அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யலாம்... சொல்லிக் கொண்டே சென்றார்கள்...!!
மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை – ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை...!!
இருபது வருடங்கள் முன்னாடி... அவர் மனைவி இறந்த பிறகு, சாப்பிட்டியா...!!
என்று யாரும் கேட்காத நேரத்தில்...அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை...!!
பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே..
என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!
தாய்க்குப் பின் தாரம்.. தாரத்திற்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!! என்று வாழ்ந்த போது – அவர் இறந்திருந்தார்...யாருமே கவனிக்க வில்லை...!!!
காசு இங்கே மரத்திலா காய்க்குது...
என்று மகன் அமில வார்த்தையை வீசிய போது..!!! அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!!
என்னங்க...!!! ரொம்ப தூரத்துல இருக்குற முதியோர் இல்லத்தில் வைத்து தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!
என்று காதில் விழுந்த போதும் அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை...!!!
உனக்கென்னப்பா...!!!பொண்டாட்டி தொல்லை இல்லை... என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்க பட்ட போது அவர் இறந்திருந்தார்...!!!
அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!!
இப்போதுதான் இறந்தார்! என்கிறார்கள்...!!! எப்படி நான் நம்புவது...???
நீங்கள் செல்லும் வழியில் இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்...!!!
ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்...!!!
இல்லையேல்...!!!
உங்கள் அருகிலேயே இறந்து கொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள்...!!!
வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல..!!! வாழ வைப்பதும் தான் ..!!!
பலர் இறந்து விடுகிறார்கள்...!!
புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது...!!!
இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது...!!!
இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை...!!!
மாறாக திறன்பேசி (SMARTPHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்...!!
ஆக!!...
மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப் பட்டு வருகின்றன என்பதே உண்மை...!!
பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய்...!!!
இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து...!!!
கணினியும், அலைபேசியும் இருந்தால் போதும் என்ற நிலையில் வாழ்ந்து வருகிறோம்...!!!
இது ஒருபுறம் இருக்க, இனி வரும் காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார்,
நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும்.
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது.
பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
பாரத நாட்டின் பொக்கிஷமான மகாபாரதம் தர்மத்தையே நிலைக்களமாகக் கொண்டது. இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை. மகாபாரதக் கதையில் வீரம், சூழ்ச்சி என எத்தனையோ இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தினாலோ சூழ்ச்சியினாலோ மட்டுமல்ல.
வீரமும் சூழ்ச்சியும் தற்காலிக வெற்றியைத் தேடும் உபாயங்கள். ஆனால் நிலையான, அழிவில்லாத வெற்றிக்கு தர்மமே முற்றிலும் சாதனமாக இருந்தது.
🌹🌺" *நீ தூய்மை உள்ளவனாக இருந்தால், வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமம் என கூறிய வீரத்துறவி .. * 🌹🌺
🌹🌺சுவாமி விவேகானந்தர் ஒரு இளைஞர் எழுச்சி கூட்டம் ஒன்றில் அந்நாளில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல் தன்னடக்கம் ஆகிய வீரனுக்கு உரிய பண்புகள் இன்று எங்கே போய்விட்டன?
🌺போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்து கொள்கிறனேயன்றி, தனது நலத்தைக் கருதுவதில்லை. ஒருவன் மற்றவர்களுடைய இதயங்களின் மீதும் வாழ்க்கையின் மீதும் ஆணை செலுத்த வேண்டுமானால் முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
*சூரிய பகவானுக்கு அருளிய ரவீஸ்வரர் திருத்தலம்; வடசென்னைக்கு பெருமை சேர்க்கும் தலம்!*
அருள்மிகு மரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் ஆலயம், வடசென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ளது.
1
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் பழமையானது. இக்கோயில் பல அதிசயங்களையும் புராணப் பின்னணியும் கொண்டது.
2
ஒரு முறை பிரம்மதேவரின் கோபத்திற்கு ஆளாகி, பூமியில் பிறந்த சூரிய பகவான். நாரதரின் ஆலோசனைப்படி இங்கு வந்து, வன்னி மரத்தடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, சிவபெருமானை வழிப்பட்டார், சூரிய பகவான்.
6. போக சயனம் 7. தர்ப்ப சயனம் 8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) 9. மாணிக்க சயனம்
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன், தன் திரு
உருவத்தைப் பூவுலக மாந்தர்கள் அனைவரும் தரிசிக்க
வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டு, அர்ச்சா மூர்த்தியாகப்
பூவுலகில் பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கிறார்.