அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், பெருமாளை நோக்கி தங்களின் மிகப்பெரிய பலனை உலகமக்களின் நலன் கருதி அவர்களுக்கும் அருள வேண்டும் என விரும்பினார்கள்.
அதாவது அரக்கர்கள் இருவரும் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி
பெருமானிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும்,
தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும்,
அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார்.
அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
அது அன்று தொடங்கி இன்று வரையும் குறைவின்றி நடைபெற்று வருகின்றது.
108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரம
பத வாசல் இருக்கும்.
ஆனால், கும்பகோணம் ஸ்ரீ சாரங்க பாணி ஆலயத்தில் சொர்க்கவாசல்
எனப்படும் பரம பத வாசல் கிடையாது.
இதற்கு காரணம் இருக்கிறது.
இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார்.
மகாலட்சுமியின் அவதாரமான கோமளவல்லியை மணமுடிப்பதற்காக
திருமால் தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து
இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார்.
எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி) கிடைத்துவிடும்
என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது.
மேலும், இங்குள்ள உத்ராயண, தெட்சிணாயன வாசலைக் கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலம், அப்போது ஒவ்வோர் ஆண்டின் தொடக்க நாளிலும் ஆங்கிலேய அதிகாரிகளைச் சென்று பார்த்து வணங்குவது ஊழியர்களின் வழக்கமாக இருந்தது.
புத்தாண்டில் ஒரு வெள்ளைக்கார துரையைப் பார்த்து வணங்குவதா என்று மனம் வருந்திய வள்ளிமலை ஸ்வாமிகளால் தொடங்கப்பட்ட வழிபாடுதான் திருத்தணிகை திருப்படி உற்சவ விழா.
ஆங்கிலப்புத்தாண்டில் துரைகளுக்கெல்லாம் துரையான முருகப் பெருமானை வேண்டி
அங்கு அமைந்திருக்கும் 365 படிகளுக்கும் பூஜை செய்து ஒவ்வொரு படியிலும் திருப்புகழை பாராயணம் செய்து புது விழாவினை 1917-ம் ஆண்டு முதல் தொடங்கினார்கள்.
இதனால் திருத்தணி முருகப்பெருமானுக்கு 'தணிகை துரை' என்ற பெயரும் உருவானது.