy Hub.4.2.2020.[bstrategyhub.com/Sanskrit& is&the&best&language & for&artificial & intelligence & says&nasal].
1) சீயக்காய், தேய்த்து குளிக்க சொன்னது கூந்தல் வளர அல்ல, ஈரு/பேன்/கொசுவை ஒழிக்க..!!!
2) தினமும் குளிக்க சொல்வது உடல் சுத்தத்திற்காக அல்ல, கெட்ட ஆவீயை (உடல் சூட்டை) தனிக்க...!!!
3) பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்வது...!!!மஞ்சள் ஒரு கிருமி நாசினி, பெண்களின் முகத்தில் எளிதில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, தோள் வரண்டு கடினமாகுதல் போன்றவையை ஒழிக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு...,மஞ்சள் ஒரு மிகப்பெரிய மருத்துவம்...!!!
4) கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஒரு கொத்து வேப்பிலையை வைக்க சொல்வது...!!! பேய்/பிசாசு அண்டாமல் இருக்க அல்ல...!!! பொதுவாக சாதாரண பெண்களைவிட கர்ப்பிணி பெண்களின் உடல் சூடு அதிகளவில் வெளிப்படும், வேப்பிலையின் மருத்துவம் அறிந்த நாம் அவற்றை சாமி என்றும் வணங்குகின்றோம்...!!!
*அருள்மிகு
கோமதி அம்மன் சமேத சங்கரலிங்கம் (சங்கர நாராயணர்) திருக்கோவில்*
சங்கரன்கோவில்,
திருநெல்வேலி .
1
ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி.
2
சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.