ஒரு போகி பண்டிகையன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு காஞ்சிப் பெரியவர் வந்தார்.
அங்கிருந்த சாஸ்திரியிடம், “பொங்கலன்று அம்பாளை சாகம்பரியாக அலங்காரம் (காய்கறிகளால் அலங்கரித்தல்) செய்யுங்கள்.
இந்த வடிவில் அம்பாளை தரிசித்தால் பாவம் தீரும்.
புத்திர பாக்கியம், ஆரோக்கியம் உண்டாகும்.
அம்பாளை மட்டுமின்றி கோவிலின் எல்லா இடங்களிலும் காய்கறி, பழங்களால் தோரணம் கட்டுங்கள்” என்றார்.
“இதற்கு இரண்டு மூன்று லோடு காய்கறியை தருவிக்க வேண்டுமே! ஒரே நாளில் அது சாத்தியமில்லையே!” என்று நினைத்த சாஸ்திரி,
அதை அடுத்த ஆண்டு நடத்தலாமே!” என்றார் பணிவுடன்.
பெரியவர் அவரிடம்,
“அம்பாளிடம் விருப்பத்தைச் சொல்லிட்டேன்.
அவள் பாத்துக்குவா,”
என்று சொல்லி விட்டார்.
அன்று மாலை சென்னை கொத்தவால் சாவடியில் (கோயம்பேடு) இருந்து மூன்று லாரிகள் கோவில் முன் வந்து நின்றது.
பணியாளர்கள் விபரம் கேட்ட போது, சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏற்பாட்டின் மூலம் கோவில் முழுவதும் காய்கறி அலங்காரம் செய்ய சரக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
உடனே பெரியவருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
பொங்கலன்று கோவிலுக்கு வந்த பெரியவர் எங்கும் காய்கறி, பழத் தோரணம் இருப்பது கண்டு மகிழ்ந்தார்.
பொங்கலன்று வணங்க வேண்டிய ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் கோவில் :
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து ஞாயிறு என்னும் கிராமம் உள்ளது.
இது சூரியன் வழிப்பட்ட தலம் என்பதால் இந்த ஊர் ஞாயிறு என்று அழைக்கப்பட்டது.
பழைமை வாய்ந்த கோவிலில் ஸ்ரீ சொர்ணம்பிகை ஸமேத ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் சுவாமி
என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார்.
கிரக தோஷம் நீங்க வணங்க வேண்டிய புஷ்பரதேஸ்வரர்.
இவரை பிற கிரகங்களால் தோஷ பாதிப்பிற்கு உள்ளானவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் வந்து சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, நெய் மற்றும் கோதுமையில் விளக்கேற்றி
பக்தர்கள் வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.
தாமரை மலரில் ஐக்கியமான ஜோதி
தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகள் சமுக்ஞாவை சூரியன் மணந்து கொண்டார்.
நாளுக்கு நாள் சூரியனின் வெப்பத்தன்மை அதிகமாகவே சமுக்ஞா, தன் நிழலை உருவமாக்கி கணவனிடம் விட்டுச் சென்றுவிட்டாள்.
காமத்தை கை விடுங்கள் அப்போது தான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள்.
கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவறுதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது.
அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன
மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது.
நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுவதால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்கூடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம்.