1) சீயக்காய், தேய்த்து குளிக்க சொன்னது கூந்தல் வளர அல்ல, ஈரு/பேன்/கொசுவை ஒழிக்க..!!!
2) தினமும் குளிக்க சொல்வது உடல் சுத்தத்திற்காக அல்ல, கெட்ட ஆவீயை (உடல் சூட்டை) தனிக்க...!!!
3) பெண்களை மஞ்சள் தேய்த்து குளிக்க சொல்வது...!!!மஞ்சள் ஒரு கிருமி நாசினி, பெண்களின் முகத்தில் எளிதில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, தோள் வரண்டு கடினமாகுதல் போன்றவையை ஒழிக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு...,மஞ்சள் ஒரு மிகப்பெரிய மருத்துவம்...!!!
4) கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஒரு கொத்து வேப்பிலையை வைக்க சொல்வது...!!! பேய்/பிசாசு அண்டாமல் இருக்க அல்ல...!!! பொதுவாக சாதாரண பெண்களைவிட கர்ப்பிணி பெண்களின் உடல் சூடு அதிகளவில் வெளிப்படும், வேப்பிலையின் மருத்துவம் அறிந்த நாம் அவற்றை சாமி என்றும் வணங்குகின்றோம்...!!!
5) சாணி தெளித்து அரிசி மாவில் கோலம் இடுதல், சாணியை கரைத்து அடுப்பு புடையை பூசுதல், வீட்டு தூண்களில் மஞ்சள் குங்குமம் பூசுதல், வீட்டின் வாசற்படி கொல்லையில் வேப்பமரம், துளசி செடி வைத்தல், கதவு கைப்பிடிகளில் மஞ்சள் கொண்டு பொட்டு வைத்தல்...!!! போன்றவை எல்லாம் சாமி அல்ல...
இவையாவும் தமிழரின் அறிவியல் மருத்துவமே... சில படித்த முட்டாள்கள் இவற்றை மூடநம்பிக்கை என்றும் அறிவில்லாத்தனம் என்றும் புறக்கணித்து ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து திரிகிறார்கள்...!!!
6) தண்ணீர் அதிகம் குடிக்க சொல்வது தாகம் தீர அல்ல, உடலின் 75% தண்ணீர் இருக்கிறது தண்ணீர் உடலுறுப்புகளை சுத்தம் செய்கிறது,
அதிகாலையில் பழைய
சோறு நீர் அருந்தும் பழக்கமுடையவர்களுக்கு வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது ஆயுள் அதிகரிக்கும் என்று வெள்ளைக்காரன் இப்போது விளம்பரம் செய்கிறான்...!!!
7) தரையில் சம்மணம் போட்டு சாப்பிட சொல்வது கேவளம் அல்ல...!!!
தரையில் அமருவது ஒருவகை யோகாசனம், முதுகெலும்பு நேர்கொண்டு வயிறு விரிய உதவிடும் ஆதலால் நீங்கள் சாப்பிடும் உணவு திகட்டாது உணவின் ருசி மூலைக்கு சென்று அதை நம்மை உணர வைக்கிறது,
8) குச்சிப்பாய்/கோரப்பாயில் படுத்துறங்க சொல்வது...!!!பாய் உடல் சூடை உள்வாங்கக்கூடியது, கல்வி கற்கும் சிறு பிள்ளைகள் பாயில் உறங்குவது இளம் வயது கூண்முதுகு விளாது, கர்ப்பிணி பெண்கள் பாயில் படுத்துறங்குவது இடுப்பு எலும்பு விரிந்து சுயபிரசவத்திற்கு உதவிடுகிறது,
ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது குஷன் பெட், பஞ்சு மெத்தை யாவும் குச்சிப்பாய்கு ஈடாகாது,
9) பாத்திரம் கழுவ இலுப்பைத்தூள், அடுப்பு சாம்பல் பயன்படுத்திய காலத்தில் சாக்கடையில் தவளைகள்/தேரைகள் வாழ்ந்தன, வீட்டினுள் தவளை வந்தால் அதை கொல்லவேண்டாம் பிடித்து வெளியே விட்டுவிடு என பெரியோர்கள் சொல்வார்கள் அது ஏன் தெரியுமா???
தவளை மனிதனின் மருத்துவன், ஒரு தவளை ஆயிரக்கணக்கில் உருவாகும் கொசு முட்டைகளை உண்டு மனிதனை காலரா/டெங்கு/காய்ச்சல், போன்ற நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றும்,
ஒரு தட்டான்பூச்சி நாள் ஒன்றுக்கு ஆயிரம் கொசு முட்டைகளை தின்றுவிடும் புதர்கள், குட்டை, குளங்கள், காடு, கரைகளை எல்லாம் நாம் ஒழிக்க .இப்பொழுது தவளையும் இல்லை; தட்டானும் இல்லை...
10) உலகிலேயே மட்டமான சமையல் எண்ணெய் எது தெரியுமா???
"சூரியகாந்தி எண்ணெய்தான், டிவி,யில் மணிக்கொரு முறை விளம்பரம் போட்டு நம்மை முட்டாளாக்கிவிட்டனர், "சூரியகாந்தி" எண்ணெய்யில் எந்த புரத நார் சத்துக்களும் கிடையாது,
11) வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலிக்கு கடலை/நல்லெண்ணையே ஊர வைத்த வெள்ளை துணியை கொண்டு வலிக்கும் அந்த இடத்தில் கட்டிக்கொள்வார்கள் அது ஏன் தெரியுமா???
12) கைக்குழந்தை அதிகமாக அழும்போது அதன் தொப்பிளில் நாளு சொட்டு நல்லெண்ணை விடுவார்கள் அது ஏன் தெரியுமா???
13) நெஞ்சு சளி அதிகமாக இருக்கிறது என்றால் கர்பூரத்தை சூடு ஆக்கி வெற்றிலையில் தடவி நெஞ்சில் வைப்பார்கள் அது ஏன் தெரியுமா???
இவையெல்லாம் மருத்துவம் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டவை... சிலர் இவற்றை சாமி என்பார்கள்... அதாவது நல்லது செய்பவை யாவும் சாமி என்று பொருள்...
இயற்கையை மறந்து செயற்கையாய் கொசுவர்த்தி Allout எனில் வாங்கி... மஞ்சள்காமாலை, காலரா, டெங்கு காய்ச்சல்... போன்ற நோய்களை மனிதனைக் கொல்கிறது .முடிந்தவரை இயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டும்.நம்மால் இயற்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற வகையில் செயல்பட வேண்டும்.
நாம் இயற்கையை அழித்தல் இயற்கை நம்மை அழித்துவிடும்...
இன்றைய மனிதனின் அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவன் இயற்கையை மறந்து செயற்கைக்கு மாறியதே...
இயற்கை மனிதனை வாழவைக்கும் , செயற்கை மிஷின் வாழ்க்கை மனிதனை கொன்றழிக்கும்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோயில்.
1
ஆறு அகழிகளால் சூழப்பட்டு இருப்பதால் இந்த ஊர் ஆறகளூர் என பெயர் பெற்றது.
இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் வசிஷ்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு காமநாதீஸ்வரர் என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகின்றார்.
2
கருவறைக்கு வடபுற தனி சன்னதியில் பெரிய நாயகி அம்பாள் அருள் பாலிக்கின்றாள். இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இம்மரத்தடியில் மன்மதன் வழிபட்டதால் இங்குள்ள
இறை வனாருக்கு காமநாதீஸ்வரர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாளன்று மோகினி அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இந்த மோகினி அலங்காரம் அன்று நடைபெறுவதற்கான காரணம்..
ஏற்கெனவே சென்ற இடமெல்லாம் பக்தர்களைப் பைத்தியமாய் அடித்துத் தன் பக்கம் இழுத்த அழகிய மணவாளன் ஆன நம்பெருமாளுக்குத் தனியாக மோகினி அலங்காரம் என்று வேண்டுமா? இல்லை; இல்லை. அதனால் எல்லாம் இவன் அனைவரையும் கவர்ந்தான் எனச் சொல்வதற்கு இல்லை.
ஆனால் தில்லையம்பலத்து ஆனந்த நடராஜரை எவ்வாறு ஆனந்தத் தாண்டவக் கோலத்தில் தரிசிப்பது ஆனந்தம் அளிக்கிறதோ அவ்வாறே நம்பெருமாளையும் மோகினி அலங்காரத்தில் காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
🌹🌺" *ஒரு ஆண்டின் 24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது..* 🌹🌺
🌹🌺மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
🌺அந்த நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக்கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்கவாசலை திறந்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார் இறைவன்.
🌺மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது.
இடது கையால் தாயை அணைத்தபடி நரசிம்மர்... 16 நாகங்கள்...!!
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்...!!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது.
1
திருவள்ளூரில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் நரசிங்கபுரம் என்னும் ஊர் உள்ளது. நரசிங்கபுரத்தில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
2
இத்தல மூலவரான லட்சுமி நரசிம்மர் ஏழரை அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து, சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயை அரவணைத்தபடி, வலது கரத்தை அபயஹஸ்தமாக காட்டி மிக அழகாக காட்சி தருகிறார்.
* சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் பகலவனைக் கண்ட பனி போல் விலகுகிறது.
* திருவையாறு-கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து
2 கி.மீ தொலைவில் உள்ளது திங்களூர்.
இத்தல சந்திரபகவானை வணங்கினால் சந்திரகிரக தோஷங்கள் நீங்கி அவர் வாழ்வில் தண்ணொளி வீசுகிறது.
* மதுரையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திரரதவல்ல பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.