#மகாபெரியவா
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர். டி.எஸ். கோதண்டராம சர்மா.
தட்டச்சு- வரகூரான் நாராயணன்.

உண்மையான பக்தியுடைய அடியார், ஸ்ரீ மடத்துக்கு ஏராளமாகப் பொருளுதவியும் செய்திருந்தார். அவருக்குள் ஏதோ ஓர் ஏக்கம், தவிப்பு, கவலை. ஒரு நாள் தட்டுத் தடுமாறி, "நான்
கடைத்தேறுவதற்குப் பெரியவாள் தான் வழி சொல்லணும்" என்று கண்ணீர் மல்க விண்ணப்பித்துக் கொண்டார். பெரியவாளுக்கு அந்த அன்பரைப் பற்றி நன்றாகத் தெரியும். ரொம்பவும் பயந்த சுபாவமுடையவர், கூச்சமுடையவர், முன்னின்று தனியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாதவர். அப்படிப்பட்டவரை, 'யாத்திரை போய்
வா' என்பதா, 'உபாசனை செய்' என்பதா, 'கோவில் திருப்பணிகளுக்கு உதவி செய்' என்பதா?
"உனக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தெரியுமா?"
"தெரியும், பத்து வயசிலே அப்பாவோட கூடச் சேர்ந்து எங்கள் கிராம பஜனை மடத்தில் தினமும் சாயங்காலம் சொல்லியிருக்கேன்."
"ஸ்ரீருத்ர சமகம்?"
"புஸ்தகத்தைப் பார்த்து
ஒழுங்காகச் சொல்லிடுவேன்."
"பாதகமில்லை. முடிந்த போதெல்லாம் ருத்ரம் ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டிரு போதும்."--பெரியவா.
வந்தனம் செய்து விட்டுப் பிரசாதம் பெற்றுக் கொண்டு போனார். அவர் பின்னர் அடிக்கடி மடத்துக்குக் கூட வருவதில்லை. ஆனால், பெரியவாள் அந்தக் கிராமத்து அன்பர்கள் தரிசனத்துக்கு
வந்தால் அவரைப் பற்றி விசாரிக்கத் தவறுவதில்லை.
"அவரா? அவர் இப்போ உருத்திரங்கண்ண நாயனார் மாதிரி ஆயிட்டார்! எப்போதும் ஸ்ரீருத்ர பாராயணம் தான்! தினமும் பத்துத் தடவையாவது விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம்."
அவர் வெகு நாட்கள் ஜீவித்திருந்து ஒரு நொடிப் பொழுதில் சமகம் எட்டாவது அனுவாகம் சொல்லிக்
கொண்டிருக்கும் போதே, உடலை உகுத்தாராம். பெரியவா உபதேசம் அவருக்குமட்டும் தானா? அல்லது பக்குவம் பெற்ற எல்லோருக்கும் தானா?

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 5
#கோவர்தன_கிரிவலம் கோவர்தன கிருவலம் மேற்கொள்வதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள முடியும். திருவண்ணாமலை கிரி வலம் போல கோவர்தன கிரிவலம் வடநட்டில் மிகப் பிரபலம். மலையையே கிருஷ்ணனாக பாவித்து கிரிவலம் வருவது இங்கு போல் அங்கும் வழக்கமாக உள்ளது. கோவர்தன கிரிவலம் Image
26 கி.மீ. பாதையைக் கொண்டது. ரூப கோஸ்வாமியின் கூற்றின்படி கோவர்தன மலையை வலம் வர விரும்புபவர்கள், முதலில் மானஸ கங்கையில் நீராடி பின்னர், அருகில் இருக்கும் ஹரிதேவரை தரிசித்த பின்னரே, கிரிவலத்தைத் தொடங்க வேண்டும்.
மானஸ கங்கை: கிரிவலத்தை இவ்விடத்தில் தொடங்கி இறுதியில் இங்கேயே முடிக்க Image
வேண்டும். கிருஷ்ணர் தனது மனத்தாலேயே கங்கையை அங்கு வரவழைத்தார். அதனால் அந்த கங்கை, மானஸ கங்கை என்று பெயர் பெற்றது.

ஹரிதேவரின் கோயில்: கிருஷ்ணர் இங்கு நாராயண ரூபத்தில் வீற்றிருக்கின்றார். கோவர்தன மலையை தூக்கியவரும் இவரே.

சகலேஸ்வர மஹாதேவர்: ஸநாதன கோஸ்வாமியின் பஜனை குடிலுக்கு Image
Read 8 tweets
Jan 5
The Significance of #Maunam #Silence

Maunam is the attribute of a Muni. But the ordinary meaning of this word is silence. Our Dharma Sastras have prescribed the observance of maunam (मौनम्) on various occasions. We are asked to observe maunam when taking food. In this context, Image
maunam means only non-speaking (silence). Controlling the urge to speak is one among the many steps leading us to our spiritual goal. Maunam is an important method of worshipping God. Maunam in this context does not mean merely silence. It is also the process of keeping the mind
free of all thoughts. It implies that we should keep all our senses under perfect control, so that during the period of silence, the limbs may not move even involuntarily. Such a maunam will enable the divine spark within every one of us to become active in its progress towards
Read 10 tweets
Jan 5
#பிராமணனாக_வாழ_ஆசைப்படுபவர்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது
#காயத்திரி_மந்திர_மகிமை
அனுஷ்டானத்தின் மூலாதாரம், சந்தியாவந்தனம். இது பிராமணனின் கடமை என்பதை இன்று யாரும் உணரவில்லை. பிராமணன் கையால் அர்க்யத்தை் ஏற்க தேவாதி தேவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. Image
‘எனக்கு ஆறு மணிக்கு முன்னர் அர்க்யம் விட்டால்தான் சாப்பாடு' என்று பகவான் சொன்னால் நிலைமை மாறுமா? சந்த்யாவந்தனத்தைப் பற்றி பல கதைகள் உண்டு. மாறு வேடத்தில் செல்லும் ஓர் அரசரும் அந்தண மந்திரியும் ஒரு பிராமணன் பிச்சை எடுப்பதைப் பார்த்தனர். அரசன், "பார்த்தாயா, உன் குல அந்தணன் சோம்பித்
திரிந்து பிச்சை எடுப்பதை, உன் குலம் இவ்வளவுதான், நாங்கள் ராஜ வம்சம், நீங்கள் பிச்சை அம்சம்" என எள்ளி நகையாடினார். அந்த ப்ராமணனை தனியாக சந்தித்த மந்திரி, "ஐயா, உங்களுக்குப் பிச்சையின் மூலம் எவ்வளவு கிடைக்கும்?" என்று கேட்டார். "எனக்கு ஒரு வெள்ளி அளவிற்கு கிடைக்கும்" என்றார்
Read 11 tweets
Jan 5
#சிதம்பரம்_எனும்_அதிசயம் #ஆருத்ரா_தரிசனம்
சிதம்பரத்தில் கோபுரத்தின் 9 தங்க கலசங்கள் 9 சக்தியை குறிக்கும்
21600 தங்க ஓடுகள், மனிதன் ஒருநாளில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கையை குறிக்கும்
72000 ஆணிகளால் ஓடு கோர்க்கபட்டு உள்ளது. அது சுவாசத்துக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய நாடிகளை Image
குறிக்கிறது.
மனித இதயம் உடலுக்கு இடது புறமாக தள்ளியிருக்கிறது, சிதம்பர ஆலய கர்பக்கிரகமும் அப்படியே அமைந்துள்ளது.
பொற்சபையில் ஆறு காலம் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகமும், இரண்டாம் காலத்தில் இரத்தின சபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம் நடக்கும்.
இறைவனுக்கு இரத்தின சபாபதி அபிஷேகம் நடக்கும்
மண்டபத்தில் 18 தூண்கள் உண்டு இது18 புராணங்களை குறிக்கும். முன் மண்டபத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஆறு தூண்களும் ஆறு சாஸ்த்திரங்களை அடையாளம் காட்டுகின்றது.
நடராஜ மூர்த்தி சன்னதிக்கு அருகே செல்வதற்க்கு அமைந்த ஜந்து படிக்கட்டு இவை பஞ்சாட்சரத்தின் (நம சிவாய)அடையாளம்.
நடராஜ மூர்த்தி
Read 6 tweets
Jan 5
#ArudraDarshan On 6th January 2023. Arudra Darshan is one of the most auspicious days associated with Lord Shiva. It is dedicated to the cosmic dance of Shiva. The cosmic dance of Lord Shiva represents five activities – Creation, Protection, Destruction, Embodiment and Release. Image
In essence, it represents the continuous cycle of creation and destruction. This cosmic dance takes place in every particle and is the source of all energy. Arudra Darshan celebrates this ecstatic dance of Lord Shiva. Arudra Darshan is of great importance at the Chidambaram
Nataraja Temple and marks the conclusion of Margazhi Brahmotsavam. It is celebrated with fervor at the Tiruvalankadu Temple, Nellaiappar temple, Kutralanathar temple, Tiruvarur Temple, Kapaleeswarar Temple and in several other Lord Shiva shrines across the globe. Arudra Darshan
Read 9 tweets
Jan 4
#ஸ்ரீவேங்கடேச_சுப்ரபாதம்
தினம்தோறும் அதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் சேவிக்கப்படுகிறது. இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250
பக்தர்கள் வரை இந்த Image
தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். ‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின் கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா
ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர்
கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார். மார்கழி மாதம் மட்டும், திருமலை திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில்
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(