புத்தகத்தின் பெயர்.: வாசிப்பது எப்படி?
எழுத்தாளர்.:செல்வேந்திரன்
படிப்பதற்கு மிக எளிமையாகவும் ஒரு சாமானிய னாலும் எழுதப்பட்ட.ஒரு புத்தகம் தான்.”வாசிப்பது எப்படி?”
இதற்கு முன் வாசித்து கொண்டிருந்தவர்களும்.இடையில் நிறுத்தியவர்களுக்கும்.எங்கிருந்து தொடங்குவது என்று.தெரியாமல் இருப்பவர்களுமான இது ஒரு தொடக்கநிலை புத்தகம். இந்த புத்தகம் ஜனரஞ்சகமான எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில்.கருத்திலிருந்து சிறிது பிசகாமல் புத்தகத்தை முடித்திருப்பார்
இந்நூல் யாரை குறிவைத்து எழுதப்பட்டிருக்கிறதோ அவர்கள் பல தளைகளால் கட்டப்பட்டவர்கள். தங்கள் பிள்ளைகள் மீது கொஞ்சமேனும் அக்கறை கொண்ட பெற்றோர்கள் இந்த நூலை அவர்களுக்கு வாசித்துக்காட்டி விவாதிக்கலாம்.
அன்றாட செயலாக வாசிப்பதை எப்படி பழக்கமாக மாற்றுவது என்பதை சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்
இந்த ஆசிரியர் சாதாரண ஒரு வாசிப்பாளராக இருந்து தொடர் வாசிப்பின் மூலமாகவே ஒரு எழுத்தாளராக அவதாரம் எடுத்தார் என்பதை சொல்வது மிகையல்ல
.நீங்க இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது அவரின் உருவம் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது உங்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு 40-45 வயது உடையவரின் உருவத்தை ஒத்தவராக.இருப்பார் என்பது நீங்கள் கற்பனை செய்து கொள்ள முடியும்.
மிக எளிய நடையில்.சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில்.இந்த புத்தகம் நின்று பேசும்.
படிப்பதற்கு 1000 புத்தகங்கள் இருந்தாலும் .எப்படி படிப்பது என்று சொல்வதற்கு ஒரு சில புத்தகங்களை உள்ளன.அதில் இந்த புத்தகம்.இன்றைய கால இளைஞர்களுக்கு.மிகவும் பயனுள்ளதாகவும்.குறுகிய நேரத்தை.சொல்ல வந்ததை.விளங்க வைப்பதாகும். இந்த புத்தகம் இருக்கும்..
இந்த புத்தகம் அமேசான் கிண்டில் அன்லிமிட்டெட் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக படித்துக் கொள்ளலாம்.
அல்லது பிரைம் ரீடிங்ங்களும் இலவசமாக உள்ளது.
இல்லை எனக்கு புத்தக வடிவில் தான்.வேண்டும் என்பவர்களுக்கு.₹125 என்ற எளிய விலையில்.கிடைக்கும்.
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை
பவா செல்லதுரை
பச்சைக்கொடி சுற்றிய பவா செல்லதுரை என்ற தலைப்பில் பிரபஞ்சன் அவர்கள் நூல் குறித்துக் கூறியுள்ளார்.சுதந்திரமான வரவு என்கிறார்.பெரிதும் வழக்கில் இல்லாத சூழல்கள்,கதைக்களம்கள், வியப்பேற்படுத்தும் மனிதர்கள் எனக் கதைகள் விரிகின்றன.
சிறுகதை வரலாற்றில் தடம் பதித்த ஆற்றலாளர்கள் குறித்துச் சுவைபடக் கூறியபின் பவா செல்லதுரை யின் கதைகள் குறித்துக் கூறுகிறார்.
இரவின் நிறத்தில் தீற்றிய நெருப்புக் குயிலோசை என்ற தலைப்பில் க்ருஷி நூல் அறிமுக உரை தந்துள்ளார். .
முடிவற்ற வசீகர வெளியில் வலி உணரும் தருணங்கள் என்ற தலைப்பில் உதயசங்கர் தன்னுரையை வழங்கி உள்ளார்.மொத்தம் பதினோரு கதைகள். இத்தொகுப்பில் ஒன்றுமே குறைந்ததில்லை. மலையும், காடும், காட்டுயிரிகளும் ஆழமாகவும் அகலமாகவும் சுட்டிக் காட்டப்பட்டுக் கதாபாத்திரங்களாகின்றன.