ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தில் உள்ள ஒரு அருட்பாடல் காயத்திரி மந்திரம் ஆகும்.
பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார்.
அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.
காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள்.
5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.
இந்த மந்திரத்தை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும்.
24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம்.
இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்.
சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும்.
காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும்.
மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி.
வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை.
காயத்திரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு காயத்திரி மந்திரம் என்ற பெயர் ஆயிற்று.
காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் நதிகளில் நான் கங்கையாகவும் மலைகளில் நான் விந்திய மலையாகவும்
மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுகையில் பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும் காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும்.
இது மிக சிறிய மந்திரம் தான்.
ஆனால் மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு ரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் உயர் அறிவு சக்தியினை அளித்து அறியாமையை நீக்க வேண்டும் என்பதாகும்.
இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.
இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம்.
நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.
மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.
7 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது மூளை செயல் திறனைக் கூட்டும்.
உடல் வலுவினைக் கூட்டும்.
உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.
11 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பது நரம்பு மண்டலத்திலும் சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.
22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பது ஒருவரின் அழிவுப்பூர்வ ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும்.
31 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.
62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது மூளையின் க்ரே பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.
150 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிப்பது உயர்நிலையினை மனம் மற்றும் மூளை அடைகின்றது.
நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாக இருக்கும்.
மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பற்றி இதுவரை விஞ்ஞான ஆய்வுகள் செய்யப்படவில்லை.
என்றாலும் அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
பொங்கலன்று வணங்க வேண்டிய ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோவில் :
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து ஞாயிறு என்னும் கிராமம் உள்ளது.
இது சூரியன் வழிப்பட்ட தலம் என்பதால் இந்த ஊர் ஞாயிறு என்று அழைக்கப்பட்டது.
பழைமை வாய்ந்த கோவிலில் ஸ்ரீ சொர்ணம்பிகை ஸமேத ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் சுவாமி
என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார்.
கிரக தோஷம் நீங்க வணங்க வேண்டிய புஷ்பரதேஸ்வரர்.
இவரை பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்கு உள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் வந்து சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி
பக்தர்கள் வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.
தாமரை மலரில் ஐக்கியமான ஜோதி
தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார்.
நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள்.
காமத்தை கை விடுங்கள் அப்போது தான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள்.
கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவறுதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது.
அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன
மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது.
நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுவதால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்கூடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம்.