39 திவ்விய தேசங்களின் அருள் சிறப்படையும் போற்றி பாடியுள்ளார்
அவர் அவதரிப்பதற்கு முன்பு வரை, ஆளில்லாமல் பரமபதவாசல் மூடியிருந்தது. ஆழ்வார் தமிழில் பாடிய பிறகு மக்கள் ஞானம் பெற்று அவரோடு அவருடைய பாடல்களைப் பாடி நற்கதி அடைந்தார்கள்.
இதைக் காட்டுவதற்காக இந்த நாளில் அவர் பாடிய திருவாய்மொழி கேட்டுக்கொண்டே பரமபதத்துக்கு அழைத்துச் சென்றார் பெருமாள்.
வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் அடிப்படையில் ஆழ்வார் மோட்ச உற்சவம் எல்லாக் கோயில்களிலும் நடைபெறும்.
அவருடைய விக்கிரகத்தை எடுத்து சென்று பெருமாளுடைய திருவடியில் வைத்து துளசியால் மூடுவார்கள்.
அவருக்கு மோட்சம் கிடைத்து விட்டதாக பொருள்.
அதற்கு பிறகு ‘‘ஆழ்வாரை எங்களுக்குத் தந்தருள வேண்டும்’’ என்று இறைவனிடம் பிரார்த்திக்க துளசியை அகற்றிவிட்டு அவருக்கு மாலை பரிவட்டம் எல்லாம் தந்து,
திரும்ப அவரை அவருடைய ஆஸ்தானத்தில் கொண்டு சென்று சேர்ப்பார்கள்.
இது அற்புதமான உற்சவம்.
ஆழ்வார் எல்லோரையும் உய்வடையச் செய்தார்.
ஆழ்வார் பாசுரம் பாடிய பிறகு, நரகத்தில் யாருக்கும் இடமில்லை.
எல்லோருக்கும் பரமபதத்தில் தான் இடம் இருந்தது என்று சொல்லும் பாடல் இது.
பொலிக பொலிக பொலிக! போயிற்று வல் உயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்.
காமத்தை கை விடுங்கள் அப்போது தான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள்.
கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவறுதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது.
அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன
மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது.
நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுவதால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்கூடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம்.
தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.
அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது
காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும்,
உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும்
இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார்.