#வைகுண்ட_ஏகாதசி மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து திருப்பாவை பாடி பெருமாளை பின் தொடர்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். அந்த நாளில் மகாவிஷ்ணுவை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு எதுவும் சாப்பிடாமல் இரவில் கண் விழித்து விரதம் இருப்பவர்களுக்காக சொர்க்க Image
வாசலை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறார் இறைவன். மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது. மார்கழியில் ஆண்டுதோறும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்
படுகிறது. இந்த நாளில் தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி 2023ஆம் ஆண்டில் ஜனவரி 02 மற்றும் டிசம்பர் 23 2022 என இரண்டு முறை வருகின்றது. அதன்படி 2023ஆம் ஆண்டின் முதல் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 108 வைணவ ஸ்தலங்களில் Image
முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் 21 நாட்கள் நடைபெறும். பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வித்தியாசமான அலங்காரங்களில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பகல்பத்து உற்சவத்தின்
10வது நாளான வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு
அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருள்வார். வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை நடைபெறும் பெருமாள் புறப்பாட்டைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள். பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க, பக்தர்களும் அதே
சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம். ஒரு ஆண்டின் 24 ஏகாதசிகளில் மார்கழி மாத ஏகாதசி மட்டுமே மோட்ச ஏகாதசி அல்லது வைகுண்ட ஏகாதசி என்று போற்றப் படுகிறது. இந்த நாளில் கண் விழித்து விரதம் இருப்பவர்கள் பரமபத விளையாட்டு விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் பாம்பும்,
ஏணியும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏணியில் ஏறி செல்லும் போது பாம்பு கொத்தி கீழே இறக்கி விட்டு விடும். இது ஏற்ற இறக்கம் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி நாளில் அதிகாலையில் 3.30க்கு எழுந்து குளித்து விரதம் இருந்து இறைவனிடம் வேண்டிய வரம்
பெறுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 3
#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ மடத்து யானைகளுக்கு, தினமும் சாயங்காலம், வெல்லம் சேர்த்து, பெரிய பெரிய உருண்டைகளாக அன்னம் கொடுப்பது வழக்கம். யானைப் பாகன், தன் கையால் உருண்டையை எடுத்து, யானையின் வாய்க்குள் Image
செலுத்துவார். ஒரு நாள், யானைக்கு உணவு கொடுக்கும் வேளையில், பெரியவா தற்செயலாக அங்கே வந்து விட்டார்கள். உருண்டைகளாகச் சாதம் உருட்டி வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தார்கள். அருகிலிருந்த சிஷ்யரிடம், "இந்த உருண்டைகளை யானைக்குக் கொடுக்க வேண்டாம்" என்று பாகனிடம் சொல்லும்படி உத்தரவிட்டு
விட்டுப் போய்விட்டார்கள். மானேஜரை அவசரமாக அழைத்தார்கள்.
"யானைக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அன்னம், சரியாக வேகவில்லை; காய்ந்து பொறுக்குத் தட்டிப் போயிருந்தது. இப்படியெல்லாம் அசிரத்தையாய் தீனி கொடுக்கக் கூடாது. வாயில்லாப் பிராணி என்பதால், வெந்ததும், வேகாததுமாக சாதம்
Read 5 tweets
Jan 2
#MahaPeriyava
M.G. Ramachandran was a famous actor and Chief Minister of Tamil Nadu. He was very devoted to Sri Maha Periyava. M.G.R on returning to India after surgery from the US, went to Kanchi for Sri Maha Periyava’s darshan. He made a humble request to Periyava: “I wish Image
to do anything that You may say for the Matham”.
Periyava told him:
“There are vaara (days of the week) theerthas in Kanchi. You must arrange to clean and maintain them. Somvar-Ekambareswarar kulam, Mangalvar-Mangala theertham opposite to the Mutt, Budhvar-satyavratha theertham
near Kaaligamedu, Chinna Kanchipuram, Guruvar-Kaayarogana theertham, Sukravar-Sukravar theertham, Kaamakshi temple, Sanivar-Sarvatheertham. Please don’t think of having bath in any of these now!”

Periyava found it difficult to go and have bath in all the theerthams due to His
Read 17 tweets
Jan 2
#VaikuntaEkadasi #MahaPeriyava (Gems from Deivathin Kural)

Periyava has explained the importance of observing this Vratha in great lengths and depths and the significance behind it.

“Ekadashyam thu karthavyam sarvesham bhojana dwayam”

This is the first part of a sloka. What is Image
the meaning of this? “Ekadashyam thu karthavyam Sarvesham” means, on Ekadasi day, it should be done like this by all the people.
What should be done?
The answer comes as “Bhojana Dwayam”.
Don’t you understand the meaning? Dwayam means 2. “Bhojana Dwayam”, means, two times food.
It conveys the meaning that everyone should have food two times on Ekadasi day. Normally, we have heard that on Ekadasi, one has to fast, and also go waterless. Whereas, here, you are saying that it is said, not once, but food should be taken twice? This sloka is actually a
Read 7 tweets
Jan 2
#சொர்க்கவாசல்_இல்லாத_திவ்யதேச_கோவில்கள்
திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால் கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல்
எனப்படும் பரமபத வாசல் கிடையாது. 
இதற்குக் காரணம் இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார். ImageImageImage
மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காக
திருமால் தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும். இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து
சென்றாலே பரமபதம் கிட்டும்
என்ற ஐதீகமும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண
வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல
வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டிருக்கும்.
இதே போன்று சொர்க்கவாசல் எனப்படும் பரம பத வாசல் இல்லாத
ஆலயங்கள்
1) காஞ்சிபுரம்
Read 9 tweets
Jan 1
#மகாபெரியவா
நம் வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்கள் ஏற்படும்போது அந்த கடவுளை நினைக்கிறோமோ இல்லையோ கஷ்டம் என்று வந்துவிட்டால் முதலில் நம் வாயிலிருந்து வரும் வார்த்தை, அந்த கடவுளுக்கு கண்ணில்லையா? எனக்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டம் என்று அந்த கடவுளை திட்டுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். Image
ஆனால் அந்தக் கடவுளால் கொடுக்கப்படும் கஷ்டமானது நமக்கு ஏதோ ஒரு வகையில் நன்மையை தரும் என்பது நம்மில் சிலருக்கு புரிவதில்லை. ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு பெரிய வசதிப் படைத்த ஜமீன்தார் மிகவும் நல்ல குணம் கொண்டவர். இவர் பல கோவில்களை சீர் அமைப்பதற்கு தன்னிடம் உள்ள செல்வத்தை
கொடுத்திருக்கின்றார். சமூக சேவையிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அந்த ஜமீன்தாருக்கு ஒரு நாள் எதிர்பாராத வகையில் ஒரு பெரிய கஷ்டம் வந்துவிட்டது. அவரிடம் உள்ள சொத்துகள் எல்லாம் பறி போகும் அளவிற்கு அந்த கஷ்டமானது அவரை வாட்டி வதைத்தது. இவர் காஞ்சி பெரியவரின் பரம பக்தரும் கூட. தன் கஷ்டங்களை
Read 15 tweets
Jan 1
#குருபார்வை #கர்மவினை #மகான்கள்_மகிமை
பாவ புண்ணியங்களை மகான்கள் மாற்றுவது இல்லை என்பது உண்மை. ஆனால் நாம் நம் வினையை அனுபவிக்கும் முறையை மாற்றுகிறார்கள். இதை ஓர் எடுத்துக் காட்டுடன் பார்த்தால் விளங்கும். ஒருவர் ஆறாயிரம் ரூபாய்க்கு சில்லறை நாணயங்களாக வைத்திருக்கிறார் என்று வைத்து Image
கொள்ளுங்கள், அது ஒரு மூட்டை மாதிரி இருக்கும். அதை சுமப்பது, கையாள்வது எல்லாமே கஷ்டம். அவர் படுகிற பாட்டைப் பார்த்து விட்டு ஒருவர் சில்லறையைத் தாம் வாங்கிக் கொண்டு புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக 3ஐ தருகிறார்.
இப்போதும் அதே ஆறாயிரம் தான் இருக்கிறது. ஆனால் சுமை தெரியவில்லை
பாரம் குறைந்து விட்டது. இதைத்தான் மகான்கள் செய்கிறார்கள். கர்மவினை நம்மிடம் தான் உள்ளது அனால் நாம் கஷ்டப் படாதபடி நம் மனோ நிலையை ஞானிகள் மாற்றி நம் ஆத்ம சக்தியை பலப்படுத்தி விடுகிறார்கள். வினை கழிந்த மகான்களை வணங்க நம் பாவ வினை ஏற்றுக்கொள்ளும் வகையில் மாறும் என்பது அசைக்க முடியாத
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(