வர்க ரீதியாக பெரும்பான்மை தமிழ்சினிமா பார்வையாளர்கள் நடுத்தர,ஏழை குடும்பத்தை சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை திரையில் நிகழும் ஒரு நகர்புற எலைட் குடும்ப கதைக்குள் அந்தப் கனெக்ட் செய்ய வைக்க தமிழ்சினிமாவுக்கு என ஒரு பார்முலா இருந்தது.
அது ஏழையாகவோ/ நடுத்தர வர்கமாகவோ இருக்கும் நாயகனோ அல்லது வேறு முக்கிய கதாபாத்திரங்களோ வெளியில் இருந்து அந்த வீட்டில் நுழைவதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் எங்கள் வீட்டு பிள்ளை, ரஜினியின் பணக்காரன், மாப்பிள்ளை வரை பலத் திரைப்படங்கள் இந்த பார்முலாவை அடியொற்றியே வந்திருக்கும்.
இந்த வகைமையில், மணிரத்தினம் மற்றும் கெளதம் மேனன் முன் வைக்கும் எலைட் குடும்ப கதைகளுக்கு விதிவிலக்கு உண்டு. பெரும்பாலும் அவர்கள் எலைட் குடும்ப பின்னணியை மட்டும் வைத்துக்கொண்டு, அதில் வேறு கதைகளை சொல்வதால் அந்த விதிவிலக்கு நிகழ்ந்திருக்கிறது.
கிராமப்புற பின்னணியில் வந்த நாட்டாமைகள் மாதிரியான எலைட் கதைகளும் பார்வையாளர்களால் கனெக்ட் செய்து கொள்ளப்பட்டிருக்கின்றன. தெலுகு,இந்தியில் இந்த பாகுபாடு நிகழ்வதில்லை. இதுவரை வந்த அதிகப்படியான இந்திய எலைட் (குடும்ப) சினிமாக்கள் இந்த மொழிகளிலேயே அதிகமாக வந்திருக்கின்றன.
நினைவுக்கு தெரிந்து மேற்சொன்ன எந்த பார்முலாவும் இன்றி நகர்புற எலைட் குடும்ப கதையாக வந்த தமிழ் திரைப்படமாக #Varisu இருக்கின்றது. பார்வையாளர்களால் இது கனெட்க்ட் செய்து கொள்ளப்படுகிறதா? எனக்கேட்டால், விஜய் ஆக இருப்பதால் ஓரளவு முடிகிறது. ஆனால், முழுமையாக இல்லை என்பதும் உண்மை.
நிர்வாக ரீதியாக பணக்கார வீடும், அவர்களின் வியாபாரமும் சிதைந்து போயிருக்கும் நேரத்தில் அந்த குடும்பத்தின் கடைசி வாரிசு எப்படி இரண்டையும் மீட்டெடுக்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் தந்தைக்கும், கடைசி வாரிசுக்கும் ஏழு வருட பகை.
அவர் அந்த வீட்டில் இல்லாமல் தனியே வாழ்கிறார் என்பதையெல்லாம் ஒரே ஒரு பிளாஷ்பேக் காட்சியில் நமக்கு காட்டுகிறார்கள். பிற்பாடு, விஜய் அந்த வீட்டிற்குள் வருகையில், அவரது அம்மாவைத் தவிர மற்றவர்கள் அவரை கெஸ்ட்டாகவே பார்க்கிறார்கள். நமக்கும் கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கின்றது.
குடும்ப கதைதான் சொல்லப் போகிறோம் என்றால் அந்த குடும்பத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் தன்மைகளையும பார்வையாளர்களுக்கு கனெக்ட் செய்ய வேண்டும். இயக்குனர் விஜயை ஆடியன்ஸோடு (ரசிகர்களோடு) கனெக்ட் செய்து கொள்ள போட்ட உழைப்பை, மற்ற கதாபாத்திரங்களுக்கும் சேர்த்து போடத் தவறி இருக்கிறார்.
மொத்த குடும்ப நபர்களும் பார்வையாளர்களுக்கு அன்னியர்களாகவே இருக்கிறார்கள். சரி போகட்டும், அந்தக் குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள் அதை மீட்கும் நாயகனின் யுக்திகளாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா எனக்கேட்டால், 'நாயகன் செல்லுமிடமெல்லாம் ஜெயம்' என்பது போல,
விஜய் மொத்த சிக்கலையும் எந்தவித சிரமமும் இன்றி அசால்ட்டாக கடக்கிறார். சரி, செண்டிமெண்ட்டாவது இதில் சரியாக வந்திருக்கிறதா என்றால், விஜய் இரண்டு வசனங்களை பேசினாலே எல்லோரும் சட்டென திருந்தி வீடு திரும்புகிறார்கள்.
நடு நடுவே ராஷ்மிகாவை லவ் செய்கிறார். ரசிகர்களை குதுகலம் செய்ய அவ்வப்போது சேட்டை, குறும்புகளை செய்கிறார். இறுதியாக எல்லா சிக்கலையும் முடித்து 'குடும்பம் ரொம்ப முக்கியம் புவி' என ஒரு வசனத்தை போட்டு படத்தை சுபம் என்று முடிக்கிறார்கள்.
ஒருவழியாக நன்றிடா எனச்சொல்லி நாம் வெளியேறுகிறோம். இறுதியாக ரசிக கொண்டாங்களைத் தாண்டி #வாரிசு நமக்கு சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை என்பதை கனத்த மனதுடன் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டி இருக்கின்றது.
ஹவுசிங் போர்ட் மக்களை ரவுடிகளாக, போதைப் பொருட்கள் விற்பவர்களாக சித்தரித்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு மத்தியில், இந்த வம்சி பூமர் அவர்களை இண்டர்நேசனல் கிரைமான ஹியூமன் டிராபிக்கிங் லெவலுக்கு முன் நகர்த்தி இருக்கிறார்.
கோடிக்கணக்கான செலவில் உருவாக்கப்படும் பிரம்மாண்டமான சினிமாக்களுக்கு மத்தியில் "C/O கஞ்சர்பாலம், பலசா 1978, கலர்போட்டோ" மாதிரியான சின்னச்சின்ன எளிய படங்கள் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் அற்புதமானது. #Cinembandi யும் அவ்வகையைச் சார்ந்தது.
எதேச்சையாக கிடைத்த பொருள் ஒரு கைவிடப்பட்ட கிராமத்தின் கனவாக எப்படி மாறுகிறது எனும் எளிய கதை. கன்னடம்-தெலுகு பேசும் எல்லைப்புற கிராமமான கோலப்பள்ளி எனும் ஊரில் வருங்காலம், கிராமம் பற்றி நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு ஷேர்- ஆட்டோ ஓட்டுனர் கையில் ஒரு உயர்தரமான கேமிரா சிக்குகிறது.
டிவியில் தெலுங்குத் திரையுலகில் வசூலை குவிக்கும் சிறிய பட்ஜெட் படங்களைப் பற்றிய செய்தி துணுக்கு கேமிரா வைத்திருக்கும் ஓட்டுனருக்கு ஒரு சினிமா படம் எடுக்கும் நம்பிக்கையை உண்டாக்க, தன் கிராமத்தில் கல்யாணங்களுக்கு போட்டோ எடுக்கும் சகாவுடன் தன் சினிமா திட்டங்களைத் துவக்குகிறார்.
தலித்தின ஆண்களின் சுயமரியாதையை மீட்டெடுப்பதில் தலித் பெண்களுக்கு வரலாறுதொட்டே எப்பொழுதும் பெரும்பங்கு இருந்திருக்கிறது. சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து, பவ்யமாக கைகட்டி, கணவன் பின்னால் நிற்கும் பெண்களல்ல அவர்கள்.
எசிலிக்கு எசிலியாக, ராட்சசர்களுக்கு ராட்சசிகளாக, அன்புக்கு அன்பாக, முகத்துக்கு நேராக ஊடகை, காதலை, கூடலைக் கொட்டித்தரும் அசுரச்சிகள்.
கருத்த, கம்பீரமான தன் ஆண் இதர சமூக ஆண்களின் முன்பு அடிமையாய் தலைகுனிவதை அவர்கள் எப்பொழுதும் விரும்பியதில்லை.
பெரும்பான்மை கிராமிய சாதிக்கொடுமைகளிலிருந்து ஆண்களை நகரங்களுக்கு நகர்த்தி கல்வியில்,வேலையில், சமூகத்தில் ஆண்களை ஆளாக்குகிறவர்களாக அவர்களே இருக்கிறார்கள்.
சென்னையின் மேயராக தலைவர் @mkstalin இருந்த காலத்தில்தான் நகரத்தின் முக்கியமான 9 மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டன; மேம்பாலங்களுக்கு ஒதுக்கிய 95கோடியில் 30 சதவீதத்தை மிச்சம் செய்து கட்டி முடித்ததுதான் தலைவரின் நிர்வாகத் திறனுக்கு சான்று.
தலைவர் @mkstalin செய்து தந்த சென்னையின் அசாத்திய வளர்ச்சித்திட்டங்களைப் பார்த்து வியந்த வியந்த ஹட்கோ நிறுவனம் சென்னைக்கு 'தூய்மையான நகரம்' என்ற விருது வழங்கி சிறப்பித்தது வரலாறு.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவர் தாத்தா H.M .ஜெகநாதன் அவர்களின நிளைவு தினம்- ஜீலை 25.
தாத்தா HM.ஜெகநாதன், சென்னையில் 1894 ல் அக்டோபர் 25ம் நாள் முனுசாமி என்பவரவது மகனாக பிறந்தார்.
தந்தையார் பிரிட்டிஸ் இந்திய அரசின் ராணுவத்திற்கான கருவிகளைச் செய்யும் தோல் ஒப்பந்ததாராக இருந்தார். செல்வச் செழிப்பில் பிறந்ததால் ஜெகநாதன் கல்வி கற்று பட்டம் பெற்றார். ஆங்கில மொழிப்புலமை மிக்கவவராகவும், சிறந்த ஆளுமைப்பண்புள்ளவராகவும் வளர்ந்தார்.
.
கல்லூரி முடித்தவுடன், 1914ல் துவங்கப்பட்ட நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஒடுக்கப்பட்டமக்களின் விடுதலையின் பால் ஆர்வம் காரணமாக ராவ் சாகிப் எல்சி குருசாமி அவர்களுடன் இணைந்து சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்தை நிறுவி, அதன் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று களப்பணியாற்றினார்.
யார் பெரியார்? #Thread
--
சமீபத்திய பொள்ளாச்சி விவகாரத்தில் கூட பெண்களின் ஒழுக்கம் பற்றி கேள்வியெழுப்பிய சனாதன மதவாத ஆண்களை செருப்பால் அடித்தவர்தான் பெரியார்.
நவீனத்தின் வளர்ச்சியடைந்திருந்தாலும் சுயசாதி உணர்வு பேசி வலம் வரும் ஆப்பாயில் இளைஞர்களை செருப்பால் அடித்து சமத்துவம் போதிக்கும் கருத்தியலின் தந்தைதான் பெரியார்.
தமிழ், தமிழன் என்று பேசும் மேடைப் பொய்யர்களின் தம்பிகளுக்கும் சேர்த்து தமிழை எளிமையாக்கி மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தவர் பெரியார்.
ஹாய் தோழர்.. நேற்றும் இன்றும் கடினமான வேலைப்பளுவில் இருந்ததால் உடனடியாக விவாதத்திற்கு வர இயலவில்லை. அபயங்கரிடம் வாள் இருந்தும், வெட்டவில்லை என்பதில் ஆரம்பித்து, எனக்கு அருகில் இருக்கும் கலைகளின் "வெறுப்பை உமிழ்பவன்" பட்டம் தந்து...
என் கமல் மேலான விமர்சனத்திற்கு பதிலடியாக காலாவை பகுதிபகுதியாக போஸ்ட்மார்ட்டம் செய்வோம் எனச்சொல்லி "அன்பே சிவம் என் மனதுக்கு நெருக்கமான சினிமா கூட கிடையாது. அதன் பாதி எழுத்து ஏற்கெனவே வெற்றி பெற்ற படம். ஆனால், எங்கள் படைப்பு எவ்வளவு உயர்வு தெரியுமா? என்றால்,
நொண்டிக் காலாவின் உண்மையை சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. என்றவாறு எனக்கு மென்சனிட்டு கேள்வி எழுப்பியிருந்தீங்க. ஒரு ஊடகவியலாளராக பரந்துபட்ட பார்வையோடு ஒரு சர்ச்சையை அணுகாமல், சராசரி ட்விட்டாளர் மனநிலையில் நான் கமல் மேல் சாதிய வன்மம் கொண்டவன்