நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா? என உங்கள் நகம் சொல்லும்!
நம் உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது.
√ டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுக்களை பூசுவதும் என அனைத்து மனநிலைக்கும் பலிகடா ஆவது நகங்கள்தான்.
√ அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சொல்வதோடு எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், அது எந்த நோயின் அறிகுறி என்பதையும் அறியலாம்.
√ நகம், விரலுக்கு ஒரு கவசம் போன்றது. நகத்தின் மிகப்பெரிய வேலையே விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். நகத்தில் பல பாகங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் கை மற்றும் கால் விரல் நகங்களுக்குப் பொதுவானவை.
நகத்தின் அமைப்பு
* மேற்புறத்தில் பளிச்சென்றும் வழுவழுப்பாகவும் இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். இதில் நரம்புகளும் இரத்தக்கு ழாய்களும் இல்லை.
* வெளிநகத்துக்கு அடியில் உள்ள நகத் தளத்திலேயே திசுக்களால் ஆன இரத்த ஓட்டப் படுக்கை இருக்கிறது. நகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பதே இந்த படுக்கையின் பிரதானமான பணி.
இந்த நகத்தளத்தைத் தாண்டி வளரும் நகப்பகுதியைத் தான் நாம், வேண்டாம்’ என்று வெட்டிவிடுகிறோம். இது இறந்தநகப்பகுதியாகக் கருதப்படுகிறது.இதற்குக் காரணம், இந்தப்பகுதியை வெட்டும்போது எந்த வலியும் ஏற்படாததுதான்.
* நகமும் சதையும் சேரும் இடத்தில், சதைக்குக் கீழே மறைந்திருப்பது நகவேர். இந்தப் பகுதியில்தான் நகம் முளைக்கும். இந்தப் பகுதியை அழுத்தினால் வலி உண்டாகும். அதற்குக் காரணம், நரம்புகளும் இரத்தக்குழாய்களும் இருப்பது.
* நகத்தைச் சுற்றியிருப்பது, U’ வடிவத் தோல் அமைப்பு (Nail fold).
* நகத்தின் அடியின் காணப்படும் பிறை போன்ற அமைப்பு லுனுலா’ (Lunula) என்றும், நகத்துடன் இணைந்த தோல் பகுதி எபோனைச்சியம்’
(Eponychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள உள்தோல் பெரியோனைசியம் (Perionychium) என்றும், நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்கு க்யூட்டிக்கிள்’ (Cuticle) என்றும் பெயர்
நகம் வளரும் காலம்
நான்கு முதல் எட்டு மாதங்களில் ஒரு நகம் முழுவதுமாக வளர்ச்சியடைந்துவிடும். கோடை காலத்தில் வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு, கை விரலில் மூன்று மில்லி மீட்டரும், கால் விரலில் ஒரு மில்லி மீட்டரும் நகம் வளரும்.
நக வளர்ச்சி குறைவுக்குக் காரணம்...
• ஊட்டச்சத்து குறைபாடு
• தொடர்ந்து நோய்வாய்ப்படுதல்
• சில வகையான மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுதல்
• வயது முதிர்ச்சி.
நகத்தை வைத்து நோயைச் சொல்லலாம்!
50-க்கும் அதிகமான நோய்களுக்கு முக்கியமான அறிகுறி நகத்தில் ஏற்படும் மாற்றங்கள்தான். அவற்றில் சில...
√ கைவிரல் நகங்கள் மிகவும் வெண்மையாகவும், ஸ்பூன் போன்று குழி விழுந்தும் இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு.
√ கைவிரல் நகங்கள் வீங்கியிருத்தல். இதை கிளப்பிங் நெய்ல்ஸ் (Clubbing Nails) என்பார்கள். இதயக் கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், குடல் நோய், கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு, இதய உறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு போன்ற நோய்களின் பிரதான அறிகுறி இது.
√ நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலும், கீழ்ப்பகுதி வெள்ளையாகவும் இருந்தால் சிரோசிஸ் (Cirrhosis) என்னும் கல்லீரல் நோய் மற்றும் இதயச் செயலிழப்பு நோய்.
√ லுனுலாவில் சிவப்புப் புள்ளிகள் இருந்தால் `சொரியாசிஸ்’ என்னும் சரும நோய்.
√ நகத்தின் மேல் பகுதியின் நிறம் மாறாமல் கீழ்ப்பகுதியில் மாறியிருந்தால், அது சிறுநீரக நோய்.
√ நகம் நீல நிறமாக இருந்தால், சீரற்ற இரத்த ஓட்டம்.
√ நகம் மஞ்சள் நிறமாக இருந்தால், மஞ்சள் காமாலை, நுரையீரல் நோய், நிணநீர்த்தேக்க நோய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிகுறியாக இருக்கலாம்.
√ நகத்தில் கறுப்புக்கோடுகள் இருந்தால் புற்றுநோயின் அறிகுறி.
√ கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற வைட்டமின் குறைபாடுகளாலும் நகத்தின் குறுக்கே வெள்ளைக்கோடுகள், வெள்ளைப் புள்ளிகள் தோன்றும்.
🕉உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில் மற்றும் நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம் இது தான்!
🕉ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம் இது.
🕉3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம் இது.
🕉தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம் இது.
🕉மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம் இது....
🕉இப்படி பலப்பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும் தன்னகத்தே கொண்டு, சாந்தமாய் இருக்கும் ஆலயம் - அதுதான் - இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோவில்.
*மார்கழி திருவாதிரை:*
*கணவருக்காக திருமாங்கல்ய விரதம் இருக்கும் பெண்கள்*🙏🌹
சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில், உபவாசம் இருந்து நோக்கும் விரதத்திற்கு மகிமை உண்டு.
அது மட்டுமல்ல மாதங்களில் சிறப்பு மிக்க மாதம் மார்கழி. அந்த மார்கழி மாதம் வரும் திருவாதிரை நாளில் மாங்கல்ய நோன்பு இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைபிடித்து வரும் ஐதீகம்.
திருவாதிரை விரதம் தீர்க்க சுமங்கலி வரம் தரும் விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து தாலி சரடு மாற்றி சிவபெருமானை வழிபடுவதன் மூலம் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நாகலிங்கப்பூ. இதுவே கடவுள். இந்தப் பூவுக்குள்ளே தானே இறங்கி வந்து குடியிருக்கிறான். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலர்தான் நாகலிங்கப்பூ.
நாகமுமிருக்கிறது …………..உள்ளே #லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு #மினியேச்சர்#கைலாயமே கைக்குள் இருப்பது போல் இருக்கும்.
ஒரு சில நிமிடங்கள் நம் கவனத்தை ஒழுங்குபடுத்தி இந்தப் பூவின் மத்தியப் பகுதியில் இருக்கும் சிவ லிங்கத்தை உற்று நோக்கி அப்படியே நம்மை தியானத்தில் கொண்டு சென்று விட்டால் உடல் சிலிர்க்கும். உள்ளம் அமைதி பெறும்.
மேற்கு நோக்கிய சிவனை தரிசித்தால் ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்று வாமதேவர் என்ற மகான் தனது நூல் ஒன்றில் சொல்லியுள்ளார்.
கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு நோக்கி இருக்கும் என்பது பொதுவான விதி.
ஆனால், மேற்கு நோக்கிய லிங்கத்தின் ஆவுடையாருக்கு சக்தி அதிகம்.
இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் வெகு விரைவில் பலன் தந்து கொண்டு இருக்கின்றன.
மேற்குப் பார்த்த லிங்கம் உள்ள ஆலயங்கள் தோஷ நிவர்த்தி தலங்களாக விளங்குகிறது.
மேற்கு நோக்கிய சிவ திருத்தல விவரங்கள்
1) அருள்மிகு கபாலீஸ்வரர், திருமயிலை, சென்னை
2) அருள்மிகு மருந்தீஸ்வரர், திருவான்மியூர், சென்னை