நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்தி ஏற்ப தானங்களை செய்ய இயலும்.
மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது.
பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது - வறுமை தீண்டாது - இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். - வள்ளலார்.
பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன் ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன.
எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது. அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் வரும். ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.
ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா, கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
பொதுவாக தானங்களில் பல வகை உண்டு. அதே போல நாம் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் உண்டு. ஆனால் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை. "அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் தானம் செய்வது மிக நன்று".
#அரிசி தானம் பாவங்கள் தொலையும்.
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் விலக ஏழை, அல்லது அன்னதானம் நடைபெறும் இடங்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும்.
#வெள்ளி தானம் மனக்கவலை நீங்கும். பித்ருகள் ஆசிகிடைக்கும்
16 விதமான தானங்களும் அதன் பலன்களும்:
1. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும் 2. பூமி தானம் - இகபரசுகங்கள் 3. வஸ்த்ர தானம் (துணி) - சகல ரோக நிவர்த்தி 4. கோ தானம் (பசுமாடு) - பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.
5. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம் 6. குல தானம் (வெல்லம்) - குல அபிவிருத்தி - துக்கநிவர்த்தி 7. நெய் தானம் - வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம் 8. வெள்ளி தானம் - பித்ருகள் ஆசிகிடைக்கும் 9. தேன் தானம் - சுகம்தரும் இனியகுரல் 10. சொர்ண தானம் (தங்கம்) - கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும் 12. கம்பளி (போர்வை) தானம் - துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி 13. பழவகைகள் தானம் - புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் - சவுபாக்கியம் 15. சந்தனக்கட்டை தானம் - புகழ் 16. அன்னதானம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அத்தகைய தானங்கள் பல வகைப்படும். கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
• அன்னதானம் - விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.
• கோ தானம் - கோலோகத்தில் வாழ்வர்.
• பசு கன்றினும் சமயம் தானம் - கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
• குடை தானம் - 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார். ...
• தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
• வஸ்திர தானம் - 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
• ஆலயத்துக்கு யானை தானம் - இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.
• குதிரையும், பல்லக்கும் தானம் - இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.
• தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
எந்தெந்த பலனை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை தானம் செய்தால் அந்தந்த பலனை அடைவார்கள்.🙏🌹
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பாரத நாட்டின் பொக்கிஷமான மகாபாரதம் தர்மத்தையே நிலைக்களமாகக் கொண்டது. இதில் காணப்படும் தர்மங்கள் எண்ணிலடங்காதவை. மகாபாரதக் கதையில் வீரம், சூழ்ச்சி என எத்தனையோ இருந்தாலும், தர்மத்தின் அடிப்படையில்தான் வெற்றி கிட்டியிருக்கிறதே தவிர, வீரத்தினாலோ சூழ்ச்சியினாலோ மட்டுமல்ல.
வீரமும் சூழ்ச்சியும் தற்காலிக வெற்றியைத் தேடும் உபாயங்கள். ஆனால் நிலையான, அழிவில்லாத வெற்றிக்கு தர்மமே முற்றிலும் சாதனமாக இருந்தது.
🌹🌺" *நீ தூய்மை உள்ளவனாக இருந்தால், வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமம் என கூறிய வீரத்துறவி .. * 🌹🌺
🌹🌺சுவாமி விவேகானந்தர் ஒரு இளைஞர் எழுச்சி கூட்டம் ஒன்றில் அந்நாளில் நிலவிய தொண்டு மனப்பான்மை, கீழ்ப்படிதல் தன்னடக்கம் ஆகிய வீரனுக்கு உரிய பண்புகள் இன்று எங்கே போய்விட்டன?
🌺போருக்குச் செல்லும் வீரன் தன்னைத் தியாகம் செய்து கொள்கிறனேயன்றி, தனது நலத்தைக் கருதுவதில்லை. ஒருவன் மற்றவர்களுடைய இதயங்களின் மீதும் வாழ்க்கையின் மீதும் ஆணை செலுத்த வேண்டுமானால் முதலில் கட்டளைக்கு உட்பட்டு முன்னேறிச் சென்று தன் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.
*சூரிய பகவானுக்கு அருளிய ரவீஸ்வரர் திருத்தலம்; வடசென்னைக்கு பெருமை சேர்க்கும் தலம்!*
அருள்மிகு மரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் ஆலயம், வடசென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ளது.
1
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் பழமையானது. இக்கோயில் பல அதிசயங்களையும் புராணப் பின்னணியும் கொண்டது.
2
ஒரு முறை பிரம்மதேவரின் கோபத்திற்கு ஆளாகி, பூமியில் பிறந்த சூரிய பகவான். நாரதரின் ஆலோசனைப்படி இங்கு வந்து, வன்னி மரத்தடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, சிவபெருமானை வழிப்பட்டார், சூரிய பகவான்.
6. போக சயனம் 7. தர்ப்ப சயனம் 8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) 9. மாணிக்க சயனம்
பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன், தன் திரு
உருவத்தைப் பூவுலக மாந்தர்கள் அனைவரும் தரிசிக்க
வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டு, அர்ச்சா மூர்த்தியாகப்
பூவுலகில் பல திவ்யதேசங்களில் எழுந்தருளியிருக்கிறார்.