பாண்டவர்களில் பீமனால் போதிக்கப்பட்டு சோழர்களால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்தான் நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் திருக்கோயில்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
இவ்வூரை சுற்றி பெரும் தெய்வ கோயில்கள் சிறு தெய்வ கோயில்கள் அமைந்துள்ளன.
இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், சுப்ரமணியராக ஆறுமுகம் கொண்டு வள்ளி தெய்வானையுடன் துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சனி பகவான், பைரவர் மற்றும் காரிய சித்தி ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்களும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
இந்த தளத்தில் ஆழ்வார்களும் இடம் பெற்றுள்ளனர்.
சுந்தரவள்ளியாக காட்சி அளிக்கின்றார்.
தாயார் இங்கு தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதியில் தேவிகளுடன் காட்சியளிக்கின்றார்.
ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்த பீமனுக்கு எந்த தலத்தில் தான் அபிவிருத்தி தோஷம் நீங்கியதாக கூறப்படுகிறது.
பீமன் பிரதிஷ்டை செய்து தனக்கு ஏற்பட்ட துன்பத்தை போக்கிக் கொண்டதால் இந்த தலத்தில் சிவன் திருவேலீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.
கோயிலில் உள்ள மூலவர் லிங்கம் பீமனால் மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பால், தண்ணீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்தாலும் இந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருக்கும்.
ஆகவே இந்த லிங்கம் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தலத்தில் வழிபடுபவர்களுக்கு பல்வேறு தோஷங்கள் மற்றும் பாவங்கள் நீங்கி முக்தி உண்டாகும் என்பது ஐதீகம்.
மேலும் தொழில், கல்வி, திருமண தடை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு நலம் பெற முடியும்.
விசேஷ பூஜைகள் பிரதோஷம் கிருத்திகை, அஷ்டமி, சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கி.பி 10 நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது இக்கோயிலை முதலாம் ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
*சித்தர் எழுப்பிய சிவன் மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்*
சிவன்மலை சுப்பிரமணியர் கோயில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோயில் ஆகும்.
காங்கயத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் சிவன்மலை மீது அமைந்துள்ளது.
சிவன்மலை மீதுள்ள கோயிலை நடைப்பயணமாக அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் மூலம் கோயிலுக்குச் செல்ல தனிப்பாதை உள்ளது.
கோயில் நிர்வாகத்தாரால் மலை மீதுள்ள கோயிலுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
தனியார் வாகனங்களிலும் செல்லலாம்.
சிவவாக்கியம் எனும் நூலை இயற்றிய சிவவாக்கியர் சித்தர் சிவன் மலையில் தங்கி தமது விருப்பதெய்வமான முருகப்பெருமானுக்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டார்.
அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், பெருமாளை நோக்கி தங்களின் மிகப்பெரிய பலனை உலகமக்களின் நலன் கருதி அவர்களுக்கும் அருள வேண்டும் என விரும்பினார்கள்.
அதாவது அரக்கர்கள் இருவரும் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி
பெருமானிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளி வரும் போது தங்களை தரிசிப்பவர்களும்,
தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும்,
அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார்.
அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.